சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது. முருகன் மாநாட்டில் பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் இதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பலவிதமான நிகழ்ச்சிகள், உரைகள், கலை நிகழ்வுகள் இதில் இடம்பெற்றன. இந்த மாநாடு ஆன்மீக நிகழ்வாக […]
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான முருக பக்தர்கள், 15 நாட்கள் விரதம் இருந்து மாநாட்டில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்றார். மேலும், பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த மாநாடு ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்வாக அறிவிக்கப்பட்டாலும், இதற்கு அரசியல் பின்னணி இருப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், […]
சென்னை : ஆங்கிலம் பேசுபவர் வெட்கபட வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 19ம் தேதி புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் ‘மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ” நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள், அத்தகைய சமூகம் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று […]
சென்னை : மின் கட்டணத்தை 3% உயர்த்த மின் வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது என தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசு வரும் ஜூலை மாதம் முதல் 3% வரை மின் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக ராமதாஸ், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர். ஏற்கெனவே, 2024 ஜூலையில் 4.8%, 2023 ஜூலையில் 2.18% கட்டணம் உயர்ந்த நிலையில் தற்போது ஜூலை மாதம் மீண்டும் உயர்த்த முடிவு என தகவல் பரவியது. மேலும், ஆணையத்தின் […]
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு ஒதுக்கப்பட்டது. மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மனாபபுரம் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மனோ தங்கராஜுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அப்பொழுது, இவருக்கு பால்வளத்துறை மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது, இது இவர் […]
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடத்தி வருகின்றனர். இந்தத் திட்டம் அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிந்தைய நிதி பாதுகாப்பை உறுதி செய்தாலும், அரசுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தியது. இதனால், 2004 முதல் தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System – NPS) அறிமுகப்படுத்தப்பட்டு, பழைய திட்டம் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய […]
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம தொழில்கள் துறையை அமைச்சர் பொன்முடிக்கு மாற்றி, வனத்துறையுடன் சேர்த்து காதி, கிராம தொழில்கள் துறையையும் அமைச்சர் பொன்முடி கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று, அமைச்சரவை மாற்றத்திற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தெரிவித்துள்ளார். மேலும், 4 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். […]
சென்னை : கடந்த ஜனவரி 3-ம் தேதி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் திமுக எம்.பி. கதிர் ஆனந்தின் வீடு மற்றும் அவரது சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் அதிரடியான சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனைகள் சுமார் 44 மணி நேரம் நடந்ததாக சொல்லப்படுகிறது. சோதனையின் போது, கல்லூரியின் அலுவலக ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை ஆவணங்கள், கணினி ஹார்ட் டிஸ்க் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கல்லூரியில் பணம் வைக்கும் அறையில், பணம் இருந்ததை கண்டறிந்து, வங்கி ஊழியர்கள் […]
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார் . ஆம் ஆத்மி கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், நேற்று கட்சி, அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில், பதவி விலகிய 24 மணி நேரத்தில் (ஒரே நாளில்) இன்று டெல்லி பாஜக அலுவலகத்தில் அக்கட்சியில் இணைந்தார். இதனால், கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, டெல்லியின் போக்குவரத்து […]
சென்னை : சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனக்குப் குழந்தை பிறந்த போது, தொப்புள் கொடியை வெட்டுவது போன்று வீடியோவை எடுத்து அண்மையில், சமூக வலைதளத்தில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார் இர்ஃபான். இவ்விவகாரத்தில், இர்பான் மீதும் தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர் நிவேதா மீதும் நடவடிக்கை கோரி, சோமஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, யூடியூபர் இர்ஃபானின் மனைவிக்கு பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனை மருத்துவர் நிவேதிதாவிற்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விளக்கம் கேட்டு […]
