சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று ராமதாஸ், தான் மீண்டும் கட்சியின் தலைவர் என்றும், அன்புமணியை செயல் தலைவராக நியமிப்பதாகவும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, மாமல்லபுரத்தில் மே 11 அன்று நடந்த சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாட்டில் ராமதாஸ், அன்புமணியை மறைமுகமாக விமர்சித்தார். பிறகு, ஜூன் 13 அன்று ராமதாஸ், “என் மூச்சுக்காற்று இருக்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவி தரமாட்டேன்,” […]
கடலூர் : மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள தராசு கிராமத்தில், 80 வயது மூதாட்டி கவுசல்யா கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில், கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த ஐந்து வாலிபர்கள் மூதாட்டியை இழுத்துச் சென்று கொடூரமாக தாக்கியதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மூதாட்டி, தனது மகன் ஷங்கருடன் வசித்து வந்த நிலையில், மாலையில் நடைபயிற்சிக்காக வெளியே சென்றபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. […]
சென்னை : மாநகரில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், மின்சார பேட்டரி பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த 10 நாட்களில் (ஜூன் 27, 2025) தொடங்கி வைக்க உள்ளார். இந்த முயற்சி, சென்னையை மாசு இல்லாத, பசுமையான நகரமாக மாற்றுவதற்கான தமிழ்நாடு அரசின் முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாகும். மாநகர போக்குவரத்து கழகம் (MTC) மூலம் இயக்கப்படவுள்ள இந்த பேட்டரி பேருந்துகள், குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் அதிக செயல்திறனுடன், பயணிகளுக்கு சவுகரியமான பயண அனுபவத்தை வழங்கும். […]
காஞ்சிபுரம் : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த சூழ்ச்சி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார். இன்று காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, ” என் கட்சிக்கும், என் சமூதாயத்துக்கும் நான் துரோகம் செய்தால் அது தான் என் வாழ்நாளின் கடைசி நாளாக இருக்கும். நடக்கின்ற பிரச்சனைக்கு யார் வில்லன் என்றால் […]
சென்னை : இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூருக்கு சென்று ரூ.1,194 கோடியிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். திறந்து வைத்துவிட்டு நிகழ்ச்சியில் பேசிய அவர் காவிரியில் தமிழக உரிமையை நிலைநாட்டியது திமுக எனவும், எடப்பாடி பழனிசாமி உண்மை என்னவென்று தெரிந்துகொள்ளாமல் அறிக்கை விடுவதாகவும் விமர்சித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” காவிரி நீரை பெறுவதற்காக பல நடவடிக்கைகளை எடுத்தவர் என்றால் கருணாநிதி தான். எனவே, கருணாநிதியையும், தஞ்சையையும் எப்போதுமே பிரித்து […]
திருவள்ளூர் : பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியே 2026-ல் ஆட்சி அமைக்கும் எனவும் திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டதாகவும் அன்புமணி கூறியுள்ளார். பாமகவில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே நீண்ட காலமாக உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூரில் நடக்கும் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, ”தமிழகத்தில் சமூகநீதி, வேலைவாய்ப்பு, விவசாயிகள், பெண்களின் நலன் என எந்தத் துறையிலும் வளர்ச்சி இல்லை என்பதால் அனைத்து தரப்பினரும் அதிருப்தியில் இருக்கின்றனர் […]
திருவள்ளுவர் :திருவள்ளூரில் அன்புமணி தலைமையில் நடக்கும் பாமக மாவட்ட பொதுகுழு கூட்டத்தில் பொருளாளர் திலகபாமா,பொதுசெயலாளர் வடிவேல்ராவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர், மேடையில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, ”என் மீது கோபமோ, வருத்தமோ இருந்தால் மன்னித்து விடுங்கள்” என தந்தையிடம் மன்னிப்பு கோரினார். முன்னதாக தந்தையர் தின வாழ்த்துகளை அன்புமணி தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்பொழுது, பொதுகுழு […]
சென்னை : ஜாக்டோ-ஜியோ அமைப்பு, பல ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பாகும். இந்த அமைப்பு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறது. சமீபத்தில், ஜாக்டோ-ஜியோவின் ஒரு நிர்வாகியான மாயவன் என்பவர் விஜய்யை சந்தித்ததாகவும், அவர்கள் அமைப்பின் கோரிக்கைகளுக்கு ஆதரவு கோரியதாகவும் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரத்துடன் செய்திகள் வெளியாகின. ஆனால், ஜாக்டோ-ஜியோ அமைப்பு இதை மறுத்து, விஜய்யுடன் எந்த சம்பந்தமும் இல்லை என்று […]
சென்னை : ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக (ராஜ்யசபா எம்.பி) தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் மக்கள் நீதி மய்யம் (ம.நீ.ம) கட்சியின் சார்பாக இன்று சென்னையில் பாராட்டு விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்க கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். எம்பியான அவருக்கு ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்ததோடு சில பரிசுகளையும் அன்பாக கொடுத்தனர். ஒரு ரசிகர் கமல்ஹாசன் கன்னட நடிகர் சிவராஜ் குமாருடன் இருக்கும் […]
சென்னை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள V. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகுந்த மர்மநபர்கள், காவல் நிலையத்தைத் தாக்கி, சூறையாடியதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் இது குறித்து கருத்து தெரிவிக்க தொடங்கியுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியீட்டு திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை என்கிற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக […]
