நெல்லை: கடந்த ஏப்ரல் 11ம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) கீழ் போட்டியிடும் என அறிவித்தார். இந்தக் கூட்டணி தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (ஈபிஎஸ்) தலைமையில் செயல்படும், மேலும் தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார். அதே நேரம், […]
சென்னை : தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 19.260 பணியிடங்கள் 18 மாதங்களில் நிரப்பப்படும்” என்று சட்டப்பேரவையில் முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு அறிகுறி கூட திமுக ஆட்சியில் தென்படவில்லை என கூறி திமுகவை விமர்சனம் செய்து பதிவு ஒன்றை வெளிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” தகுதித் தேர்வில் வென்ற இடைநிலை ஆசிரியர்களுக்குப் பணியாணை வழங்காமை, போதிய வகுப்பறை வசதியின்மை, மாணவர்களே கழிவறையைக் கழுவும் […]
சென்னை : சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் சென்று கொண்டிருக்கும் வேலையில் பாமக உட்கட்சி விவகாரம் என்பது எப்போது முடிவுக்கு வரும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்று தொண்டர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். ஆம், அன்புமணி – ராமதாஸ் இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இருவரையும் சமரசம் செய்ய முக்கிய நபர்கள் முயன்றதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி வேண்டவே வேண்டாம் என […]
சென்னை : நேற்று மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு திமுகவை விமர்சித்து பேசினார். இது குறித்து பேசிய அவர் “” மு.க.ஸ்டாலின் அமித்ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாது என கூறியுள்ளார். சரி நான் அவருக்கு இந்த நேரத்தில் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்னவென்றால், என்னால் உங்களை தோற்கடிக்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் உங்களை (திமுகவை) தோற்கடிக்க தயாராக உள்ளனர். இவ்வளவு காலம் அரசியலில் மக்களின் நாடித்துடிப்பை […]
சென்னை : தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக பாஜகவிடம் இருந்து எந்தவொரு அழைப்பும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, அரசியல் கட்சிகளிடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசியிருக்கிறார். தேமுதிகவும் பாஜகவும் கடந்த தேர்தல்களில் கூட்டணியாக செயல்பட்டிருந்தாலும், தற்போது எந்த உத்தியோகபூர்வ அழைப்பும் இல்லை என பிரேமலதா தெளிவுபடுத்தியுள்ளார். பாஜகவுடனான கூட்டணி குறித்து ஊடகங்களில் எழுந்த கேள்விகளுக்கு பதிலளித்த […]
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து கொண்டு பேசிய அவர், கூட்டணிக் கட்சிகளுடன் நட்புறவு பாராட்டவும், இணக்கமாக செயல்படவும், 2026-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்கவும் பாஜகவினருக்கு உத்தரவிட்டார். “நம்பிக்கையோடு பணியாற்றுங்கள், வரும் காலம் நமதே” என்று உறுதியாகக் கூறிய அவர், தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தமிழ் மொழியில் பேச […]
மதுரை : மதுரை வேலம்மாள் திடலில் இன்று (ஜூன் 8, 2025) மாலை 3 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி உத்திகள் மற்றும் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெறவுள்ளன. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று மதுரைக்கு அமித்ஷா வருகை தந்தார். வருகை தந்தவுடன் நேரடியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி […]
சென்னை : தமிழ்நாடு இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆகியவற்றின் சார்பில் மதுரையில் ஜூன் 22 அன்று நடைபெறவுள்ள “முருக பக்தர்கள் மாநாடு” நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு அறிவிக்கப்பட்ட நாள் முதல் தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் தங்கள்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ”முருகன் மாநாட்டை குஜராத், உத்தரப்பிரதேச மாநிலங்களில் நடத்துவார்களா? விநாயகரை தமிழக மக்கள் வணங்கும்போது முருகரை குஜராத் மக்கள் […]
கோவை : தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு, நயினார் நாகேந்திரன், திமுக அரசை வீழ்த்துவதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், […]
கர்நாடகா : பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு கர்நாடக அரசு அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வலியுறுத்தினார். இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ”பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே ஆர்.சி.பி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் வருத்தம் அடையச் செய்கிறது. […]
