திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!
கோவை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், மைசூரு செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ஆகியவை சென்னை சென்ட்ரலுக்கு பதிலாக அரக்கோணத்தில் இருந்து புறப்படும்.

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு தீ விபத்துக்குள்ளானது. மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு பெட்ரோலிய பொருட்களை (டீசல்) ஏற்றிச் சென்ற இந்த ரயிலில், திருவள்ளூர்-ஏகாட்டூர் ரயில் நிலையம் அருகே தீப்பிடித்தது. 52 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் 4 வேகன்கள் எரிந்து சேதமடைந்தது.
இந்த நிலையில், சென்னையில் இருந்து செல்லும் 12 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் வசதிக்காக திருவள்ளூரிலிருந்து சென்னை, அரக்கோணம் மார்க்கத்தில் 30 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும், திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தற்போது தீ 100% அணைக்கப்பட்டதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், விரைவு ரயில்கள் செல்லும் மெயின் வழித்தடத்தில் அறுந்து கிடந்த மின்சார கேபிள்களை மீண்டும் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தண்டவாளத்தை சரி செய்யும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன, சிறிது நேரத்தில் ரயில் குறிப்பிட்ட ஒரு வழித்தடத்தில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், மைசூரு செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ஆகியவை சென்னை சென்ட்ரலுக்கு பதிலாக அரக்கோணத்தில் இருந்து புறப்படும்.
புறப்படும் இடம் மாற்றம்:
ரயில் எண்: 12697 சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் வண்டி காட்பாடியில் இருந்து புறப்படும்.
ரயில் எண்: 16203 சென்னை-திருப்பதி வண்டி திருத்தணியில் இருந்து புறப்படும்.
ரயில் எண்: 22698 சென்னை-ஹுப்ளி வண்டி ஜோலார்பேட்டையில் இருந்து புறப்படும்.
ரயில் எண்: 16551 சென்னை-அசோகபுரம் எக்ஸ்பிரஸ் அரக்கோணத்தில் இருந்து புறப்படும்.
ரயில் எண்: 12027 சென்னை-கே.எஸ்.ஆர் பெங்களூரு சதாப்தி, இன்று அரக்கோணத்தில் இருந்து புறப்படும்.
ரயில் எண்: 12673 சென்னை-கோவை எக்ஸ்பிரஸ், இன்று அரக்கோணத்தில் இருந்து புறப்படும்.
ரயில் எண்: 12671 சென்னை-மேட்டுப்பாளையம் ரயில் இன்று காட்பாடியில் இருந்து புறப்படும்.
ரயில் எண்: 16021சென்னை-அசோகபுரம் காவேரி எஸ்பிரஸ் இன்று அரக்கோணத்தில் இருந்து புறப்படும்.
தாமதம்:
ரயில் எண்: 12685 சென்னை-மங்களூரு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 2.10 மணி நேரம் தாமதமாக மாலை 6.30க்கு புறப்படும்.
ரயில் எண்: 20664 சென்னை-மைசூரு வந்தே பாரத், ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 6.45 மணிக்கு புறப்படும்.
அரக்கோணத்தில் இருந்து புறப்படும் 3 ரயில்கள்
சென்னை சென்ட்ரல் – கோவை எக்ஸ்பிரஸ் (இரவு 10 மணி)
சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (இரவு 7.30)
சென்னை சென்ட்ரல் – அசோகபுரம் காவேரி எக்ஸ்பிரஸ் (இரவு 9.15)
ரத்து செய்யப்பட்ட ரயில்கள் :
ரயில் எண்: 12676 கோவை-சென்னை கோவை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்.
ரயில் எண்: 12244 கோவை-சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ்.
ரயில் எண்: 12679 சென்னை-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்.
ரயில் எண்: 20643 சென்னை-கோவை வந்தே பாரத் ரயில்.