“மக்களுக்காக பணியாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு” -அமைச்சர் மனோ தங்கராஜ் நெகிழ்ச்சி!

தமிழக அமைச்சரவை மாற்றம்: ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மனோ தங்கராஜ் அமைச்சராகப் பதவியேற்று கொண்டார்.

Featured image

சென்னை :நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு ஒதுக்கப்பட்டது. மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மனாபபுரம் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மனோ தங்கராஜுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அப்பொழுது, இவருக்கு பால்வளத்துறை மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது, இது இவர் முன்னர் 2023 முதல் 2024 வரை வகித்திருந்த பொறுப்பாகும்.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மனோ தங்கராஜுக்கு மீண்டும் பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இத்துறையை அமைச்சர் ராஜகண்ணப்பன் கவனித்து வந்தார். அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக, ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை மற்றும் கதர் கிராமங்கள் துறை ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பால்வளத்துறை மனோ தங்கராஜுக்கு மாற்றப்பட்டது.

தமிழ்நாடு அமைச்சரவையில் கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த இந்த நடைபெற்ற மாற்றம், 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆறாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட மாற்றமாகும். இந்த நிலையில், தான் பொறுப்பேற்றது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், ” தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக இன்று பதவி ஏற்று கொண்டேன்.

மக்கள் சேவையாற்ற வாய்ப்பளித்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

unknown node