பெங்களூரு : 18 ஆண்டு தவத்திற்கு பின், ஐபிஎல் தொடரில், ஆர்சிபி முதல்முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது. இதனால், தங்கள் அணி கோப்பை வென்றதை கொண்டாடி தீர்க்க, லட்சக்கணக்கான ரசிகர்கள் ஸ்டேடியத்தை முற்றுகையிட்டனர். எங்கும் பார்த்தாலும் சிவப்பு ஜெர்ஸியும், ஆர்சிபி வாழ்த்து கோஷங்களும் முழங்குகின்றன. இந்நிலையில் தான் இந்த வெற்றிக்கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், சின்னசாமி மைதானத்தில் நடந்த கிரிக்கெட் கொண்டாட்ட விழா பாதியில் நிறுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆர்சிபி […]
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சி மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக, பாஜக கூட்டணி குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். இது தொடர்பாக பேசிய மு.க.ஸ்டாலின், ”தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள். சாதிக்கலவரங்களை தூண்டுவார்கள். மக்களை அனைத்து வகையிலும் பிளவுபடுத்துவார்கள். நம்முடைய பிள்ளைகளை படிக்க […]
சென்னை : நேற்றைய தினம் கூட்டணி விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஒருமையில் குறிப்பிட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் தனது இயல்பை மீறியது என்பதை தான் ஒப்புக்கொள்வதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்த அவர் அவரது பதிவில், ”எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் […]
சென்னை : ஆந்திரா மாநிலத்தின் துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், “அழைத்தால் பிரசாரத்துக்காக தமிழகம் வருவேன்” என்று பேசியிருக்கிறார். சென்னையில் 2025 மே 26 அன்று பாஜக சார்பில் நடைபெற்ற “ஒரே நாடு ஒரே தேர்தல்” குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர் “தமிழகம் சித்தர்களின் புனித பூமியாகவும், முருகனின் தெய்வீக பூமியாகவும் விளங்குகிறது. இது வீரமிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு பெயர் பெற்ற மண்ணாகும். “ஒரே நாடு ஒரே தேர்தல்” குறித்து […]
குஜராத் : 2 நாள் அரசு முறைப் பயணமாக குஜராத்தின் வதோதராவில் பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோ நடத்தினார். ஆபரேசன் சிந்தூரின் வெற்றியைத் தொடர்ந்து முதல்முறையாக குஜராத் சென்ற பிரதமருக்கு சாலையின் இருமருங்கிலும் நின்ற மக்கள் மலர்கள் தூவி வரவேற்றனர். அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகளில் குஜராத்தின் தாஹோத்தில் கட்டமைக்கபட்ட ரயில் எஞ்சின்கள் உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், தாஹோடிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம், நாட்டின் முதலாவது 9000 எச்.பி.(HP) திறன் […]
சென்னை : நேற்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில கோரிக்கைகளை முன் வைத்து இருந்தார். இந்த சூழலில், அமலாக்கத் துறை நடவடிக்கை. காலைச் சுற்றும் பாம்பு என்பதை உணர்ந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ரூ.1000 கோடி ஊழல் தோண்டி எடுக்கப்பட்டால் தம் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் டெல்லி சென்றதாக த.வெ.க தலைவர் விஜய் விமர்சனம் செய்திருக்கிறார். இது குறித்து அவர் […]
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் பங்கேற்கும் முக்கிய மாநாடு நடைபெறுகிறது. இந்தக் கூட்டம், ஜம்மு-காஷ்மீரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது. ஆந்திரப் பிரதேசத்தின் சந்திரபாபு நாயுடு, பீகாரின் நிதிஷ் குமார் உள்ளிட்ட முக்கிய முதல்வர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் தேசிய பாதுகாப்பு, ஆளுமை மேம்பாடு, மற்றும் […]
சென்னை : தமிழகத்தில் அமலாக்கத்துறை தொடர்ச்சியாக பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், புதுக்கோட்டையில் மே 24-அன்று செய்தியாளர்களை சந்தித்த துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் “மோடிக்கும் பயமில்லை, ED-க்கும் பயமில்லை” என தெரிவித்திருந்தார். இவர் இப்படி பேசியிருந்த நிலையில், பாஜகவை சேர்ந்தவர்கள் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேச தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் […]
டெல்லி : ஆண்டுதோறும் நாட்டின் நிதி நிர்வாகம், வளர்ச்சி திட்ட இலக்குகள் குறித்து ஆலோசிக்க நிதி ஆயோக் கூட்டம் என்பது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆயோக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இது 10-வது ஆண்டு நிதி ஆயோக் கூட்டம். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி சில முக்கிய விஷயங்களை பற்றியும் பேசினார். இது குறித்து பேசிய அவர் ” மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒரு குழுவாக […]
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம் திறந்து வைத்தார்.இந்த ரயில்வே திட்டங்களை தொடங்கிவைத்த பின் பொதுமக்களிடம் பேசிய அவர் ” பாகிஸ்தானுடன் வர்த்தகமும் இல்லை, பேச்சுவார்த்தையும் இல்லை. ஒருவேளை பேச்சுவார்த்தை நடத்தினால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டும்தான் பேசுவோம். என்னுடைய எண்ணம் நிதானமாகத்தான் இருக்கும் ஆனால், தற்போது என் ரத்தம் கொதிக்கிறது. என் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை சிந்தூர்தான் (குங்குமம்) ஓடுகிறது” […]