உலக அளவில் மிக பிரபலமான கிரிக்கெட் தொடராக IPL 2008 தொடங்கப்பட்டு இதுவரை 16 சீசன்களை கடந்துள்ளது.
அதில் 14 சீசன்களில் விளையாடி 12 முறை பிளே ஆஃப் சுற்று, 5 முறை சாம்பியன் என ரசிகர்களின் மிக விருப்பமான அணியாக விளங்குகிறது தோனி தலைமையிலான CSK அணி.
இந்த CSK அணியின் புதிய ஸ்பான்சராக அண்மையில் Etihad Airways நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதற்கான புதிய CSK ஜெர்சியும் அண்மையில் வெளியிடப்பட்டது.
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய விளம்பர தூதராக நடிகை கத்ரினா கைப் நியமிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
முன்னதாக கத்ரினா கைஃப் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் விளம்பர தூதராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஹ்ரித்திக் ரோஷன், அக்சய் குமார், தீபிகா படுகோனே உள்ளிட்ட முக்கிய பாலிவுட் பிரபலங்கள் மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட அணிகளுக்கு விளம்பர தூதராக இருந்துள்ளனர்.
சென்னை அணிக்கு M.S.தோனி விளம்பர தூதராக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல் தங்கம் வென்றார் இந்திய மல்யுத்த வீரர் அமன் செஹ்ராவத்.!