அனகாபுத்தூர் ஆற்றங்கரையோர மக்களுக்கு மாற்று வீடு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு, அங்கிருந்தவர்களுக்கு இலவச வீடுகள் வழங்கப்பட உள்ளது.

Anakaputhur - TN Govt

சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை சீரமைக்க அனகாபுத்தூர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அவசியம். அடையாறு கரையோர குடியிருப்புகளை அகற்றி அதன் மூலம் மாசுபடுவதை தடுப்பது அவசியம்.

கழிவுநீர் கலப்பை தடுக்க ஆற்றங்கரையோர வீடுகள் மறுகுடியமர்வு செய்வது அவசியம் என அரசு விளக்கம் கொடுத்துள்ளது. மேலும், அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள காயிதே மில்லத் நகர். மூகாம்பிகை நகர். சாந்தி நகர், எம்ஜிஆர் நகர் 3ஆவது தெருவில் வசிக்கும் 593 குடும்பங்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மாற்று வீடு வழங்கப்படும்.

தைலாவரம், கீரப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் நாவலூரில் 390 சதுர அடியில் ரூ. 17 லட்சம் மதிப்பில் வீடு தரப்படும். அடையாறு ஆற்றங்கரையில் உள்ள ஜோதி ராமலிங்கம் நகர், திடீர் நகர், ஜோதி அம்மாள் நகர், சூர்யா நகர், மல்லிகைப்பூ நகரில் உள்ள குடும்பங்களுக்கும் 390 சதுர அடியில் ரூ.17 லட்சம் மதிப்பில் வீடுகள் வழங்கப்படும். குடும்பம் ஒன்றுக்கு இடமாற்றுப்படியாக ரூ. 5000 வாழ்வாதார உதவி ஒரு வருடத்திற்கு ரூ. 30,000, மின் இணைப்பு கட்டணம் ரூ. 2500 வழங்கப்படும்.

குடும்ப அட்டை, முதியோர், மாற்றுத் திறனாளிகள், விதவைகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்கள், அங்கன்வாட மற்றும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உடனடியாக மாற்றித் தரப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்