ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

இலங்கையைச் சேர்ந்த ஐங்கரன் மீடியா சொல்யூஷன் நிறுவனம், இலங்கைக்கான தென்னிந்திய துணைத் தூதரகத்தில் புகார் அளித்துள்ளது.

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் 1 மாதங்களுக்கு மேல் இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் இப்போதே தொடங்கிவிட்டது.

அதன் ஒரு பகுதியாக படத்தின் முதல் பாடலான சலம்பல பாடலை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியாயிருந்த அந்த பாடலை சாப் அபியங்கர் சாய் அபயங்கர் தனது குரலில் பாடியிருந்தார்.பாடல் வெளியானதை தொடர்ந்து அருமையான வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விஷயமும் நடந்துள்ளது.

அது என்னவென்றால், இலங்கையை சேர்ந்த பிரபல நிறுவனமான ஐங்கரன் மீடியா சொல்யூஷன் தென்னிந்திய
துணைத் தூதரகத்தில் மதராஸி படத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளது. என்ன புகார் என்றால், இலங்கையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்ததாகவும், அதற்காக செலவிடப்பட்ட ரூ.1.75 கோடி (இலங்கை ரூபாய் மதிப்பில் 5.37 கோடி) தொகையை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் செலுத்தவில்லை என்றும் ஐங்கரன் மீடியா குற்றம்சாட்டியுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் இலங்கையில் படமாக்கப்பட்டன. ஐங்கரன் மீடியா சொல்யூஷன், படப்பிடிப்பிற்கு தேவையான ஒருங்கிணைப்பு மற்றும் உள்ளூர் ஏற்பாடுகளை மேற்கொண்டதாகக் கூறி, செலவுத் தொகையை வழங்குமாறு ஸ்ரீ லட்சுமி மூவிஸிடம் கோரியுள்ளது. இந்தப் புகார், படத் தயாரிப்பில் நிதி தகராறு தொடர்பாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்