Cinema
அத மட்டும் விடவே மாட்டேன்! நடிகை ரித்திகா சிங் பிடிவாதம்!
நடிகை ரித்திகா சிங் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே பாக்சிங் போட்டியாளர்.
இதன் காரணமாகவே அவருக்கு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தில் பாக்சிங் விளையாடும் பெண்மணி கதாபாத்திரம் தான் கிடைத்திருந்தது.
அந்த கதாபாத்திரத்தில் எந்த அளவிற்கு அருமையாக நடிக்க முடியுமோ அதே அளவிற்கு அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
அந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமா மற்றும் மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் தொடர்ச்சியாக படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ரித்திகா சிங் விளையாட்டை மட்டும் விடவே மாட்டேன் என்று கூறியுள்ளார்.
என் வாழ்க்கையில் சினிமாவில் நான் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறேனோ அதேபோலத்தான் விளையாட்டிலும் ஆர்வம் காட்டுகிறேன்.
என் வாழ்க்கையில் சினிமாக்கும் விளையாட்டுக்கும் ஒரேஅளவில் தான் முக்கியத்துவத்தை கொடுக்கிறேன்.
என்னை பொருத்தவரை பெண்கள் பலருமே விளையாட்டுக்கு வர வேண்டும் .இது உங்களை உடல் அளவிலும் மனதளங்களும் வலிமையானதாக மாற்றும்.
எனவே தயவு செய்து விளையாடலாம் என்ன ஆனாலும் சரி நான் விளையாட்டை மட்டும் விடவே மாட்டேன்” எனவும் ரித்திகா சிங் கூறியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு விளையாட்டின் மீது இவ்வளவு பிரியம்மா? என்பது போல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
சவாரி தான் அன்பு…அரைகுறை உடையில் கிக் ஏத்தும் ஐஸ்வர்யா தத்தா!
Read More