சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் குழு தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல் மருத்துவமனை நிர்வாகம் சார்பில், வெளியிட்ட பின்னரே அவரது உடல் நலம் குறித்த விரிவான தகவல் தெரிய வரும். ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்துள்ளனர், மேலும் அவரது […]
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், மார்ச் 23இல் மெட்ரோவில் சிஎஸ்கே கிரிக்கெட் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் போட்டி முடிந்து திரும்பும் பயணிகளுக்காக மெட்ரோ கூடுதல் நேரம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்கேற்ப சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஐபிஎல் 2025-க்காக மெட்ரோ சேவைகளை வழங்க சென்னைசூப்பர் கிங்ஸுடன் இணைந்து செயல்படவுள்ளதாக அறிவித்துள்ளது. […]
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டன. இப்படி இருக்கின்ற சூழ்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (மார்ச் 15) சபாநாயகர் அப்பாவுவை தனியாக சென்று நேரில் சந்தித்தது பேசும் பொருளானது. இதுகுறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இ.பி.எஸ். கருத்து குறித்த கேள்விக்கு சபாநாயகர் உடனான சந்திப்பு குறித்து விளக்கமளித்த செங்கோட்டையன், “சபாநாயகரை எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். […]
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு ரூ. 10.63 கோடி செய்யப்பட்டுள்ளதாகவும், மலர் சாகுபடிக்கு ரூ.8 கோடி எனவும் முக்கிய விஷயங்களை தெரிவித்திருந்தார். இந்த சூழலில், ஏற்கனவே, நேற்று தாக்கல் செய்த பொதுபட்ஜெட் வெறும் பேப்பர் போல இருக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து இன்றும் அதைபோலவே, இன்று அறிவிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் […]
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண் பட்ஜெட்டை 5வது முறையாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்துள்ள நிலையில், ஒதுக்கீடு பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளார். அதில், கரும்பு சாகுபடிக்கு ரூ. 10.63 கோடி செய்யப்பட்டுள்ளதாகவும், மலர் சாகுபடிக்கு ரூ.8 கோடி எனவும் முக்கிய விஷயங்களை தெரிவித்திருக்கிறார். கரும்பு சாகுபடி கரும்பு உற்பத்தியில் தமிழ்நாட்டிற்கு 2ம் இடம் பிடித்துள்ளது எனவும், கரும்பு விவசாயிகளுக்கு ரூ.841 […]
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ததை தொடர்ந்து இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட்டை 5வது முறையாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்துள்ள நிலையில், ஒதுக்கீடு பற்றிய விவரங்களை வெளியீட்டு வருகிறார். தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம் (TNAU) மற்றும் மாநில அரசு, ட்ரோன்கள், IoT-ஆன விவசாய உபகரணங்கள், மற்றும் […]
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து இன்று தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். வேளாண் பட்ஜெட்டை 5வது முறையாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் உரையின் போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் , எம்எல்ஏக்கள் என […]
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பூதாகரமாக எழுந்து நிற்கிறது. குறிப்பாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் 2ஆம் கட்ட கூட்டத்தொடரில் இந்த விவகாரம் அதிகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விவாதத்தின் போது தமிழக எம்பிகளை நாகரீகமற்றவர்கள் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் விமர்சித்து, அதன் பிறகு கண்டனங்கள் எழுந்த பிறகு அந்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்து அதனை திரும்ப பெற்றிருந்தார். இருந்தும், தர்மேந்திரா பிரதான் தமிழக அமைச்சர்கள் குறித்து கடும் விமர்சனம் […]
சென்னை : கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ திரைப்படம் காப்புரிமை மீறல் தொடர்பான வழக்கில், இயக்குநர் ஷங்கரின் ரூ.11.10 கோடி மதிப்புள்ள சொத்தை தற்காலிகமாக பறிமுதல் செய்ய அமலாக்க இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தற்போது நிறுத்தி வைத்துள்ளது. இயக்குநர் ஷங்கர் தனது கதையைத் திருடி ‘எந்திரன்’ திரைப்படத்தை எடுத்ததாக, அவர் மீது நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு […]
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதா நிறைவேற்றம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்கும் போது என்னென்ன விஷயங்கள் பற்றி பேச வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் திமுக எம்பிக்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். […]
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் விதமாகவும், பெண் ஆட்டோ ஓட்டுநர்களால் இயக்கப்படும் பிங்க் ஆட்டோ உட்பட 250 ஆட்டோக்களை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதன்படி, பெண்களுக்காக 100 பிங்க் ஆட்டோக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக நீல நிற ஆட்டோக்கள், உடன் […]
