Cinema
பிரமாண்டமாக நடைபெறும் நடிகை ராதா மகள் கார்த்திகா திருமணம்!
80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதா.
நடிகை ராதாவின் மகள் தான் கார்த்திகா. இவர் தமிழ் சினிமாவில் ஜீவாவுக்கு ஜோடியாக கோ படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர்.
கோ திரைப்படத்தை தொடர்ந்து நடிகை கார்த்திகா அடுத்ததாக ஆர்யாவுக்கு ஜோடியாக ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ எனும் படத்திலும் நடித்திருந்தார்.
பிறகு பட வாய்ப்புகள் பெரிதளவில் வராத காரணத்தால் சினிமாவை விட்டு விலகி தற்போது திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகவிருக்கிறார்.
கடந்த அக்டோபர் மாதம் கார்த்திகாவுக்கு எளிமையான முறையில் நிச்சியதார்த்தம் நடைபெற்றது.
இதனையடுத்து, கார்த்திகாவிற்கு நவம்பர் 19 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் திருமணம் நடைபெறவுள்ளது.
திருமணமானது, திருவனந்தபுரத்தில் உள்ள ராதாவுடைய திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
திருமணம் முடிந்த பிறகு, கோவளம் கடகரையில் உள்ள உதயசந்திரா ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
கார்த்திகாவுக்கு திருமணம் என்ற செய்தி வெளியாகி இருக்கும் நிலையில், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க தொடங்கிவிட்டனர்.
CINEMA
அறுவடைக்கு தயாரான சாக்ஷி…அழகு கொஞ்சும் நெட்டிசன்கள்.!
Read More