உங்க கிட்னியை புதுசா வச்சுக்கணுமா? அப்ப இந்த பதிவை படிங்க..!

Lifestyle

நம் உடலில் பெரும்பாலான கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்வது சிறுநீரகம் தான். இது பழுதாகிவிட்டால், உடல் முழுவதும் கழிவுகள் தேங்கும்.

சிறுநீரக பிரச்சனை சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு ஏற்படும்.

இந்நோய் வராமல் தடுக்க சிறுநீரகத்தை பலப்படுத்தக் கூடிய உணவுகளை பற்றி பார்ப்போம்.

தினமும் ஒரு பள்ளு  பூண்டை பச்சையாக சாப்பிட்டால் கெட்ட கொழுப்பை கரைத்து, சிறுநீரகக் குழாயில் ஏற்படும் தொற்றை குணப்படுத்தும்.

பூண்டு :

கொத்தமல்லி இலையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஒரு டம்ளர் வீதம் வாரம் 2 முறை குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள டாக்சின்களை  வெளியேற்றி கிட்னி ஆரோக்கியமாக இருக்கும்.

கொத்தமல்லி இலை :

திராட்சையில் உள்ள விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, மாரடைப்பை தடுக்கும், சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதையும் தடுக்கும்.

திராட்சை :

இஞ்சிலுள்ள ஆன்டி ஆக்சிடென்ட் சிறுநீர் செயல்பாட்டிற்கு உதவுவதோடு ரத்தம் (ம) சிறுநீரகத்தை சுத்திகரிக்கிறது, நல்ல ஜீரண சக்தியையும் கொடுக்கும்.

இஞ்சி :

முட்டைகோஸில் உள்ள வளமான ஊட்டச்சத்துக்கள் சிறுநீரக ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவாகும்.

முட்டைகோஸ் :

இதில் உள்ள பைட்டிக் ஆசிட் (ம) போலிக் ஆசிட் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும். விட்டமின் கே (ம) விட்டமின் பி6, நார்ச்சத்து போன்றவைகளும் உள்ளது, இது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும்.

மீன்களில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் அதிகம் உள்ளதால் சிறுநீரக நோய் வராமல் பாதுகாக்கும்.

மீன்கள் :

சின்ன வெங்காயத்தை அதிக அளவு நம் உணவில் எடுத்துக் கொண்டால் சிறுநீரக கற்கள் வருவதை தடுத்து சிறுநீரகத்தை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும்.

வெங்காயம் :

உணவில் உப்பு குறைவாகவும் மற்றும் ஆக்சிலேட் (தக்காளி) நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள் :

மண்ணிற்கு கீழ் விளையும் கீரை வகைகளை அதிகம் எடுத்து கொள்ள கூடாது. ,அதற்கு பதில் கொடிவகை காய்கறிகளான அவரைக்காய் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம்

ஆகவே இந்த உணவு முறைகளை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரக கோளாறு ஏற்படாமல் தப்பிக்கலாம்.

ஐஸ்கிரீம் பிரியர்களே..! ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க….!