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி கூட்டம் நடத்தினார். அதனைத்தொடர்ந்து தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக மார்ச் 12ம் தேதி திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்’ என்ற தலைப்பில் நடைபெறவிருக்கிறது . லண்டனில் உள்ள அப்போலோ அரங்கில் ‘வேலியன்ட்’ […]
லண்டன் : இசையமைப்பாளர் இளையராஜா 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என்கிற சாதனையை தமிழ் சினிமாவில் ஏற்கனவே படைத்திருந்தார். இந்த சாதனையை அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே படைத்துவிட்டார். அந்த பெரிய சாதனையை தொடர்ந்து ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுக்காக சிம்பொனி அமைத்த முதல் ஆசிய இசையமைப்பாளர் என்ற சாதனையும் படைத்தது அசத்தி இருக்கிறார். சிம்பொனி பற்றி கடந்த 1993ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து ஒரு சிம்பொனியை இளையராஜா உருவாக்கினார். இது […]
சென்னை : 2026 ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதுகுறித்து மேற்கொள்ளவேண்டிய அணுகுமுறை குறித்தும் முடிவுகள் மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 5ம் தேதி அன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று கூடியது. அந்த கூட்டத்தில் இப்பிரச்சினை தொடர்பாக முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, இப்பிரச்சினையினால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களிலுள்ள கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளைக் கொண்டு “கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்து, […]
சென்னை : விமான நிலையங்கள், துறைமுகங்கள், பல்வேறு தனிநபர் பிரமுகர்கள் என பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் மத்திய தொழிலாக பாதுகாப்பு படையான CISF படையினரின் 56வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்தவிழாவில் பங்கேற்க ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் அமைந்துள்ள CISF மண்டல பயிற்சி மையத்திற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வந்துள்ளார். இங்கு CISF வீரர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சைக்கிள் பயணத்தையும் தொடங்கி வைக்கிறார். மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு […]
சென்னை : மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கடந்த மார்ச் 5ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, தவெக என பல்வேறு கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பாஜக, நாதக, தமாகா உள்ளிட்ட கட்சியினர் இதில் பங்கேற்கவில்லை. இந்த அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் குறித்தும், தவெக தலைவர் விஜய் தொகுதி மறுசீரமைப்பு பற்றி’ தென் மாநிலங்களின் பிரிதிநிதித்துவம் குறையும்’ […]
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3 மணி நேரத்தில் ரூ.320 அதிகரித்து தற்போது 64,480க்கு விற்பனை ஆகிறது. காலையில் குறைந்த தங்கம் விலை அடுத்த 3 மணி நேரத்தில் உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று காலை : ஆபரணத் தங்கத்தின் இன்று காலை 1 கிராம் தங்கம் விலை ரூ.45 குறைந்து ரூ.8,020க்கு விற்கப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.360 […]
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய அரசு இந்தி மொழியையே திணிக்க பார்க்கிறது என தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இதற்கிடையில், தமிழ்நாடு முழுவதும் 90 நாட்கள் நடைபெறவுள்ள கையெழுத்து இயக்கத்தை நேற்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். இன்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் மும்மொழி கொள்கைக்கு […]
சென்னை : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து அவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பும் முயற்சியில் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அப்போது இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக சென்றவர்களை திருப்பி அனுப்பும் போது அவர்களின் கை, கால்களில் விலங்கிட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த வீடியோக்கள், புகைப்படங்கள் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். இச்சம்பவத்திற்கு பிறகு அமெரிக்க பயணம் […]
சென்னை : மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கையின் படி பள்ளி குழந்தைகள் தாய் மொழி, ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒரு இந்திய மொழியை படிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய அரசு இந்தி மொழியையே திணிக்க பார்க்கிறது என தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆளும் திமுக அரசு மும்மொழி கொள்கையை ஆதரிக்கும் PM Shri திட்டத்தில் இணையாததன் காரணமாக தமிழகத்திற்கு […]