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் அவர் திமுக குறித்து பேசிவருவது குறித்தும் திமுகவை சேர்ந்த அமைச்சர்களிடம் கேள்விகளாக கேட்கப்பட்டு வருகிறது. அப்படி தான் யூடியூப் சேனல் ஒன்றுக்கு காரில் இருந்தபடி பேட்டி கொடுத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடனே முதல்வர் ஆக முடியாது என கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” 1949-இல் திமுக ஆரம்பிக்கப்பட்டபோது உடனே எல்லாம் யாரும் முதலமைச்சர் ஆவோம் என்று எதிர்பார்க்கவில்லை. அதைப்போல அரசியலில் நிற்கவேண்டும் […]
சேலம் : சேலம் சென்றுள்ளமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக நீரை திறந்து வைத்தார்.முதல் கட்டமாக விநாடிக்கு 3,000 கனஅடி நீரை திறந்து வைத்த முதல்வர் மலர் தூவி வரவேற்றார். அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு பின்னர் படிப்படியாக விநாடிக்கு 12,000 கனஅடியாக உயர்த்தப்படவுள்ளது. டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர், சேலத்தில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். பின்னர், அங்கு நடந்த அரசு விழாவில் பங்கேற்று […]
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு பக்கம் திமுகவை விமர்சித்தும் மற்றொரு பக்கம் திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்கள். அந்த வகையில் இன்று மக்களிடம் இருந்து வாங்கும் மனுக்களில் கூட விளம்பரம் தேடும் முதல்வருக்கு கண்டனம் என கூறி தற்போது பொதுத்தேர்தல் நெருங்கி வருவதை மனதில் கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மனுக்களைப் பெறும் நாடகத்தை அரங்கேற்ற உள்ளதாக தெரிகிறது” எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது புகார் பெட்டி மூலம் […]
தேனி : ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெண்கள் இலவச பேருந்து பயணத்தை “ஓசி” என்று குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் மண்ணூத்து மலை கிராமத்தில் சமுதாயக் கூடம் திறப்பு விழாவில் அவர் இவ்வாறு பேசியதாக கூறப்படும் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு, அமைச்சர் பொன்முடி இதேபோல் “ஓசி” என்று பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார், மேலும் அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது. மகாராஜனின் பேச்சு குறித்து பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி […]
கடலூர் : இன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் எல்.முருகன் பேசிய கருத்துக்கும் பதில் அளிக்கும் விதமாக பேசினார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் ” ஊடகங்கள் தொடர்ச்சியாகவே திமுகவிடம் நாங்கள் கூடுதல் தொகுதி கேட்போமா? என கேள்விகளை எழுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்காக நான் பதில் சொல்ல விரும்புகிறேன். கூடுதலாக நாங்கள் கொடுத்த பெற்றுக்கொள்வோம் இல்லை..குறைவாக கொடுத்தால் பெற்றுக்கொள்வோம் என்று சொல்ல முடியாது. எங்களுக்கு ஒவ்வொரு தேர்தல் நடைபெறும்போது கூடுதல் தொகுதி வேண்டும் […]
சென்னை : ஈரோட்டில் இன்று வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை திறந்து வைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்திருந்தார். வருகை தந்த பிறகு கருதரங்கத்தை திறந்து வைத்துவிட்டு சில விஷயங்களையும் பேசினார். விழாவில் பேசிய அவர் ” வேளாண்மையும் உழவர் நலனும் நம்முடைய முதன்மையான கவனத்துக்கு உரியவை. அதனாலதான் வேளாண் துறையோட பெயரை ‘வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை’னு மாத்தியிருக்கோம். இது வெறும் பெயர் மாற்றம் இல்லை; நம்ம உழவர்களுக்கு மேம்பட்ட சேவைகளை, ஆதரவை கொடுக்கணும்ங்கிற நோக்கத்தோட செய்யப்பட்ட […]
நெல்லை: கடந்த ஏப்ரல் 11ம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) கீழ் போட்டியிடும் என அறிவித்தார். இந்தக் கூட்டணி தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (ஈபிஎஸ்) தலைமையில் செயல்படும், மேலும் தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார். அதே நேரம், […]
சென்னை : தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 19.260 பணியிடங்கள் 18 மாதங்களில் நிரப்பப்படும்” என்று சட்டப்பேரவையில் முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு அறிகுறி கூட திமுக ஆட்சியில் தென்படவில்லை என கூறி திமுகவை விமர்சனம் செய்து பதிவு ஒன்றை வெளிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” தகுதித் தேர்வில் வென்ற இடைநிலை ஆசிரியர்களுக்குப் பணியாணை வழங்காமை, போதிய வகுப்பறை வசதியின்மை, மாணவர்களே கழிவறையைக் கழுவும் […]
சென்னை : தாம்பரம் பகுதியில் உள்ள அரசு விடுதியில் தங்கி 8-ஆம் வகுப்பு படித்து வரும் 13-வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் இரண்டு கால்களும் உடைக்கப்பட்டு உடல்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்த சம்பவத்தில் முதற்கட்டமாக விடுதியில் காவலாளியாக பணியாற்றி வந்த மேத்யூ கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, அரசு சேவை இல்லங்களில் பெண் காவலாளிகளை நியமிக்க […]
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா, 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கியே தங்கள் அரசியல் நகர்வுகள் இருக்கும் எனவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026இல் மாநிலங்களவை ராஜ்ய சபாசீட் தேமுதிகவுக்கு உறுதியாக வழங்கப்படும் என்று உறுதியளித்த தகவலை பற்றியும் கூறியுள்ளார். ஆனால், முன்னர் 2025இல் சீட் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது இப்போது 2026ஆக மாற்றப்பட்டுள்ளதாக பிரேமலதா தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர் ” […]