Tag: fire accident

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த 3 தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தால் பொதுமக்கள், பணியாளர்கள் அலறியடித்து ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. கரும்புகையுடன் தீ பிடித்ததால் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். முதற்கட்ட தகவல்களின்படி, இந்த தீ விபத்து […]

#Chennai 3 Min Read
tnagar -fireaccident

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக கொல்கத்தா காவல் ஆணையர் மனோஜ் வர்மா தகவல் தெரிவித்துள்ளார். மேலும்,  13 பேர் காயமடைந்தனர், தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்த 14 பேரில் மூன்று பேர் தமிழகத்தின் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல் […]

fire accident 4 Min Read
Kolkata FireAccident

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. தவெக தலைவர் விஜய், கட்சி பொதுச்செயலாளர் ஆனந்த், முக்கிய நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் என பலரும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில், விழா மேடையில் விஜய், மற்ற நிர்வாகிகள் நின்று கொண்டிருக்கும் போது மேடை அருகே பலர் கூடியிருந்ததாக தெரிகிறது. அவர்களை ஒதுங்கி நிற்க சொல்லி முதலில், […]

fire accident 3 Min Read
TVK Vijay - TVK Booth committee meeting

தீ விபத்தில் தப்பிய மகன்! மொட்டை அடித்து நன்றி தெரிவித்த பவன் கல்யாண் மனைவி

ஆந்திரா : ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மனைவி அன்னா லெஜ்னேவா தனது மகன் தீ விபத்தில் சிக்கி உயிர்தப்பியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருமலை வெங்கடேஸ்வரருக்கு நன்றி செலுத்த முடிவு செய்து சில விஷயங்களை செய்திருக்கிறார். கடந்த ஏப்ரல் 8 அன்று, சிங்கப்பூர் பள்ளியில் பயின்று வரும் பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர், அங்கு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியுள்ளார் என்றும், இதனால் கை, கால்களில் காயம் ஏற்பட்டது என்றும் தகவல் வெளியாகி […]

Andhra Pradesh 5 Min Read
Pawan Kalyan wife

தீ விபத்தில் சிக்கிய பவன் கல்யாண் மகன்! விரைவில் சிங்கப்பூர் பயணம்..,

அமராவதி : ஆந்திர பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் இளைய மகன் மார்க் சங்கர் பவனோவிச் சிங்கப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வருகிறார். இவரது மனைவி அன்னா லெஷ்னேவா சிங்கப்பூரில் முதுகலை படிப்பு பயின்று வருவதால் அவரது மகனும் அங்கு பயின்று வருகிறார். இந்நிலையில், சிங்கப்பூர் பள்ளியில் பயின்று வரும் பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர், அங்கு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியுள்ளார் என்றும், இதனால் […]

Andhra Pradesh 2 Min Read
Pawan Kalyan

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு விநியோக மையத்தில் தீ விபத்து!

ஆந்திரப் பிரதேசம்: திருமலை லட்டு கவுண்டர்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்து ஓடினர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலை தேவஸ்தான கவுண்டர் எண் 47ல் இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. கவுன்டரில் இருந்த யுபிஎஸ் கணினியில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அங்கிருந்த அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். யுபிஎஸ் […]

fire accident 3 Min Read
Tirumala Laddu Counter Fire Accident

தெற்கு கலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத் தீ! 5 பேர் பலி!

அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின என ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளை வெளியிட்டு வருகிறது. கலிபோர்னியாவில் அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த மழையால் நிலங்கள் மிகவும் உலர்ந்துள்ளன. இந்த உலர்ந்த நிலைகள், தாவரங்கள் மற்றும் காடுகள் எளிதில் தீ விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஒரு இடத்தில் தீ பற்றியவுடன் மற்ற இடங்களுக்கு பரவ அங்கு ஏற்பட்ட காற்றே முக்கிய காரணமாகவும் […]

#fire 5 Min Read
california fire accident

Live : திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்து முதல்… நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரை…

சென்னை : திண்டுக்கல் மாநகராட்சியில் திருச்சி சாலை பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 6 வயது சிறுமி உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதாவுக்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இன்று அல்லது நாளை […]

#Chennai 2 Min Read
Today Live 13122024

திண்டுக்கல்: மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி குழந்தை உட்பட 7 பேர் பலி!

