சென்னையில் மூத்த குடிமக்கள் இலவச பயணம் – இன்று முதல் டோக்கன்.!

மாநகர பேருந்துகளில் சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணிக்க இன்று முதல் டோக்கன் வழங்கப்படுகிறது.

Free travel token for senior citizens

சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த 6 மாதங்களுக்கான டோக்கன்கள் இன்று (ஜூன் 21) முதல் வரும் ஜூலை 31ம் தேதி வரை, காலை 8 மணி முதல் இரவு 7:30 மணி வரை வழங்கப்பட உள்ளது என மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க வருபவர்கள் குடும்ப அட்டை, வயது சான்று மற்றும் 2 புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜூலை 31 வரை காலை 8.00 – இரவு 7.30 வரை 40 மையங்களில் டோக்கன்கள் தரப்படுகிறது.

ஜூலை முதல் டிசம்பர் வரை மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதங்களுக்கானது வழங்கப்படும். 40 மையங்களில் அடையாள அட்டைகள் புதுப்பித்தல் மற்றும் புதியபயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும். இருப்பிடச்சான்று, வயது சான்று, 2 புகைப்படங்களுடன் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்