பிரேமம் பட மேரியின் கலக்கல் போட்டோஷூட்.!
பிரமேம் படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரனின் கலக்கல் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
மலையாள சினிமாவில் ‘பிரமேம்’ என்ற பிளாக் பஸ்டர் ஹிட் படத்துடன் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதிலிருந்து ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் அனுபமா. அதனையடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘தள்ளிப்போகாதே’ எனும் படத்தில் நடித்துள்ளார்.
தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் பிரபலங்கள் புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலையில் கேப் வைத்து கொண்டு கியூட்டான சிரிப்புடன் கூடிய அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
View this post on Instagram