டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர் கேக்கை எடுத்துச் சென்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது, பத்திரிக்கையாளர்கள் அவரிடம், கேக் எதற்கு, யாருக்கு? கொண்டாட்டமா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் எதற்காக கேக்கை உள்ளே எடுத்துச் சென்றார் என்பது குறித்து எதுவும் கூறவில்லை. முன்னதாக, தூதரகத்திற்கு கொடுக்கப்பட்டு இருந்த பாதுகாப்பை இந்திய அரசு வாபஸ் பெற்றது. இதனிடையே, இன்று […]
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டார். நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது என்பிடிஎஸ் பிரிவு 27,29ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் இன்று கைது செய்யப்பட்டு, பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக கொச்சி நகர வடக்கு காவல்துறை அதிகாரிகளால் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மெடிக்கல் […]
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில், எர்ணாகுளத்தில் உள்ள விடுதியில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசார் ரெய்டுக்குச் சென்ற போது, அங்கிருந்து அவர் தப்பி ஓடினார். போதைப் பொருள் குறித்த சோதனையின் போது தப்பி ஓடிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து காவல்துறை சார்பில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இன்று விசாரித்த நிலையில், குற்றம் […]
கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அந்த வீடியோவில் குற்றவாளியாக கருதப்படும் அந்த நபர் தனது துணியை போலீசார் கிழுத்துவிட்டதால் புது துணியும் கேட்கிறார். வீடியோவில் பேசிய அவர் ” என்னுடைய டிரஸை கிழுத்துவிட்டிர்கள். எனக்கு புது துணி வாங்கிக்கொண்டு வாருங்கள். உங்களுடைய டிசர்ட் எனக்கு பத்தாது தான் எனக்கு அதனால் புது துணி வேண்டும். […]
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகவும் பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் 27ம் தேதி அன்று, பணி முடிந்து முத்தையன்பட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றிருந்தார். அங்கு, கஞ்சா விற்பனை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளிவந்திருந்த பொன்வண்ணன் மற்றும் அவரது நண்பர்களுக்கு, காவலர் முத்துக்குமார் அறிவுரை கூறியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் […]
கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த ஸ்டீஃபன் மீது ஏற்கனவே 25-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில், அண்ணாமலை நகரில் சமீபத்தில் நடந்த ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரைப் பிடிக்க போலீசார் முயற்சி செய்துள்ளனர். […]
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தர்மபுரியில் நேற்று பேசிய சீமான் நேரில் ஆஜராகவில்லை என்றால் என்ன செய்ய முடியும் என வினா எழுப்பியிருந்தார். ஆனால், தற்போது அவர் நேரில் ஆஜராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டு முன்பு ஒட்டப்பட்ட சம்மனை கிழித்ததால் சீமான் வீட்டு காவலாளிக்கும், […]
சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய தினம், சம்மனை கிழித்த காவலாளி, உதவியாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது, சீமானின் மனைவி கயல்விழி செய்தியாளர் சந்தித்து பேசியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “போலீஸ் ஈகோ அடிப்படையில் செயல்பட்டு வருவது தெரிகிறது. எத்தனையோ வழக்கு அவர் மேல இருக்கு, அவரை அசிங்கப்படுத்தத்தானே பாலியல் குற்றம்னு போடுறீங்க. காவல் ஆய்வாளர் பிரவீனுக்கு எதிராக மனித […]
சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர் ஆகிய இருவரையும் மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சோழிங்கநல்லூர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் தொடர்பான நேரில் ஆஜராக சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியுள்ளனர். இதை வீட்டில் இருந்த காவலாளி உள்ளிட்ட இருவர் கிழித்தெறிந்தனர். இதை விசாரிக்க சென்ற போலீசாரையும் அவர்கள் தாக்க முற்பட்டதால், […]
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர். அதன் பிறகு சம்மன் கிழிக்கப்பட்டது, அது குறித்து விசாரிக்க போலீஸ் வந்தபோது, சீமான் வீட்டு பாதுகாவலருடன் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது காவலாளி அமல்ராஜை கைது செய்த போலீசார், கைத் துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றதாக கொலை முயற்சி வழக்கை பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய சீமான், “இவ்வளவு மிரட்ட வேண்டிய அவசியம் என்ன? நான் விசாரணைக்கு […]
சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தனர். ஏற்கனவே அளிக்கப்பட்ட சம்மனில் சீமான் ஆஜராகாததால் இன்று, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. அந்த சம்மனை யாரோ ஒருவர் கிழித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சம்மனை கிழித்தது தொடர்பாக போலீசார் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் விசாரிக்க சென்ற போது அங்குள்ள […]
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு காவல்துறை இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சீமானுக்கு அனுப்பட்ட சம்மனில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சீமான் இன்று விசாரணைக்காக ஆஜராகவில்லை, இதையடுத்து நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் வழக்கில், சீமான் நாளை காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் சம்மன் […]
கோவை : 1998-ஆம் ஆண்டு, கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் விதமாக, 27-ம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, பாஜக இளைஞரணி தேசியத்தலைவர் தேஜஸ்வி சூர்யா, பாஜக மகளிரணி தேசியத்தலைவிவானதி சீனிவாசன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மேடையில் பேசிய அண்ணாமலை, 2026இல் தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும். பாஜக ஒரு விஷயத்தை கையில் எடுத்தால் அரை நூற்றாண்டு ஆனாலும் செய்து முடிக்கும். தமிழகத்தில் […]
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியது. பரந்தூரில் விமான நிலையம் அமையக் கூடாது என்று போராடி வரும் மக்களை சந்திக்க அவர் செல்ல திட்டமிட்டிருந்தார். பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு அங்கிருக்கும் கிராமத்தினர் தொடர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அந்த போராட்டக்குழுவை சந்தித்து பேசவும், பாதுகாப்பு வழங்க கோரியும், […]
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், வங்கி ஊழியர் ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, சினிமா பாணியில் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தகவலின்படி, பீதர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அடுத்துள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் பணம் போட ஊழியர்கள் வந்திருந்தனர். அப்போது […]
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு தலைமறைவான அவரை போலீஸ் பல்வேறு வழக்குகளில் தேடி வந்தது. ஏற்கனவே, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க பாம் சரவணன் திட்டமிடலாம் என உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ஆந்திர-தமிழக எல்லையில் தலைமறையாக இருந்த பாம் சரவணனை நேற்று கைது செய்து சென்னைக்கு அழைத்து வரும் போது போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது, […]
சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஆண்டு, காவல் துறையில் (ஆண்/பெண்) காவலர் நிலை-2, காவலர் நிலை-1, தலைமைக் காவலர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பணியாளர்களுக்கு “தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்” வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் […]
மதுரை: டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி, நரசிங்கம்பட்டியிலிருந்து மதுரை தபால் நிலையம் வரையில் முல்லை பெரியார் ஒருபோக பாசன விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், வணிகர்கள் சங்கம் மற்றும் 40 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சார்பில் பேரணி எழுச்சியோடு நடைபெற்றது. மேலும், மேலூரில் இருந்து தமுக்கம் அருகே அமைந்துள்ள மத்திய அரசின் தலைமை தமிழ் தபால் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். இதனால் தல்லாகுளம் வழியாக தமுக்கம், கோரிப்பாளையம் செல்லும் சாலையில் சாலை முழுவதும் வாகனம் […]
சென்னை: 2024ம் ஆண்டு நாளையுடன் முடிவடைந்து 2025ம் ஆண்டு பிறக்க தயாராக உள்ளது. அதன்படி, ஆங்கில புத்தாண்டு நாளை நாளிரவு கொண்டாடப்படவிருக்கிறது. இந்த நிலையில், பொது இடங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஒலிபெருக்கி பயன்படுத்த காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும், முன் அனுமதி பெறாமல் ஒலிபெருக்கி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் விரிவான அறிவிப்பை வெளிட்டுள்ளார். அதன்படி, புத்தாண்டை முன்னிட்டு, நாளை இரவு […]
நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு மாயாண்டி என்பவரை 7 பேர் கொண்ட ஒரு கும்பல் வெட்டி கொடூரமாக கொலை செய்தது. வழக்கு விசாரணைக்கு வந்த மாயாண்டியை நீதிமன்ற வளாகம் முன்பு அந்த கும்பல் வெட்டி கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது. நெல்லை மாவட்டம் கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டியை வெட்டிக் கொலை […]