சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முக்கிய தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். மத்திய அரசு விரைவில் தாக்கல் செய்ய உள்ள வக்பு வாரிய சட்டதிருத்ததிற்கு எதிராக தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டு வந்தார். வக்பு வாரிய சட்டத்தில் பல்வேறு முக்கிய திருத்தங்களை மத்திய பாஜக அரசு கொண்டுவந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பட்பட்டது. இதனால் எப்போது வேண்டுமானாலும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்டுகிறது. […]
சென்னை : தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று காலை வழக்கம் போல தொடங்கியுள்ளது. இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். நேற்றைய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசி இருந்தார். அதனை தொடர்ந்து இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், ஆவுடையார்கோவிலில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்திற்கு புதிய கட்டடம் எப்போது கட்டப்படும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா […]
சென்னை : தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவரது மறைவுக்கு நேற்று முதலே பல்வேறு திரைபிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று காலை வழக்கம் போல தொடங்கியுள்ளது. இதில் உறுப்பினர்களின் […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது உறுப்பினர்கள் தங்கள் தொகுதி குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு துறை ரீதியிலான அமைச்சர்கள் பதில் அளித்தும் வருகின்றனர். இந்த கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் இதே வேளையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் அதிமுக சார்பாக கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தை […]
சென்னை : 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் நாடு முழுவதும் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள மத்திய பாஜக அரசு முயல்கிறது என்றும், இதன் மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படும் என்றும், தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனை பொருட்டு தமிழக அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தினர். மேலும், கடந்த மார்ச் 22ஆம் தேதியன்று மக்கள் தொகை […]
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிகாக மாறியிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் கூட்டு நடவடிக்கைக் குழு தொடர்பான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடை பெறுகிறது. இந்த கூட்டத்தில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மேற்குவங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் பங்கேற்று இந்த விவகாரம் குறித்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். […]
சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நிறைவு பெற்றது. இதன், 2வது கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இக்கூட்டத்தை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தொகுத்து வழங்கினார். இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பஞ்சாப் […]
சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா நட்சத்திர விடுதியில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டம் 3 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தில், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், […]
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுடன் ஒன்றிய அரசு அர்த்தமுள்ள உரையாடலை தொடங்க வேண்டும் என பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் தென்னிந்திய முதல்வர்கள் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், பங்கேற்று பேசிய கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டியது […]
சென்னை : சென்னையில் தற்போது நடைபெற்று வரும் தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலங்களின் முதல்வர்களும், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் தொடக்க உரையாக தமிழ்நாடு முதலமைச்சார் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அதை தொடர்ந்து துணை முதலவர் உதயநிதி மறுசீரமைப்பால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கினார். பின்னர், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உரையாற்றினார். அவரது உரையில், முக்கியமாக தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் […]
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம், இன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். அதன்படி, கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மமற்றும் கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய […]
சென்னை : சென்னையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கியது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மேற்குவங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் பரிசு அளித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்தார். பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி […]
சென்னை : சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் மத்திய பாஜக அரசின் தொகுதி மறுவரையறைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில்கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மற்றும் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பல்வேறு அரசியல் […]
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கூட்டு நடவடிக்கைக் குழு தொடர்பான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடை பெறுகிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மேற்குவங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். மேலும், 10 அணிகள் பங்கேற்கும் 18வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. 13 இடங்களில் நடைபெற உள்ள துவக்க துவக்க […]
சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா நட்சத்திர விடுதியில் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. மத்திய அரசு 2026-ல் மக்களவைத் தொகுதிகளை மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்ய திட்டமிட்டுள்ளது. இதனால், மக்கள்தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் […]
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்திருக்கும் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக முன்னதாக தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளை ஒன்றிணைத்து அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக, நாம் தமிழர், தமாகா தவிர மற்ற கட்சியினர் அனைவரும் கலந்து கொண்டு இதில் தொகுதி […]
சென்னை : 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த தொகுதி மறுசீரமைப்பில் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்படும் என்றும், தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டில் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும், ஒருவேளை அதிகப்படுத்தினால் வழக்கமாக விகித சராசரிப்படி தொகுதிகள் எண்ணிக்கை கிடைக்காது என்றும் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில், பாஜக, நாம் […]
சென்னை : நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக, நாளை நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்னை வந்துள்ளார். சென்னை வருகைபுரிந்த, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் வரவேற்றனர். மேலும், தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். அண்மையில் நகைக்கடை அதிபரை கடத்திய வழக்கில் இவர் மூளையாக செயல்பட்டவர் என்று கூறப்பட்ட நிலையில், கிண்டியில் […]
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச் 22) தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. 2026ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் குறைய வாய்ப்புள்ளது. அதற்கு மாறாக, மக்கள் தொகை அதிகமாக உள்ள வட மாநிலங்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாடு, கேரளா, […]
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்க அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இதனால், திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று தொகுதி மறுவரையறை குறித்து வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட் அணிந்து கொண்டு சென்றனர். மக்களவையில் இதுகுறித்து விவாதம் நடத்த தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், தொடர் அமளி […]