தமிழ்நாடு காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.!

கரூர், நாமக்கல், தேனி, ராணிபேட்டை, அரியலூர், வேலூர், சிவகங்கை, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

TN govt - tN Police

சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025) உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மாற்றங்கள் நிர்வாகக் காரணங்களுக்காகவும், காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னை, கடலூர், திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் (டி.எஸ்.பி.) மற்றும் உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கொளத்தூர் காவல் துணை ஆணையர் பாண்டியராஜன், பழனி பட்டாலியனுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோயம்பேடு துணை ஆணையர் அதிவீரபாண்டியன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆர்.சிவபிரசாத் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய எஸ்.பி.க்கள் நியமனம்

  • திருப்பத்தூர் – ஷ்யாமளா தேவி
  • கரூர் – கே.ஜோஷ் தங்கையா
  • நாமக்கல் – எஸ். விமலா
  • தேனி – புக்யா ஸ்னேக பிரியா
  • ராணிபேட்டை – அய்மான் ஜமால்
  • அரியலூர் – விஸ்வேஷ்
  • வேலூர் – ஏ.மயில்வாகனன்
  • சிவகங்கை – ஆர். சிவபிரசாத்
  • திருவள்ளூர் – விவேகானந்த சுக்லா
  • கள்ளக்குறிச்சி – ஜி.எஸ். மாதவன்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்