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் உள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் (City hospital) நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 4 வயது சிறுமி உட்பட7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தீ விபத்தின்போது மருத்துவமனையில் சிக்கி கொண்டவர்களை தனியார் ஆம்புலன்ஸ் உட்பட 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, மருத்துவமனையின் […]

Dindigul 4 Min Read
Fire Accident

டெல்லியில் மர்ம பொருள் வெடிப்பு… PVR தியேட்டருக்கு விரைந்தது தீயணைப்பு வாகனங்கள்!

டெல்லி : டெல்லி பிரசாந்த் விஹார் பகுதியில் உள்ள PVR திரையரங்கம் அருகே பெரும் சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளது. தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். முதற்கட்ட விசாரணையில், இனிப்பு கடைக்கு அருகே ஒரு ஸ்கூட்டரில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. வெடிப்புக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால், வெடிப்பு சத்தம் பெரியதாக […]

#Blast 3 Min Read
Delhi Prashant Vihar PVR blast

உத்தரப்பிரதேசம்: மருத்துவமனையில் மின்கசிவால் தீ விபத்து – 10 குழந்தைகள் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம் குழந்தைகள் 10 பேர் பலியாகினர். பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சை பிரிவில் (NICU) வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தின்போது, குழந்தைகள் வார்டில் 54 பேர் இருந்த நிலையில், 26 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். எனினும் 16 குழந்தைகள் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். சரியாக, இரவு 10.30 முதல் 10.45 மணிக்குள் இந்த […]

#UttarPradesh 3 Min Read
newborns die - Jhansi govt hospital

கேரளா திருவிழாவில் பட்டாசு தீ விபத்து.! 150 படுகாயம்., 8 பேர் கவலைக்கிடம்.? 

கேரளா : காசர்கோடு மாவட்டத்தில் நீலேஸ்வரம் பகுதியில் வீரராகவர் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவுக்காக கோயில் அருகே ஒரு சேமிப்பு கிடங்கில் பட்டாசு வைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்த பட்டாசு கிடங்கில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த பட்டாசு தீ விபத்தில் இதுவரை 150 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அவர்கள் காசர்கோடு, கண்ணூர், மங்களூரு பகுதி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தகவலறிந்து, தீயணைப்பு […]

#Kerala 4 Min Read
Kerala Fire Accident

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து விபத்து.. தொழிலாளர்களின் நிலை என்ன?

விருதுநகர்:  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், முத்தால் நாயக்கன்பட்டி – கீழ் ஒட்டம்பட்டி செல்லும் வழியில் உள்ள திருமுருகன் பட்டாசு ஆலையில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்த தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்தின்போது, அதிர்வுகள் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு உணரப்பட்டதாககவும், வெடிவிபத்து நடந்த பட்டாசு ஆலையில் சுமார் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலையை சுற்றியிருந்த 30-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது. 4 மணி […]

#Crackers 3 Min Read
Fire Accident

பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து – 2 பெண்கள் பலி.!

மதுரை : மதுரை மாவட்டம் கட்டாரபாளைம் பகுதியில் விசாகா என்கிற பெண்கள் விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. விடுதியில் இன்று அதிகாலை குளிர்சாதன பெட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. உடனே, அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததும், விரைந்து வந்த தீயணைப்பு வீரரக்ள் தீயை அணைத்தனர். முதற்கட்ட தகவலின்படி, பிரீட்ஜ் வெடித்து அதில் உள்ள சிலிண்டர் மூலமாக வெளியேறிய நச்சுப் புகையால் 5 பேர் மயங்கி விழுந்தனர். அதில், சரண்யா, பரிமளா ஆகிய […]

#Madurai 4 Min Read
madurai hostel

தெலுங்கானா மார்க்கெட்டில் தீ விபத்து! 20 பழக்கடைகள் நாசம்!

