நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை விலையின்றி வழங்க ரூ.59.55 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், இதுவரை மொத்தம் 20 அடுக்குமாடி வீடுகள் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்களுக்கு எந்த செலவும் இல்லாமல் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட […]
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய சட்டமசோதாவை தாக்கல் செய்தார். அதில், கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, கட்டாய கடன் வசூலால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அந்த நிறுவனம் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு உள்ளிட்ட சட்டதிருத்தங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. அந்த சட்ட மசோதாவில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த மக்கள், […]
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல் நிதிநிலை அறிக்கை, அடுத்த நாளில் வேளாண் நிதி நிலை அறிக்கை பேரவையில் தாக்கலானது. இறுதிநாளான இன்று காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான மானியகோரிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது, 3வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என திமுக எம்எல்ஏ மதியழகன் கோரிக்கை […]
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பான மானிய கோரிக்கைகள் மீது அத்துறை அமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, இதுவரை நடைபெற்ற மானிய கோரிக்கைகள் அதற்கான பதில்கள் மீதான பதிலுரையை பேரவையில் கூறினார். அப்போது திமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள் என நீண்ட பட்டியலை அவர் வாசித்தார். அதில், திமுக ஆட்சிக்கு 6வது முறையாக வந்துள்ளது. […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார். அதன் பிறகு அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் காவல்துறை சார்ந்த அரசு முன்னெடுத்த நடவடிககைகள் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.எஸ்.மணியன் எழுப்பிய கேள்விகளுக்கு நாளை நான் விரிவான விளக்கம் அளிக்கிறேன் எனக் கூறினார். இன்று இதுவரையில் தமிழக அரசு […]
சென்னை : இன்று அரசு ஊழியர்கள் மற்றும் காவலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஓய்வூதியம், அகவிலைப்படி, மகப்பேறு விடுப்புகள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. அதில், அரசு ஊழியர்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 9 அறிவிப்புகளை கிழே காணலாம். கோவிட் 19 காலத்தில் அரசுக்கு ஏற்பட்ட பெரும் நிதிச்சுமை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த அரசு ஊழியர்களின் விடுமுறையை சமன் […]
சென்னை : நேற்றைய விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று காலை அவை தொடங்கியதும், கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த சட்ட முன் வடிவை பேரவையில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தாக்கல் செய்கிறார். உறுப்பினர்களின் கோரிக்கையை அடுத்து கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்து இருந்தார். மேலும், டெல்லியில் இன்று மாலை நடைபெறவுள்ள விழாவில் பத்மபூஷன் விருதை பெறுகிறார் நடிகரும் ரேஸருமான அஜித்குமார். சினிமா, கார் ரேஸ் என இரட்டைக் […]
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பத்மநாபபுரம் எம்.எல்.ஏ மனோதங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார். மனோ தங்கராஜுக்கு என்ன துறை ஒதுக்கப்படும் என விரைவில் […]
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட குவாரி உரிமையாளர்கள், ஜல்லி, எம்.சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களின் விலையை உயர்த்தினர். அதன்படி, யூனிட் ஜல்லி விலை ரூ.4,000-ல் இருந்து ரூ.5,000 ஆகவும், எம்.சாண்ட் விலை ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000 ஆகவும், பி.சாண்ட் விலை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000 ஆகவும் உயர்த்தப்பட்டது. இதனால் புதிதாக வீடு கட்டும் நடுத்தர மக்கள் […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய சட்டமசோதாவை தாக்கல் செய்தார். அதில், கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, கட்டாய கடன் வசூலால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அந்த நிறுவனம் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு உள்ளிட்ட சட்டதிருத்தங்கள் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தன. அந்த சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டவை, பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த மக்கள், விவசாயிகள், […]
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21 அன்று வாட்டிகன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். போப் பிரான்சிஸின் அடக்க நிகழ்வு நாளை (ஏப்ரல் 26) காலை 10 மணி அளவில் புனித பீட்டர் சதுக்கத்தில் வைத்து நடைபெறவுள்ளது. அவரது உடல் ஏப்ரல் 23 முதல் புனித பீட்டர் பசிலிக்காவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்தும், புதிய அறிவிப்புகள் பற்றியும் பேசினர். அதில், தகவல் தொழில்நுப்டம் துறை ரீதியில் உள்ள முக்கிய அறிவிப்பை அத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் அறிவித்தார். அதில், வீடுதோறும் மாதம் ரூ.200-க்கு 100 Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கும் திட்டத்தை பற்றி […]
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, சாதி சான்றிதழ்களில் உள்ள பெயர் முரண்பாடுகளால் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்ப்பதற்கும், சமூகநீதி மற்றும் ஆவணங்களின் ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் நோக்கில் வழங்கப்பட்டது. சாதி சான்றிதழ்கள் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் அரசு நலத்திட்டங்களில் இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகளைப் பெறுவதற்கு அவசியமான ஆவணமாகும். இந்த சான்றிதழ்கள் […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டது. இதில் இருவரும் காரசாரமாக தங்கள் கருத்துக்களை முன்வைத்து வந்தனர். இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்களை பார்த்து, ” நீட் தேர்வை யார் கொண்டு வந்தது? என எதிர்க்கட்சி தலைவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார். நீட் கொண்டு வந்த பிறகு, தற்போது அதனை சரி செய்ய உங்களுக்கு ஒரு […]
சென்னை : 2025-26ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,”இந்தியாவில் முதன்மையான மருத்துவ கட்டமைப்பை பெற்றுள்ளது தமிழ்நாடு. கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தால் 52 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்திற்கு ஐ.நா விருது கிடைத்துள்ளது” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் உள்ள 7,618 எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட […]
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வானது, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், ரூ.418.15 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மேலும், ரூ.390.74 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அடுத்து, ரூ.357.43 கோடி மதிப்பில் 2,02,531 லட்சம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை […]
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினம் தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினமாக பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் உலகில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் பொதுவெளியில் பேசுகையில் கவனமாக பேச வேண்டும் என்றும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டாம் என்றும் […]
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி சார்ந்த மானிய கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அந்த துறை அமைச்சர் அதற்கு பதில் அளித்து வருகிறார். இன்று மாலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் புதிய தொழில்களுக்கு முதலீடு, புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட்டு […]
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தது போல, இன்று பள்ளியில் மாணவர்கள் வன்முறையை தடுக்கும் வண்ணம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய அறிவிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. முதலமைச்சரே பல்கலைக்கழகங்களில் வேந்தர் என்ற சட்டமசோதாவுக்கு […]
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அமைச்சரவைக் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலத்தின் நிர்வாகம், கொள்கை முடிவுகள், சட்டமுன்வரைவுகள், மற்றும் மக்களின் நலன் தொடர்பான முக்கிய விவகாரங்களை விவாதித்து முடிவெடுக்கப்படும். முந்தைய கூட்டங்களில், நிதிநிலை தயாரிப்பு மற்றும் முதலீடுகள் குறித்து […]