சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில் இன்னும் சில பிரச்சினைகளால் முடியாமல் உள்ளது. 60 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில், கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்து. அதன்பிறகு, மீண்டும் நிதி திரட்டப்பட்டு கட்டிடத்திற்கான வேலைகள் மும்மரமாக போய்க்கொண்டு இருக்கிறது. கடந்த மாதம் 26-ம் தேதி இந்தப் பணிகளை விஷால், கார்த்தி இருவரும் நேரில் பார்வையிட்டனர். மேலும், விநாயகர் கோவிலில் பூசை செய்து வழிபாடும் செய்தனர். […]
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி. தற்போது நடப்பு ஐபிஎல் சீசனில் பாதி நிறைவுற்ற நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் அணி, விராட் கோலியுடனான ஒரு கலந்துரையாடல் வீடீயோவை பதிவிட்டுள்ளது. அதில், விராட் கோலியிடம் நீங்கள் அதிகமாக தற்போது விரும்பி கேட்கும் பாடல் எதுவென்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கோலி, தனது மொபைல் போனில் உள்ள மியூசிக் பிளேயரை காண்பித்தார். அதில் […]
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா ரசிகர்கள் நேரில் திரையரங்குகளுக்கு சென்று பட்டாசு வெடித்து ஆடல் பாடலுடன் கொண்டாடி வருகிறார்கள். படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய எக்ஸ் வலைத்தள (ட்வீட்டர்) பக்கத்தில் விமர்சனங்களை பேசி வருகிறார்கள். எனவே, படம் குறித்து நெட்டிசன்கள் கூறியுள்ள விமர்சனத்தை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். படத்தை பார்த்த ஒருவர் ” ரெட்ரோ திரைப்படம் முதல் சில […]
சென்னை : நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ‘ ரெட்ரோ ‘ படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம், காதல், ஆக்ஷன் மற்றும் கேங்ஸ்டர் கதைக்களத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டைக் கொண்டாட சூர்யாவின் ரசிகர்கள் திரையரங்குகளில் ஆட்டம் பாட்டத்துடன் சூர்யா ரசிகைகள் கொண்டாடினர். மறுபுறம் படத்தை ரசிக்கும் ரசிகர்கள், […]
சென்னை : சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று ரெட்ரோ திரைப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்பட ரிலீசை முன்னிட்டு சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் 10 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய லோகேஷ், 10 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குகிறார்கள். இது நல்ல விஷயம். இதில் எனது […]
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் மே 1, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படம் நாளை மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ள நிலையில், படத்தை கொண்டாட சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்னனர். இந்த படம் ஒரு காதல், ஆக்ஷன், டிராமா கலந்த திரைப்படமாக உருவாகியுள்ளது. Stone Bench Creations மற்றும் 2D Entertainment நிறுவனங்கள் தயாரித்துள்ள […]
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட பாதி கட்டம் முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக ரஜினி ஜெயிலர் 2 படத்தில் பிசியாக இருந்து வருகிறார். இதில் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 -ஆம் தேதி வெளியாகம் என அறிவிக்கப்பட்டு விட்டது. விரைவில் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படங்களில் பிசியாக இருக்கும் ரஜினிகாந்த் சமீபத்தில் சென்னையில் […]
சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்றுக்கொண்டு நேற்று அஜித், குடும்பத்துடன் சென்னை திரும்பினார். பத்ம பூஷன் விருது வென்ற அஜித்திற்கு விமானத்திலேயே அங்குள்ளவர்கள் கேக் வெட்டி சிறிய பாராட்டு விழா நடத்தினார். அதனை அடுத்து சென்னை விமான நிலையம் வந்த […]
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு 2, DD ரிட்டர்ன்ஸ் படங்களில் நடித்தார். அந்த படமும் ஹிட்டாகி விடவே, தற்போது அதேபாணியில் DD Next Level எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படமும் முந்தைய படங்களை போலே காமெடி மற்றும் திரில்லர் வகையை சார்ந்து எடுக்கப்பட்டுள்ளது. தங்கள் வழக்கமான காமெடி கூட்டணியான மொட்டை ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன், லொள்ளு சபா ஜீவா ஆகியோருடன் இந்த […]
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக கொல்கத்தா காவல் ஆணையர் மனோஜ் வர்மா தகவல் தெரிவித்துள்ளார். மேலும், 13 பேர் காயமடைந்தனர், தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்த 14 பேரில் மூன்று பேர் தமிழகத்தின் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல் […]
