“பாம்பு கடித்ததால் பாம்பையே கடித்து துப்பிய நபர்” – குடிபோதையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

குடிபோதையில் இருந்த ஒருவர் பாம்பை கடித்து துப்பிய சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் எட்டா மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது அவர் அருகே ஒரு பாம்பு வந்து அவரை கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் பாம்பை பிடித்து அதை 3 துண்டுகளாக கடித்து துப்பியுள்ளார். இதை அடுத்து அந்த நபர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மருத்துவர்கள் கூறிய போது, வழக்கமாக பாம்பு கடித்ததாக தான் மருத்துவமனைக்கு வருவார்கள் ஆனால், இந்த நபரோ பாம்பை கடித்து விட்டதாக கூறி மருத்துவமனையில் வந்து சேர்ந்தார். அவர்க்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025