இது தான் உங்கள் சிறந்த படைப்பு…பா.ரஞ்சித்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்.!

Default Image

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு நல்ல படங்கள் வெளியானால் அதனை பார்த்துவிட்டு உடனே பாராட்டிவிடுவார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான டான், ராக்கெட்ரி, இரவின் நிழல் உள்ளிட்ட படங்களை பார்த்து விட்டு ரஜினி பாராட்டி இருந்தார்.

rajinikanth

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்தை பார்த்துவிட்டு ரஜினி பா.ரஞ்சித்தையும் படத்தையும் பாராட்டியுள்ளார். ஏற்கனவே பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி காலா என்ற படத்தில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்களேன்- கோப்ரா கொடுத்த தாக்கத்தால் இயக்குனருக்கு பை சொன்ன கார்த்தி.!?

natchathiram nagargirathu rajinikanth

இந்த நிலையில், துஷாரா விஜயன், காளிதாஸ்ஜெயராம், கலையரசன், ஹரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த “நட்சத்திரம் நகர்கிறது”  படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு இயக்குனர் பா.ரஞ்சித்தை நேரில் அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதனை பா.ரஞ்சிதே தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

natchathiram nagargirathu rajinikanth

படத்தை பார்த்து விட்டு நடிகர் ரஜினி பா.ரஞ்சித்திடம் ” உங்கள் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் சிறந்த படைப்பு நட்சத்திரம் நகர்கிறது படம்தான். நடிகர்கள், ஒளிப்பதிவு, இசை , கலை இயக்கம் என அனைத்தும் மிகச்சிறப்பு . எனது ஆரம்பகால நாடக வாழ்க்கையையும் எனக்கு ஞாபகப்படுத்தியது இந்தபடம். படகுலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என புகழ்ந்து தள்ளியுள்ளர் ரஜினிகாந்த்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்