ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்?
சினிமாவில் நுழைந்த குறுகிய காலகட்டத்திலே பிரபலமான நடிகைகள் சிலர் தான் இருக்கிறார்கள். அவர்களில் நடிகை அனுஷ்காவும் ஒருவர்.
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ஒரு காலத்தில் தொடர்ச்சியாக படங்களில் நடித்து கொண்டு வந்தார்.
அதன்பிறகு இஞ்சு இடுப்பழகி படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை சற்று அதிகாரிக்க செய்த காரணத்தால் அவருடைய சினிமா வாழ்கை பாதிப்படைந்தது என்றே சொல்லலாம்.
உடல் எடை அதிகரித்ததன் காரணமாகவே அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது என்றே சொல்லலாம்.
பிறகு தான் அவருக்கு பாகுபலி படத்தில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது.பாகுபலி படத்தில் நடிக்கும்போதே அனுஷ்காவிற்கு உடல் எடை அதிகரித்து தான் இருந்தது.
சிஜி வேலைகள் மூலம் தான் அனுஷ்காவிற்கு உடல் எடை கம்மியாக இருப்பது போல காட்டப்பட்டு இருந்தது.
அனுஷ்கா நடித்த ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி’ திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில், இத்தனை வருடங்கள் கழித்து வொர்க்அவுட்கள் செய்து வந்த அவர் தற்போது ஸ்லிம்மாக இருக்கிறார்.
அனுஷ்கா தற்போது, ‘கத்தனார் – தி வைல்டு சோர்சரர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படத்தினை ரோஜபின் தாமஸ் இயக்குகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புக்காக வெளிய வந்தபோது தான் அனுஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
புகைப்படங்களை பார்த்த பலரும் ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல என கூறி வருகிறார்கள்.
கண்ணுக்குள்ள நிக்குது! புதுப்பொண்ணு ரகுல் ப்ரீத் சிங்கை மிரள வைத்த புது திரைப்படம்? (Copy)