கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து.!
கேரளாவின் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையில் ஒரு சரக்குக் கப்பல் தீப்பிடித்தது. இந்தக் கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய 270 மீட்டர் நீளமுள்ள கொள்கலன் கப்பலாகும். கொழும்புவில் இருந்து மும்பைக்குச் சென்ற சிங்கப்பூரைச் சேர்ந்த சரக்கு கப்பல் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காலை 10:30 மணியளவில் கப்பலின் தளத்தில் வெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூன் 7 ஆம் தேதி கொழும்பிலிருந்து புறப்பட்ட இந்த கப்பல் ஜூன் 10 ஆம் தேதிக்குள் மும்பையை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாராவிதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த கப்பலில் மொத்தம் 22 பணியாளர்களுடன் கொள்கலன் சரக்குகளை ஏற்றிச் சென்றது. இந்த சம்பவத்தில் நான்கு பணியாளர்கள் காணாமல் போயுள்ளனர், 5 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து, இந்திய கடலோர காவல்படை மீட்புப் பணியைத் தொடங்கியுள்ளது, தீயின் தீவிரமும் கடல் சூழ்நிலையும் மீட்புப் பணியை சிக்கலாக்கியுள்ளன.
காணாமல் போன பணியாளர்களைத் தேடுவதிலும், காயமடைந்தவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மீட்டெடுப்பதிலும் கடலோர காவல்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.கடந்த மாதம், இதே போல் கேரளாவின் ஆலப்புழா கடற்கரையில் லைபீரிய கப்பல் ஒன்று கவிழ்ந்து மூழ்கியது குறிப்பிடப்பதக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
NEET Exam 2025 : நீட் தேர்வுகள் முடிவுகள் வெளியானது!
June 14, 2025