பாலக்காடு : மின் நெருக்கடிக்கு தீர்வு காண, பகலில் பயன்படுத்துவதற்கு மட்டும் கட்டணத்தை குறைத்து, இரவில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து, கேரள அரசு யோசித்து வருவதாக, கேரள மின்துறை அமைச்சர் கே.கிருஷ்ணன்குட்டி தெரிவித்துள்ளார். கேரளாவில் மின் கணக்கீட்டுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ள நிலையில், பகல் நேர உபயோகத்திற்கு கட்டணத்தை குறைக்கவும், இரவு நேர உபயோகத்திற்கு கட்டணத்தை உயர்த்தவும் திட்டம். இதனால், பீக் ஹவர்களில் தேவையற்ற உபயோகம் தடுக்கப்படும் என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். கேரள மாநில […]
கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி ரூ.1.72 கோடி அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவியை விசாலாட்சி மீதும் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து, இந்த வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் இன்று தண்டனையை அறிவித்தது. அதன்படி சொத்து […]
உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது ரூ.1.72 கோடி அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவியை விசாலாட்சி மீதும் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் இன்று தண்டனையை அறிவித்தது. அதன்படி சொத்து […]
மேற்கு வங்க மாநில அமைச்சராக இருந்த சுப்ரதா சாஹா மாரடைப்பால் காலமானார். மேற்கு வங்க மாநில அமைச்சர் சுப்ரதா சாஹா (வயது 72) மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். கடுமையான நெஞ்சுவலி காரணமாக இன்று காலை முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சாகர்திகி சட்டமன்றத் தொகுதியில் இருந்து மூன்று முறை திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சுப்ரதா சாஹா, 2011, […]
கல்லூரியில் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். புதுமையான தயாரிப்புகளை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வந்தால் போதும். என கிண்டி வேலைவாய்ப்பு திறன் குறித்த கருத்தரங்கில் அமைச்சர் பொன்முடி பேசினார். இன்று சென்னை, கிண்டியில், எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகள் & திறன்களில் முதலீடு செய்வது குறித்து கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அப்போது அந்த கருத்தரங்கில் பேசிய அமைச்சர் பொன்முடி, ‘ கல்லூரியில் நாம் […]
அமைச்சர் மெய்யநாதன், ரயில் பயணத்தின் போது ரத்த அழுத்தம் ஏற்பட்டு உடல் நல குறைவுக்கான சிகிச்சையை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் எடுத்துக்கொண்டார். தற்போது பூரண குணமடைந்து விட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக விளையாட்டு துறை அமைச்சராக இருப்பவர் மெய்யநாதன். இவர் அண்மையில் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்ல ரயில் பயணம் மேற்கொண்டார். அந்த சமயம் ஏற்பட்ட ரத்த அழுத்தம் காரணமாக, இடையில் ரயில் நிறுத்தப்பட்டு, பின்னர் சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு […]
கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை. கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரிசி கடத்தல், பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களில் ஈடுபடும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மீது புகார் அளிக்க 98840 00845 என்ற எண்ணை […]
டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சித் தேர்தல் நடைபெறும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தகவல். வேலூர் மாவட்டம் காட்பாடியில் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய குழு கவுன்சிலர்கள் அறிமுகம் கூட்டம் காட்பாடியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், அரசின் திட்டங்கள் தொகுதி மக்களுக்கு கிடைக்க திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது, நகரத்தில் இருக்கின்ற திமுக கட்சியினர் எல்லா கிராமத்திற்கும் சென்று வாக்குகளை சேகரிக்க […]
40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி அமைச்சரவையில் இரண்டாவது பெண் அமைச்சராக சந்திர பிரியங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து,மே 7 ஆம் தேதியன்று ரங்கசாமி அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றார். பின்னர்,புதுச்சேரி அமைச்சர்கள் தேர்வு செய்வதில் என்.ஆர்.காங்கிரசிற்கும், பாஜகவிற்கும் இடையே இழுபறி நீடித்தது.இதனையடுத்து,பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் இரண்டு அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க முதல்வர் ரங்கசாமி ஒப்புக்கொண்டார்.இதனைத் தொடர்ந்து,அமைச்சரவைக்கான பெயர் பட்டியலை துணை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் அவர்களிடம் […]
கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவிற்கு மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் விருது கடந்த 27 வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பால் பல விளைவுகளை நாடு சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெருந்தொற்று ஏற்பட்டிருக்கும் காலத்தில், மக்களுக்கு சரியான பணியை செய்த காரணத்தால் ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் விருது கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவிற்கு அறிவித்துள்ளனர். கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா இந்த கொரோனா காலத்தில் மக்களுக்கு ஊக்கசக்தியாக பல்வேறு […]