லாராவை பின்னுக்குத்தள்ளி விராத் கோலி புதிய சாதனை!

By

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராத் கோலி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.இந்நிலையில் தற்போது அவர் புதிதாக ஒரு சாதனையை படைத்துள்ளார்.
Related image
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சோபிக்கும் வீரர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியிட்டு வருகிறது. அதன்படி ஆல்-டைம் தரவரிசையில் கிடுகிடுவென உயர்ந்து வருபவர் விராட் கோலி, மொத்தம் 31 பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ள இந்த தரவரிசையில் கோலி 912 முள்ளிகள் பெற்று 26வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்னதாக 911 புள்ளிகளுடன் 26வது இடத்தில் இருந்த மேற்கிந்திய வீரர் லாரா தற்போது 27வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
Image result for virat kohli &brain lara
மொத்தமுள்ள 31 பேட்ஸ்மேன்கள் பட்டியலில், ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் 961 புள்ளிகளுடன் டான் பிராட்மேன் முதலிடத்தில் உள்ளார். அதற்கு அடுத்தப்படியாக ஆஸ்திரேலிய அணியின் தற்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 947 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார். 945 புள்ளிகள் பெற்று 3வது இடத்தில் இங்கிலாந்து அணியின் எல். ஹட்டன் உள்ளார்.
916 பெற்று 23வது இடத்தில் இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரை முந்த விராட் கோலிக்கு, இன்னும் 5 புள்ளிகள் தேவைப்படுகிறது. அடுத்து நடக்கவிருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் இதனை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆல்-டைம் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Dinasuvadu Media @2023