முக்கியச் செய்திகள்

அஜித் மரணம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.!

சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணையின்போது கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு காவல்துறைக்கு கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது, மேலும் அவரை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கும் வீடியோவும் நீதிமன்றத்தில் […]

Ajith Kumar 5 Min Read

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித் குமார் உடற்கூராய்வு அறிக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நிலையில், உடற்கூராய்வு அறிக்கையை மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஷ்குமார் தாக்கல் செய்தார். இந்த வழக்கில், திருப்புவனம் நீதிமன்ற நடுவர் வெங்கடாபதி பிரசாத், கோயில் உதவி ஆணையர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி டீன் ஆகியோர் ஆஜராகினர். இந்த […]

Ajith Kumar 7 Min Read
Ajith Kumar Case - Siva Gangai

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள் மூலம் அதற்கான விடை கிடைத்துள்ளது பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வகம் 3டி முறையில் பழங்கால தமிழர்களின் இரு முகங்களை வடிவமைத்திருக்கிறது. 80% அறிவியல்பூர்வமாகவும், 20% கலைப்பூர்வமாகவும் அந்த முகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், “இதற்கு பின்பாவது ஒன்றிய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா என்பதே 8 கோடி தமிழர்களின் மனங்களில் எழும் ஒரே கேள்வி” என்று அமைச்சர் தங்கம் […]

#UK 5 Min Read
Keeladi - Thangam Thenarasu

ஆள் கடத்தல் வழக்கில் ADGP ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : திருவள்ளூரில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரரை கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாகி இருந்த புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியும், ஆள் கடத்தலுக்கு உதவியதாக கூறப்படும் ஏடிஜிபி ஜெயராமனும் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஒருவேளை இந்த வழக்கில் ADGP ஜெயராம் ஆஜராகவில்லை என்றால் கைது செய்து ஆஜர்படுத்த காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. பின்னர், முதல் ஆளாக உயர்நீதிமன்றத்தில் ஏடிஜிபி ஜெயராமன் ஆஜராகினார். ஆனால், […]

ADGP 4 Min Read
ADGP Jayaraman

”ஐயா என்ன மன்னிச்சிடுங்க.., நீங்க 100 ஆண்டுக்கு மேல வாழனும்” – மன்னிப்பு கேட்ட அன்புமணி.!

திருவள்ளுவர் :திருவள்ளூரில் அன்புமணி தலைமையில் நடக்கும் பாமக மாவட்ட பொதுகுழு கூட்டத்தில் பொருளாளர் திலகபாமா,பொதுசெயலாளர் வடிவேல்ராவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர், மேடையில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, ”என் மீது கோபமோ, வருத்தமோ இருந்தால் மன்னித்து விடுங்கள்” என தந்தையிடம் மன்னிப்பு கோரினார். முன்னதாக தந்தையர் தின வாழ்த்துகளை அன்புமணி தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்பொழுது, பொதுகுழு […]

#DMK 4 Min Read
Ramadoss Anbumani

மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சேலம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 12, 2025) சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார். அணையின் 92 ஆண்டு கால வரலாற்றில், உரிய காலத்தில் (ஜூன்12) பாசனத்துக்காக திறக்கப்படுவது இது 20-வது முறையாகும். முதல் கட்டமாக விநாடிக்கு 3,000 கனஅடி நீரை திறந்து வைத்த முதல்வர் மலர் தூவி வரவேற்றார். அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு பின்னர் படிப்படியாக விநாடிக்கு 12,000 கனஅடியாக […]

#Mettur Dam 3 Min Read
MKStalin - MetturDam

அவசர அவசரமாக சாலையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.! கார் மீது மோதியதால் பரபரப்பு..,

ருத்ரபிரயாக் : உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள செர்சி பராசு அருகே உள்ள சாலையில் கேதார்நாத் தாமுக்கு நான்கு பக்தர்களுடன் சென்று கொண்டிருந்த கிரிஸ்டல் ஏவியேஷன் நிறுவனத்தின் ஹெலிகாப்டர், நடு ரோட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் சேதமடைந்தது, ஆனால் அதில் யாரும் இல்லை. மேலும், ஹெலிகாப்டரில் ஐந்து பயணிகள் இருந்தனர், அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். இருப்பினும், விமானிக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. உத்தரகண்ட் சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் […]

Accdient 3 Min Read
helicopter - emergency

இணையத்தில் வெளியானது ”தக் லைஃப்” திரைப்படம் – படக்குழு அதிர்ச்சி.!

சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்து, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் “தக் லைஃப்” படம் இன்று (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இன்று காலை 9 மணி அளவில் வெளியான ”தக் லைஃப்” படம் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை ஐகோர்ட் ஏற்கெனவே தடை விதித்துள்ள நிலையில், அதனை மீறியும்  இணையதளத்தில் படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை சட்டவிரோதமாக […]

#simbu 3 Min Read
thug life

டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.., திமுகவினர் உற்சாக வரவேற்பு!

டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை (மே 24, 2025) நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, இன்று (மே 23, 2025) சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் ஸ்டாலினுக்கு மேள தாளங்களுடன் திமுகவினர் வரவேற்பு அளித்தனர். எம்பி-க்கள் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, திருச்சி சிவா, மற்றும் எம்.பி.க்களான தங்க தமிழ்செல்வன், கதிர் ஆனந்த், கலாநிதி வீராசாமி, அருண் நேரு, தயாநிதி மாறன், […]

#Delhi 4 Min Read
CM MK Stalin

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் – தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின் தரமணி பகுதியில், அடையாறு U-வடிவ பாலத்திற்கு அருகே உள்ள சாலையில் திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டது. இந்தப் பள்ளத்தில் ஒரு சொகுசு கார் விழுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதுகாரில் இருந்த கைக்குழந்தை உட்பட 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால், தரமணி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களிலும் செய்தி ஊடகங்களிலும் வேகமாக […]

#Chennai 3 Min Read
Car Accident

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது அதிகரித்து வரும் போர் பதட்டங்கள் மற்றும் பாதுகாப்பு கவலைகளைக் காரணம் காட்டி, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 163 இன் கீழ், இந்த கட்டுப்பாடு இரண்டு மாதங்களுக்கு பொருந்தும் என தெரிவித்துள்ளது. மேகாலயாவில் உள்ள கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்ட நீதிபதி ஆர்.எம். குர்பா […]

India-Pakistan war 3 Min Read
meghalaya night curfew

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள் என்று தெலுங்கானாவின் நம்பள்ளியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு பாஜக ஆட்சியில் இவர் அமைச்சராக இருந்த போது முறைகேடு நடந்ததாக சிபிஐ விசாரித்து வந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த சுரங்க முறைகேடு வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. ஜனார்தன ரெட்டியும் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ரெட்டிக்குச் சொந்தமான […]

#Karnataka 4 Min Read
Gali Janardhan Reddy

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்த வருட ஐபிஎல்லில் முடிவு இல்லாத இரண்டாவது போட்டி இதுவாகும். இதன் மூலம், சென்னை மற்றும் ராஜஸ்தானை தொடர்ந்து ஹைதராபாத் அணியும் அடுத்த சுற்றுக்கு செல்லாது. ஆம், குறுக்கே வந்த மழை காரணமாக, எளிய இலக்கை கூட எட்டி பிடிப்பதில் விளையாட கூட முடியாமல், 3-வது அணியாக பிளேஆஃப் வாய்ப்பில் இருந்து […]

