Technology
குறைந்த விலையில் தரமான ‘Redmi Buds 5’ அறிமுகம்
சியோமி நிறுவனம் ரெட்மி பட்ஸ் 5 (Redmi Buds 5) இந்தியாவில் அதன் (TWS) இயர்பட்ஸை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
38 மணிநேர பேட்டரி ஆயுளுடன், வேகமாக சார்ஜ் செய்யும் வசதியுடன் ரூ.2,999க்கு விற்கப்பட இருக்கிறது.
இது 3 வண்ணங்களில் கிடைக்கிறது, அதாவது (Fusion Purple) ஊதா, (Fusion Black) கருப்பு மற்றும் (Fusion White) வெள்ளை ஆகியவை அடங்கும்.
வெறும் 5 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் 2 மணிநேரம் வரை விளையாட நேரமும், 10 நிமிடங்களுக்கு 4 மணிநேரம் வரை தாக்குப்பிடிக்கும்.
இந்த இயர்பட்ஸ்கள் 46dB (Active Noise Cancellation) இரைச்சல்-தடுக்கும் திறன் மூலம், 99.5% வரை சத்தம் ரத்து செய்யப்படுவதை உறுதி செய்கிறது.
6m/s காற்றின் சத்தத்தைத் தாங்கக்கூடிய வகையில் இரட்டை- மைக் AI அல்காரிதத்தைப் பயன்படுத்துகிறது.
1.6மீ டைனமிக் காயில் மற்றும் 12.4மிமீ டைனமிக் டைட்டானியம்-கோடட் டிரைவர்களுடன் வருவதால் தெளிவான ஆடியோவை அனுபவிக்க முடியும்.
மேலும், கூகுள் மற்றும் மற்ற சதானங்களில் எளிதாக கனெக்ட் செய்வதற்கு புளூடூத் 5.3 இணைப்பை கொண்டுள்ளது.
UPI மூலம் தவறான எண்ணிற்கு பணம் அனுப்பிட்டிங்களா? திரும்ப பெற என்ன செய்யலாம்?
Learn more