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்பது பற்றி விவரம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் அஜித்குமார் உட்பட 19 பேர் பத்மபூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு விருதும் நேற்று டெல்லியில் வைத்து வழங்கப்பட்டது. வழக்கமாக எந்த விருது வழங்கும் விழாவிற்கும் வருகை தராத அஜித்குமார் இந்த விருதை வாங்கிக்கொள்வதற்கு நேற்று காலை தனது குடும்பத்துடன் டெல்லிக்கு வருகை தந்திருந்தார். வருகை தந்த அவருக்கு […]
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்து உள்ளது. நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் பதம்பூஷன் விருது பெற்றார் நடிகர் அஜித்குமார். அதன் பிறகு ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பஹல்காம் தாக்குதல் குறித்த தனது வருத்தத்தை பதிவு செய்தார். அவர் கூறுகையில்,”பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன், […]
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அஜித்குமார் உள்ளிட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டது. இதையடுத்து பத்திரிகையாளர் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அஜித் குமார், ” பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தான் தனது இதயம் இருப்பதாக அஜித் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என […]
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025) விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்பது பற்றி விவரம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் அஜித்குமார் உட்பட 19 பேர் பத்மபூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர் தவிர, நந்தமூரி பாலகிருஷ்ணா, ஆகியோருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. பத்மபூஷன் விருதுகளை […]
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும் மே 1-ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே, படத்தின் டிரைலர் வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எனவே, படத்தினை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துள்ளனர். படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று […]
டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில், இந்த விருதுகளை வழங்கவுள்ளார். இன்று நடைபெறவுள்ள அந்த விழாவில் நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது. பத்மபூஷன் விருதை பெற, குடும்பத்தோடு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார் நடிகர் அஜித்குமார். இதற்காக, இன்று காலை சென்னை விமானயத்திற்கு குடும்பத்துடன் வருகை தந்த அஜித்தின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் […]
கேரளா : சமீபத்தில் ஹிட்டான ‘ஆலப்புழா ஜிம்கானா’, ‘தள்ளுமாலா’ படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ளனர். கொச்சியில் நடைபெற்ற சோதனையில், 1.6 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது, மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. கேரள கலால் துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு நடத்திய சோதனையில், பிரபல மலையாள திரைப்பட இயக்குநர்கள் காலித் ரஹ்மான் மற்றும் அஷ்ரப் ஹம்சா ஆகியோர் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்தனர். புதிய திரைப்படம் […]
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற ‘வீர ராஜா வீர’ பாடலின் இசையமைப்பை மீறியதற்காக தாக்கல் செய்யப்பட்ட பதிப்புரிமை மீறல் வழக்கில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் மீது டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது . 2023 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய பாரம்பரிய பாடகர் ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகர், தனது தந்தை […]
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார் ரேஸிங் அணி, 24H துபாய் 2025-ல் மூன்றாம் இடத்தையும், 12H முகெல்லோ 2025-ல் மூன்றாம் இடத்தையும் பெற்று அசத்தியது. அதனை தொடர்ந்து, SRO மோட்டார்ஸ்போர்ட்ஸ் குழுமத்தால் நடத்தப்படும் GT4 ஐரோப்பிய தொடர் சாம்பியன்ஷிப் போட்டியிலும் அஜித்குமார் ரேஸிங் அணி பங்கேற்றது. இதில், உலகப்புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பா-பிரான்கோர்சாம்ப்ஸ் மைதானத்தில் ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற்ற GT4 […]
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது, ரஜினிகாந்த் கேரளாவில் இருக்கிறார். அங்கு படத்தின் இரண்டாவது ஷெட்யூலுக்கான படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். அட்டப்பாடியில் தனது காரில் இருந்து ரசிகர்களை வாழ்த்தும் ஒரு சமீபத்திய வைரல் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அங்கு கூடிய ரசிகர்கள், ‘தலைவா.. தெய்வமே’ என கோஷம் எழுப்பி அவரை வரவேற்றனர். இதில் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் செய்த செயல்தான் படுவைரலாகி […]