டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.., திமுகவினர் உற்சாக வரவேற்பு!

டெல்லி விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முக்கியத் தலைவர்கள் மற்றும் தமிழக எம்.பி.க்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

CM MK Stalin

டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை (மே 24, 2025) நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, இன்று (மே 23, 2025) சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் ஸ்டாலினுக்கு மேள தாளங்களுடன் திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

எம்பி-க்கள் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, திருச்சி சிவா, மற்றும் எம்.பி.க்களான தங்க தமிழ்செல்வன், கதிர் ஆனந்த், கலாநிதி வீராசாமி, அருண் நேரு, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், முரசொலி ஆகியோர் மலர்க்கொத்துகள் வழங்கி, மேளதாளத்துடன் முதலமைச்சரை வரவேற்றனர்

இன்று இரவு அல்லது நாளை மோடியை தனியாக ஸ்டாலின் சந்தித்து பேச முதலமைச்சர் தரப்பில் நேரம் கேட்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும், மாநிலத்திற்கு நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்களுக்கான நிதியைப் பெறுவதற்காகவும் முதலமைச்சர் பங்கேற்கிறார்.

குறிப்பாக, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம் மற்றும் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள நிதிகளை விடுவிக்க வேண்டுமென அவர் பிரதமரிடம் வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்.

முதலமைச்சர் தனது எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை #NITIAayog கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி டெல்லி செல்கிறேன். இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன்.கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன், தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்