#Pat Cummins 4 Min Read
SRHvDC - IPL2025

பாஜக -ஆர்எஸ்எஸ் இடையே என்ன நடக்கிறது? பிரதமர் மோடி ராஜினாமா செய்யபோகிறாரா?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு அவர் வருகை புரிந்தது, அங்கு ஆர்.எஸ்.எஸ்-ஐ புகழ்ந்து பேசியது ஆகியவை பல்வேறு அரசியல் விவாதங்களுக்கு தீவிரம் சேர்த்துள்ளது. இதனைச் சுற்றி எழுந்துள்ள அரசியல் பேச்சுக்களில் மிக முக்கியமானது பிரதமர் மோடி ராஜினாமா பற்றிய செய்திகள். அதாவது, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இடையே நீண்டகால தொடர்பு உள்ளது. ஆர்எஸ்எஸ் எனும் இந்துத்துவா அமைப்பானது பாஜகவின் சித்தாந்த அடித்தளமாகவும், […]

#BJP 6 Min Read
PM Modi

“நீ ஏன் குறுக்க வர்ற.. தொலச்சிடுவேன் உன்னை”- மாஃபா பாண்டியராஜனை பகிரங்கமாக மிரட்டிய ராஜேந்திர பாலாஜி.!

சிவகாசி : விருதுநகரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் நிர்வாகியை, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் விருதுநகர் மாவட்டம் தேசபந்து மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அப்பொழுது, இந்த விழா மேடையில் விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் நந்தகுமார் பொன்னாடை அணிவிப்பதற்காக வரிசையில் வராமல், முந்திக் கொண்டு வந்ததால் கோபமடைந்த ராஜேந்திர […]

#ADMK 5 Min Read
rajendra balaji mafoi pandiarajan

வீங்கிய வயிற்றுடன் உயிருக்கு போராடும் நடிகர் அபினய்! கல்லீரல் நோயால் அவதி…

சென்னை : தனுஷின் ‘துள்ளுவதோ இளமை’, தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள நடிகர் அபினய் (43), ‘Liver Cirrhosis’ (கல்லீரலின் சிரோசிஸ்) எனப்படும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வறுமையில் வாடி வரும் அவர் எலும்பும் தோலுமாகவும், வயிறு வீங்கியபடியும் இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரூ.15 லட்சத்துக்கு மேல் செலவு செய்து சிகிச்சை பெற்று வரும் அவர், மேல் சிகிச்சைக்காக ரூ 28.5 […]

Abhinay 4 Min Read
Actor Abhinay

பதிலுக்கு பதில் வரி விதிப்போம்.., இந்தியாவில் தான் அதிக வரி! டிரம்ப் அதிரடி!

வாஷிங்டன் : அமெரிக்காவில் விலைவாசி உயர்வு, அங்கு வாழும் மக்களுக்கு வாழ்க்கை செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பிரசனைகளை முன்னிறுத்தி அமெரிக்க அதிபர் தேர்தலை சந்தித்தார் டொனால்ட் டிரம்ப். தற்போது வெற்றிபெற்ற பிறகு அதற்கான அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு தற்போது வரி விகிதங்களை மாற்றி அமைக்க உத்தரவிட்டுள்ளார். எவ்வளவு வரியோ, அதே அளவு வரி…, அதாவது, அமெரிக்க பொருட்களுக்கு வெளிநாடுகளில் அந்தந்த நாட்டு அரசு என்ன இறக்குமதி வரி […]

#USA 10 Min Read
PM Modi - US President Donald Trump

கல்வி தரத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளது! அண்ணாமலை பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி, 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் கட்டாய தேர்ச்சி என்பதில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் இறுதி தேர்வு அல்லது மறுதேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும் என்ற திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த இந்த திருத்தத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழக பள்ளிக்கல்வித்துறை […]

#Annamalai 5 Min Read
BJP State President K Annamalai

1 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (பிற்பகல் 1மணி வரை) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, ஆகிய 7 மாவட்டங்களிலும் […]

#Chennai 2 Min Read
RAIN FALL

LIVE: விடாமல் பெய்து வரும் மழை… பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை?

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மற்றும் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவ.21) விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் முடிவெடிக்கலாம் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். அதேபோல், நெல்லை மாவட்டத்தில் கனமழையினால் பள்ளிகளில் அதிகளவு மழைநீர் தேங்கி இருக்கும்பட்சத்தில் விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி […]

#Rain 2 Min Read
tamil live news