டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை வைத்து உச்சநீதிமன்றத்தில் கேரள செவிலியர் நிமிஷா தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏமனில் கொலை வழக்கில் நிமிஷாவுக்கு வரும் 16ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அந்நாட்டு சிறைத்துறை தெரிவித்துள்ள நிலையில், இந்த மனு மீது நாளை (ஜூலை 11] விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தகவல் தெரிவித்துள்ளன. நிமிஷா பிரியா, 2017இல் […]
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். இந்தத் திட்டத்தின் கீழ், பள்ளிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மணி ஒலிக்கப்பட்டு, மாணவர்களுக்கு தண்ணீர் குடிக்க நினைவூட்டப்படும். இது குறித்த அறிவிப்பை அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். இது குறித்து பேசிய அவர் “கேரளாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் ‘வாட்டர் பெல்’ திட்டத்தை, தமிழ்நாட்டு […]
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. அடுத்த சில நாட்களில் அதிக மழை, பலத்த காற்று மற்றும் திடீர் வெள்ள அபாயம் ஏற்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பல பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளன. அதன்படி, எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா, திருச்சூர், பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய 7 மாவட்டங்களில் இன்று […]
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் எச்சரிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இன்றைய தினம் கேரளாவில் கன மழையை தொடர்ந்து இடுக்கி, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது மிக அதிக மழை பெய்யும் (24 மணி நேரத்தில் 12–20 செ.மீ) என்பதைக் குறிக்கிறது. மேலும், பத்தனம்திட்டா, கோட்டயம், […]
கேரளா : கோழிக்கோடு மாவட்டம், பேய்ப்பூர் கடற்கரையில் இருந்து சுமார் 14 கடல் மைல் தொலைவில், சிங்கப்பூர் கொடியுடன் இயக்கப்படும் சரக்கு கப்பலான MV Wan Hai 503கடந்த ஜூன் 9-ஆம் தேதி அன்று காலை 10:30 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இந்தக் கப்பலில் குளோரோ பார்மேட், டைமெத்தில் சல்பேட், ஹெக்ஸாமெதிலீன் டிசோசைனேட், பைரிடியம் உள்ளிட்ட ஆபத்தான ரசாயனங்கள் இருந்ததால், வெடிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்தது. இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் மீனவர்கள் உடனடியாக […]
கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையில் ஒரு சரக்குக் கப்பல் தீப்பிடித்தது. இந்தக் கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய 270 மீட்டர் நீளமுள்ள கொள்கலன் கப்பலாகும். கொழும்புவில் இருந்து மும்பைக்குச் சென்ற சிங்கப்பூரைச் சேர்ந்த சரக்கு கப்பல் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காலை 10:30 மணியளவில் கப்பலின் தளத்தில் வெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூன் 7 ஆம் தேதி கொழும்பிலிருந்து புறப்பட்ட இந்த கப்பல் ஜூன் 10 […]
கேரளா : மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மெனுவில் மாற்றம் செய்யப்பட்டு, முட்டை பிரியாணி இடம்பெற்றுள்ளது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமே மூன்று மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் பரவிய சிறுவன் ஷங்குவின் வீடியோ தான். வைரலாக பரவிய அந்த வீடியோவில், ஷங்கு அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் உப்புமாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் பொரித்த கோழி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தான். இந்த வீடியோ பரவலான கவனத்தைப் பெற்று, கேரள அரசின் […]
திருவனந்தபுரம்: கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நாளை (ஜூன் 1) முதல் 12ம் தேதி வரை தீவிரம் குறைந்து காணப்படும். தற்பொழுது, கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் கேரளாவில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருப்பதால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. இதனால் மீட்பு பணிகளை மேற்கொள்ள தமிழகத்தில் இருந்து NDRF விரைந்துள்ளது. இந்நிலையில், மழை தொடர்பான […]
கொச்சி : தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கேரளா மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, கனமழை எச்சரிக்கை காரணமாக 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வெள்ளப்பெருக்கு, பயண இடையூறுகள் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் காரணமாக மாநிலம் முழுவதும் […]
கேரளா : கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வழக்கமாக, தென்மேற்கு பருவமழை ஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தொடங்கி ஜூலை 8 ஆம் தேதி இந்தியா முழுவதும் பரவக்கூடும். இது செப்டம்பர் 17 ஆம் தேதி வாக்கில் வடமேற்கு இந்தியாவிலிருந்து பின்வாங்கத் தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதி முழுமையாக விலகும். கடந்த 2009 ஆம் ஆண்டு மே 23 […]
திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள முதல்வர் பினராயிவிஜயன், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்ட இந்த துறைமுகத்தால், சர்வதேச வர்த்தகம் அதிகாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விழிஞ்சம் துறைமுகத்தின் கிரேன்கள் முழுவதும் தானியங்கி வகையை சேர்ந்தது என்பதால் சரக்குகளை விரைவில் கையாள முடியும். பெரிய சரக்குக் கப்பல்கள் கொழும்புவில் நிறுத்துவதற்குப் பதிலாக இந்தியக் கடற்கரைக்கே வருவதை உறுதிசெய்யும் வகையில் […]
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த அதிகாரிகள் வெடிகுண்டு சோதனை பிரிவினரை அனுப்பினர். முதலமைச்சர் அலுவலகம் மற்றும் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்ததால், மோப்ப நாய்கள் மற்றும் சிறப்புக் குழுக்கள் மூலம் முழுமையான ஆய்வு நடந்து வருகிறது. இருப்பினும், இதுவரை இரு இடங்களிலும் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. நேற்றைய தினம், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு […]
கேரளா : சமீபத்தில் ஹிட்டான ‘ஆலப்புழா ஜிம்கானா’, ‘தள்ளுமாலா’ படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ளனர். கொச்சியில் நடைபெற்ற சோதனையில், 1.6 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது, மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. கேரள கலால் துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு நடத்திய சோதனையில், பிரபல மலையாள திரைப்பட இயக்குநர்கள் காலித் ரஹ்மான் மற்றும் அஷ்ரப் ஹம்சா ஆகியோர் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்தனர். புதிய திரைப்படம் […]
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது, ரஜினிகாந்த் கேரளாவில் இருக்கிறார். அங்கு படத்தின் இரண்டாவது ஷெட்யூலுக்கான படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். அட்டப்பாடியில் தனது காரில் இருந்து ரசிகர்களை வாழ்த்தும் ஒரு சமீபத்திய வைரல் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அங்கு கூடிய ரசிகர்கள், ‘தலைவா.. தெய்வமே’ என கோஷம் எழுப்பி அவரை வரவேற்றனர். இதில் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் செய்த செயல்தான் படுவைரலாகி […]
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்த அந்த இளைஞர், உணர்ச்சிவசப்பட்ட நிலையில், தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவுக்கு வந்து, பாலத்தின் உயரமான பகுதியில் நின்று மிரட்டல் விடுத்தார். இந்த தகவல் உடனடியாக பொன்னானி மற்றும் மாறாடு காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்த இடத்திற்கு […]
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறுகிறார் எனக் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு எதிராக தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும், ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றமே தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது. இந்த தீர்ப்புக்கு ஆளும் திமுக அரசு வரவேற்பு தெரிவித்து இருந்தது. இந்த தீர்ப்பு […]
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ”எம்புரான்” படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது. நடிகர்கள் மோகன்லால், பிரித்விராஜ் இணைந்து நடித்த ‘L2: எம்புரான்’ படம் மாபெரும் சாதனை படைத்துள்ளது. அதன்படி, இப்படம் வெளியான முதல் 5 நாள்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூல் செய்த முதல் மலையாளப் படம் என்ற பெருமையை எம்புரான் பெற்றுள்ளது. படத்தில் சில காட்சிகளுக்காக ஒரு தரப்பில் இருந்து விமர்சனங்கள் வந்தாலும், அதையும் கடந்து […]
கேரளா : கேரளாவில் உள்ள ஒரு அங்கன்வாடியில், ஒரு குழந்தை உப்மாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. பலரும் சிறுவனுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டனர். சொல்லப்போனால், மழலையின் இந்த அப்பாவி கோரிக்கை அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தது. அங்கன்வாடியில் பேசிய அந்த குழந்தையின் வீடியோ அம்மாநில அரசின் கண் முன்பே சென்றடைந்துள்ளது. அட ஆமாங்க… கேரள மாநில சுகாதாரம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் […]
கேரளா : வயநாடு மானந்தவாடி பஞ்சரகோலியில் ராதா என்ற பெண் தேயிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் பொழுது, எதிர்பாராம அங்கு வந்த ஆண்புலி கடித்து கொன்றது. இதையடுத்து, அந்த புலியை உயிருடனோ அல்லது சுட்டுப்பிடிக்கவோ நடவடிக்கை எடுக்க மாநில அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், மானந்தவாடி நகராட்சியின் சில பகுதிகளில் நேற்றைய தினம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, புலியை சுட்டுப் பிடிக்க மாநில வனத்துறை முடிவு செய்து தேடிவந்த நிலையில், நேற்று காலை தேடுதல் குழுவினரை புலி தாக்கிய […]
கேரளா : மாநிலம் பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியை சேர்ந்த இளைஞர் ஷாரோன் ராஜ் என்பவரும் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த கிரீஷ்மா என்பவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை காதலித்து வந்தனர். இந்த சூழலில் கடந்த 2022-ஆம் ஆண்டு கிரீஷ்மா வீட்டில் மாப்பிளை பார்த்துள்ளனர். அதற்கு கிரீஷ்மாவும் சம்மதம் தெரிவிக்க காதலித்து வந்த ஷாரோன் ராஜ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனவே, ஷாரோன் ராஜை தீர்த்து காட்டினாள் தான் நம் […]