அடி தூள்…அஜித்துடன் இணையும் சிறுத்தை சிவா.?

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. இந்த படம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்துவருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் ஹெச்.வினோத் இயக்குகிறார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து அஜித்தின் 62-வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயங்குவதாகவும், படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், அஜித்தின் 63- வது படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாகவும், படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அஜித் -சிவா கூட்டணியில் வெளியான வீரம்,வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. இதனால் இந்த கூட்டணி மீண்டும் இணைந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். பொறுத்திருந்து இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியகுமா என்பதை பார்ப்போம்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : தைப்பூச திருவிழா முதல்.., பல்வேறு அரசியல் நகர்வுகள் வரை…
February 11, 2025
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025
காசா பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் இது தான் நடக்கும்…ஹமாஸ்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!
February 11, 2025
“அனைவருக்கும் மகிழ்ச்சியான, தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்” – பிரதமர் மோடி பதிவு.!
February 11, 2025