தெலுங்கானா : ஹுசூராபாத் நகரில் உள்ள அம்பேத்கர் சௌக்கில்  மார்க்கெட்  ஒன்று இருக்கிறது.  இந்த மார்க்கெட்டில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பதற்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை என்றாலும், திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக பழக்கடைகளில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றும் அணைக்க முடியவில்லை. பிறகு, உடனடியாக  […]

fire accident 5 Min Read
huzurabad fire accident

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து.! 2 பேர் உயிரிழப்பு.!

சிவகாசி: காளையார்குறிச்சியில் உள்ள தனியார் பாட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் முருகன் என்பவருக்கு சொந்தமாக தனியார் பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த ஆலையில் பல்வேறு அறைகள் உள்ளன. இதில் இன்று காலை குறிப்பிட்ட ரக பட்டாசு தயாரிக்கும் அறையில் 4 தொழிலாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது, பட்டாசுகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் சம்பவ இடத்திலேயே மாரியப்பன், […]

#Sivakasi 3 Min Read
Dead

விருதுநகர் பட்டாசு ஆலை தீவிபத்து.! 3 பேர் பலி.!

விருதுநகர்: பட்டாசு ஆலை தீவிபத்து என்பது விருதுநகர் மாவட்டத்தில் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இதில் பரிதாபமாக தொழிலாளர்கள் உயிரிழக்கும் சோக நிகழ்வுகளும் தொடர்கதையாகி வருகிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பந்துவார்பட்டியில் மகாதேவன் என்பவருக்கு சொந்தமாக செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 3 அறைகள் வெடித்து சிதறி சேதமடைந்தன. மேலும்,  பட்டாசு முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் என […]

Cracker Factory Fire accident 2 Min Read
Dead

விஜய்யின் உத்தரவை தாண்டி கொண்டாட்டம்.. சிறுவனின் கைகளில் தீப்பிடித்த அதிர்ச்சிக் காட்சி.!

சென்னை : திரைத்துறையில் உச்சத்தில் இதுக்கும் தளபதி விஜய், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இதனிடையே, நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி சோக சம்பவத்தை தொடர்ந்து, தனது பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டாம் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கூறினார். அதற்கு பதிலாக, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுமாறும், இந்த சோகமான நேரத்தில் கொண்டாடுவதைத் தவிர்க்கவும் ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டார். இந்த […]

#Chennai 4 Min Read
vijay kallakurichi

நின்றுகொண்டிருந்த ஹைதராபாத் விரைவு ரயிலில் தீ விபத்து!

தெலங்கானா : செகந்திராபாத் ரயில் நிலைய பாலத்தில் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹைதராபாத் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தற்பொழுது, தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோவில், ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் பாலத்தில் இருந்து தெரியும் இந்த சம்பவம், அதிகப்படியான புகை மூட்டத்தால் சூழ்ந்துள்ளன. இந்த ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இருந்தாலும், தீ விபத்துக்கான காரணம் மற்றும் காயங்கள் குறித்த […]

fire accident 3 Min Read
Secunderabad railway station FIRE

கொல்கத்தா: மாலில் தீ விபத்து! மக்களை மீட்கும் பணிகள் தீவிரம்!

கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஒரு மாலில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அக்ரோபோலிஸ் மாலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இது வரை வெளியாகவில்லை என்றாலும் உள்ளே இருக்கும் மக்களை காக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவின் ராஜ்தங்கா மெயின் ரோட்டில் அமைந்துள்ள அக்ரோபோலிஸ் வணிக வளாகத்தின் 5-வது மாடியில் அமைந்துள்ள ஃபுட் […]

fire accident 4 Min Read
Kolkata Fire Accident