வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் ஆகியவை இணைந்து ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டு, ராக்கெட் ஏவுதல், விண்வெளி வீரர்களின் ஸ்பேஸ் பயணம், பூமியின் நேரலை காட்சிகளை ஒளிபரப்பவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோடைக்காலம் முதல் அனைத்து உறுப்பினர்களின் ஒரு பகுதியாக, இந்த சேவை தளத்தில் கிடைக்கும் என்று விண்வெளி நிறுவனமும், ஸ்ட்ரீமிங் தளமும் அறிவித்தன. அதன்படி, […]
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ”ரொம்ப Sorry-ம்மா… நடக்கக்கூடாதது நடந்திருச்சு” என்று கூறி ஆறுதல் தெரிவித்தார். இதனை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில், ”முதல்வரின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம், கொலை செய்தது உங்கள் அரசு. ‘SORRY’ என்பது தான் உங்கள் பதிலா? முதல்வரின் பேச்சில் […]
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும் யாராலும் நடந்துவிடக் கூடாது என்று காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின், சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் உறுதியளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு புகாரில் கடந்த ஜூன் 28ம் தேதி அன்று விசாரணைக்காக காவல் […]
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார். இந்த விவகாரம் குறிப்பாக, திமுக அரசுக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆகியோர் அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். அப்பொழுது, அமைச்சர் பெரிய கருப்பனின் […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய கூட்டாளியாகவும் ஆலோசகராகவும் இருந்த எலோன் மஸ்க், இப்போது டிரம்பின் மசோதா மீது, கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார். மின்சார வாகனங்களுக்கான வரிச் சலுகைகளை ரத்து செய்யும் மசோதாவை ட்ரம்ப் ஆதரித்ததால், இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. மஸ்க் இந்த மசோதாவைபைத்தியக்காரத் தனமானது மட்டுமல்ல, அழிவுக்கு வழிவகுக்கும் என்று விமர்சித்து, தனது எக்ஸ் […]
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித் குமார் உடற்கூராய்வு அறிக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நிலையில், உடற்கூராய்வு அறிக்கையை மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஷ்குமார் தாக்கல் செய்தார். இந்த வழக்கில், திருப்புவனம் நீதிமன்ற நடுவர் வெங்கடாபதி பிரசாத், கோயில் உதவி ஆணையர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி டீன் ஆகியோர் ஆஜராகினர். இந்த […]
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த விபத்தில் ஆலையில் இருந்த 5 அறைகள் இடிந்து தரைமட்டமானது. இதில் பேர் சம்பவ இடத்திலையே பலியாகினர். இதில், மகாலிங்கம்(55), செல்லப்பாண்டியன், ராமமூர்த்தி(38), ராமஜெயம் (27), வைரமணி(32) மற்றும் […]
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்பொழுது, காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, நேற்றைய தினம் ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக, தற்பொழுது மானாமதுரை துணைக் காவல் […]
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த உடனேயே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையின்போது அவரை போலீசார் கம்பத்தில் கட்டி பிரம்பால் தாக்கியதாகவும், இதில் 18 காயங்களுடன் […]
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையின்போது அவரை போலீசார் கடுமையாக பிரம்பால் தாக்கியதாக கூறப்படும் நிலையில், அது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், சீருடை அணியாத காவலர்கள் அஜித் குமாரை கம்பத்தில் கட்டி, கொடூரமாக தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. […]
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன் தொகையுடன் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கி வருகிறது. இந்நிலையில், கமிஷன் தொகையை குறைக்காவிட்டால் நாளை (ஜூலை 1) முதல் சென்னையில் இவ்விரு நிறுவனங்கள் மூலம் வரும் ஆர்டர்களுக்கு உணவு வழங்கப்படாது என தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. உணவகங்களிடம் இருந்து சராசரியாக 30% வரை ஸ்விக்கி, சொமேட்டோ நிறுவனங்கள் கமிஷன் வசூலிப்பதாகவும், சற்று பெரிய உணவகமாக […]
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மொயீன் அலி பயிற்சியாளர் ஆலோசனைப் பணியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து தற்போது ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடந்த வாரம் லீட்ஸில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன், வெற்றியின் […]
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று மாலை 5.15 மணிக்குப் புறப்பட்டபோது ரத்து செய்யப்பட்டது. ஓடுபாதையில் செல்லும்போது கோளாறு கண்டறியப்பட்டதால், பயணிகள் பாதுகாப்பு கருதி விமானம் நிறுத்தப்பட்டது. பின்னர், பயணிகள் இறக்கிவிடப்பட்டனர், இதையடுத்து விமானம் விமான நிலையத்தின் பார்க்கிங் பகுதிக்கு மாற்றப்பட்டது. இதில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் உட்பட 70 பயணிகள் இருந்தனர். பயணிகளில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் […]
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக இருக்கும் என்றும், இதற்கு ராஜன் வகையறா என தலைப்பு வைக்கப்படவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு தனுஷ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், வடசென்னை உரிமை அவரிடம் உள்ளதால் ரூ.20 கோடி வரை கொடுத்து NOC சான்றிதழ் பெற வேண்டுமென அவர் தரப்பில் டிமாண்ட் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வந்தது. இந்த […]
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும் குறைவான 2ம் வகுப்பு பயணத்திற்கு கட்டண உயர்வு இல்லை. 500 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 0.5 பைசா உயர்த்தட்பட்டுள்ளது. இது பல ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் ரயில் கட்டணத்தில் உயர்த்தப்படும் முதல் முறை உயர்வாகும். ரயில்வேயின் இயக்க செலவுகள், எரிபொருள் செலவுகள், மற்றும் பராமரிப்பு செலவுகள் உயர்ந்து வருவதால், இந்த கட்டண […]
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனர். பிற்பகல் 2 மணியளவில் மோங்ஜாங் கிராமத்திற்கு அருகே இந்த தாக்குதல் நடந்தது. இது குறித்து போலீசார் கூறுகையில், தாக்குதல் நடத்தியவர்கள் பதுங்கியிருந்து இந்த சம்பவத்தை நடத்தியதாக தெரிவித்தனர். மேலும், இந்த தாக்குதல் நடத்தியவர்கள் மிக அருகில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. குறிப்பாக, சம்பவ இடத்திலிருந்து 12க்கும் […]
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாகியுள்ளார். இந்த வழக்கு, காதல் திருமணம் செய்த இளைஞரின் 17 வயது சகோதரனை கடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றம், ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. […]
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார் (வயது 24) என்பவர் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினரால் அஜித்குமார் தாக்கப்பட்டதாகவும், இதனால் அவர் உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த சம்பவம் காவல்துறையின் செயல்பாடுகள் மீது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த விவகாரம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும் வெளிப்படையான மற்றும் […]
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் கடந்த ஜூன் 25 அன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க அரசியலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, ஆர்.ஜி.கார் […]