Tag: #Nasa

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் ஆகியவை இணைந்து ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டு, ராக்கெட் ஏவுதல், விண்வெளி வீரர்களின் ஸ்பேஸ் பயணம், பூமியின் நேரலை காட்சிகளை ஒளிபரப்பவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோடைக்காலம் முதல் அனைத்து உறுப்பினர்களின் ஒரு பகுதியாக, இந்த சேவை தளத்தில் கிடைக்கும் என்று விண்வெளி நிறுவனமும், ஸ்ட்ரீமிங் தளமும் அறிவித்தன. அதன்படி, […]

#Nasa 4 Min Read
NASA - Netflix

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) வெற்றிகரமாக அடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர். இந்த பயணத்தில் சுக்லாவுடன், நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் பெக்கி விட்சன் (அமெரிக்கா), ஸ்லாவோஸ் உஸ்நான்ஸ்கி-விஸ்னிவ்ஸ்கி (போலந்து), மற்றும் திபோர் கபு (ஹங்கேரி) ஆகியோர் பயணித்தனர். இந்த பயணம், தொழில்நுட்ப பிரச்சினைகளால் ஆறு முறை தடைபட்ட பின்னர், ஜூன் […]

#ISRO 5 Min Read
Axiom4Mission

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது இஸ்ரோ, நாசா, ஆக்சியம் ஸ்பேசின் கூட்டு முயற்சியாக மனிதர்களை ISS-க்கு அனுப்பும் ஆக்சியம்-4 திட்டமாகும். இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, அமெரிக்கா, போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு புறப்பட்டது ஃபால்கன் 9 ராக்கெட் மூலமாக சர்வதேச விண்வெளி நிலையம் புறப்பட்டனர். இன்று மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை […]

#ISRO 4 Min Read
Axiom 4 Mission Live

இன்று மாலை ISS-க்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்.! அப்போது என்ன நடக்கும்?

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணம் பல தடைகளுக்கு பின், இறுதியாக நேற்றைய தினம் மதியம் 12:01 மணி அளவில் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஒரு வரலாற்று சிறப்புமிக்க விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது. நாசாவின் தகவலின்படி, ஆக்ஸியம்-4 குழுவினரை ஏற்றிச் சென்ற ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் இப்பொது […]

#ISRO 7 Min Read
NASA - Axiom4

விண்வெளிக்கு புறப்படும் முன் AR ரஹ்மான் பாடலை விரும்பி கேட்ட சுபான்ஷு சுக்லா! என்ன பாட்டு தெரியுமா?

அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) பயணம் மேற்கொள்கின்றனர். இந்தப் பயணம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதள வளாகம் 39A இலிருந்து இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 வீரர்களை, க்ரூ டிராகன் விண்கலம் மூலம் பால்கான் 9 ராக்கெட் […]

#ISRO 5 Min Read
Subhanshu Shukla arr

“140 கோடி மக்களின் வாழ்த்துகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்கிறார் சுக்லா”- பிரதமர் மோடி வாழ்த்து.!

டெல்லி : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை சுமந்து கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி பயணத் திட்டத்தின்படி பிறநாட்டு விண்வெளி வீரர்கள் 3 பேருடன் சுக்லாவும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்கிறார். இதன்மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் இந்தியர், விண்வெளிக்கு செல்லும் 2-வது இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார். பணி 6 முறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, சுப்ன்ஷு சுக்லா இறுதியாக புறப்பட்டார். அவரது ஆக்சியம்-4 பணி வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. […]

#ISRO 3 Min Read
Space X - ISRO

விண்ணில் சீறிப் பாய்ந்தது ‘ஃபால்கன் 9 ராக்கெட்’.., 41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளியில் இந்தியர்..!

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை தாண்டி விண்ணில் பாய்ந்தது. முன்னதாக, 6 முறை இந்த விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அனைத்தும் சீரான நிலையில், விண்வெளிக்கு பறந்துள்ளார் இந்தியா விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா. Liftoff of Ax-4! pic.twitter.com/RHiVFVdnz3 — SpaceX (@SpaceX) June 25, 2025 ஆக்சியம்-4 விண்கலம், புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள […]

#ISRO 6 Min Read
Axiom4 Launch

சற்று நேரத்தில் விண்வெளி பயணம்.., டிராகன் விண்கலனின் தொலைதொடர்பு சோதனை நிறைவு – ஸ்பேஸ் எக்ஸ்!

அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து ‘ஆக்சியம் -4’ மனித விண்வெளி பயணத்துக்கு திட்டமிட்டது. இதில் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா, போலாந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரி வீரர் திபோர் கபு மற்றும் அமெரிக்க வீரர் பெக்கி விட்சன் ஆகியோர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல தயார் நிலையில் உள்ளனர். பல்வேறு காரணத்தால் 6 முறை பயணம் தடைப்பட்ட நிலையில், […]

#ISRO 5 Min Read
Axiom Space

“இந்தியரின் விண்வெளி பயணம் திட்டமிட்டபடி நடைபெறும்” – ஸ்பேஸ் எக்ஸ்.!

அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) பயணம் மேற்கொள்கின்றனர். இந்தப் பயணம் அமெரிக்காவின்  புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதள வளாகம் 39A இலிருந்து இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 வீரர்களை, க்ரூ டிராகன் விண்கலம் மூலம் பால்கான் 9 ராக்கெட் அழைத்துச் […]

#ISRO 4 Min Read
Axiom4 - Nasa

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம் – 4 திட்டம்! காரணம் என்ன?

நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்லும் முக்கியமான தனியார் விண்வெளி பயணமாகும். இந்த திட்டம், பல்வேறு தொழில்நுட்ப காரணங்களால் ஏற்கனவே ஜூன் 19, 2025 அன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது, ஜூன் 22, 2025 (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி மதியம் 1:12 மணிக்கு (1:12 PM IST) ஸ்பேஸ்எக்ஸ்-இன் பால்கன் 9 ராக்கெட்டில் […]

#ISRO 5 Min Read
Axiom 4 Mission

ஆக்சிஜன் லீக்.., இந்தியரின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு.!

 ஃபுளோரிடா : இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து செல்லும் ஆக்சியம்-4 திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது, இறுதிக்கட்ட சோதனையின்போது ஃபால்கன் 9 ராக்கெட்டின் உந்துவிசை அமைப்பில் கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. ஸ்பேஸ்எக்ஸ் குழுக்கள், LOx கசிவை சரிசெய்யும் வகையில், Ax-4 பணிக்காக நாளை ஃபால்கன் 9 ராக்கெட் ஏவப்படுவது ஒத்திவைக்கப்படுவதாகவும், பழுதுபார்ப்பு பணிகள் மற்றும் விண்வெளி தூரம் கிடைப்பதைப் பொறுத்து புதிய ஏவுதள தேதி பகிரப்படும் என்றும் […]

#ISRO 6 Min Read
AX4 - NASA

விண்வெளிக்கு செல்லும் சுபான்ஷு சுக்லா! கொண்டு செல்லும் உணவுகள் என்னென்ன தெரியுமா?

மெரிட் தீவு : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம் மிஷன் 4 (Ax-4) இன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நாளை  செல்லவிருக்கிறார். முன்னதாக இவர் மே மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், அதன்பிறகு ஜூன் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக ஏவுதல் ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்றும் நடைபெறவிருந்த மோசமான வானிலை காரணமாக அதன் ஏவுதல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட […]

#ISRO 5 Min Read
Shubhanshu Shukla FOOD

சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு.! மீண்டும் எப்போது?

டெல்லி : ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 திட்டத்தின் கீழ், இந்தியா, அமெரிக்கா, போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) அனுப்ப உள்ளது.  இந்த பணி அமெரிக்காவின் விண்வெளி பயண நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் நாசாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர, எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் இந்த பணியில் முக்கிய பங்கு வகிக்கும். இருப்பினும், இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவை […]

#ISRO 6 Min Read
axiom-4 mission

விண்வெளியில் மற்றொரு வரலாறு! ராக்கெட்டில் கிளம்பும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால்,  சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய (ISS) பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். வரும் மே மாதம் தொடங்க உள்ள இந்தப் பயணத்தில், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டனான சுபான்சு சுக்லா, ஆக்ஸியம் மிஷன் 4 (Ax-4) மூலம் விண்வெளிக்குச் செல்கிறார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISRO மற்றும் சர்வதேச ஒத்துழைப்புடன் நிகழவுள்ள இந்த மிஷன், இந்தியாவின் விண்வெளித் திறன்களை உலக அரங்கில் வெளிப்படுத்தும் […]

#Nasa 5 Min Read
Shubhanshu Shukla

சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்ல தயாராகும் இரண்டாவது இந்தியர்.! யார் இந்த சுபான்ஷு சுக்லா?

டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ககன்யான் பணிக்கான ‘முதன்மை’ விண்வெளி வீரராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப் கேப்டனும் இந்திய விமானப்படை (IAF) அதிகாரியுமான சுபன்ஷு சுக்லா, இந்த ஆண்டு மே மாதம் நாசாவின் ஆக்சியம் மிஷன் 4 குழுவினருடன் சர்வேதேச விண்வெளிக்குச் செல்வார். அமெரிக்க விண்வெளி நிறுவனத்தின் கூற்றுப்படி, மே 2025 க்கு முன்பு ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் குழுவினர் விண்வெளி நிலையத்திற்கு புறப்பட மாட்டார்கள். மேலும், குழுவினர் 14 நாட்கள் சுற்றுப்பாதை […]

#Nasa 6 Min Read
Indian Astronaut Shubhanshu Shukla

மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் விண்வெளி செல்வீர்களா? சுனிதா வில்லியம்ஸ் சொன்ன பதில்!

ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) சென்று எதிர்பாராத விதமாக 9 மாதங்கள் அங்கு சிக்கித் தவித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர் ஆகியோர் மார்ச் 20 அன்று பூமிக்குத் திரும்பினார்கள். இருப்பினும், நீண்ட மாதங்களாக அவர்கள் விண்வெளியில் இருந்த காரணத்தால் பூமியின் வளிமண்டலத்திற்கு ஏற்ப அவர்களுடைய உடல் நிலை […]

#Nasa 7 Min Read
sunita williams

9 மாத காத்திருப்பு… 17 மணி நேர பயணம்! விண்வெளி வீரர்கள் ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்பட்டது ஏன்?

ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ் X-ன் ‘ட்ராகன்’ விண்கலம் மூலம், கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு பிறகு 17 மணி நேர பயணத்திற்குப் பின், இன்று பத்திரமாக பூமிக்குத் திரும்பினர். இன்று (மார்ச் 19 ஆம் தேதி) இந்திய நேரப்படி அதிகாலை 3.27 மணியளவில் அமெரிக்காவின் புளோரிடா கடல்பகுதியில் டிராகன் கேப்சூல் இறங்கியது. தரையிறங்கிய கேப்சூலை உடனே நாசா குழுவினர் சிறிய படகுகள் […]

#Nasa 8 Min Read
Sunita Williams - NASA

விண்வெளி நாயகி கடந்து வந்த பாதை… சுனிதாவின் ஆகாய வாழ்க்கை.!

ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலால் திட்டமிட்டபடி திரும்பவில்லை. இதையடுத்து நாசா, ஸ்பேஸ் எக்ஸ் முயற்சியால் SpaceX Crew-9 விண்கலம் மூலம் 9 மாத காத்திருப்புக்குப் பிறகு விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 8 நாட்கள் ஆய்வுப் பணிக்காக சென்ற அவர்கள், விண்கலத்தில் […]

#Nasa 9 Min Read
sunita williams

LIVE : பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல்… அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் வரை.!

சென்னை : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது. மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராதவர்கள் விவரங்களை சேகரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 9 மாத காத்திருப்புக்குப் பிறகு விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் ஆகியோர் […]

#Nasa 2 Min Read
tamil live news

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸை வரவேற்ற டால்பின்ஸ்.! அறிய காட்சி…

ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்பியுள்ளனர். இன்று (மார்ச் 19 ஆம் தேதி) இந்திய நேரப்படி அதிகாலை 3.27 மணியளவில் அமெரிக்காவின் புளோரிடா கடல்பகுதியில் டிராகன் கேப்சூல் இறங்கியது. இந்தத் தருணத்தில், ஒரு அற்புதமான நிகழ்வாக, டால்பின்களின் கூட்டம் விண்கலத்தைச் சுற்றி வட்டமடித்தது. இது நாசாவின் நேரடி ஒளிபரப்பில் பதிவாகி, உலகம் முழுவதும் உள்ள […]

#Nasa 4 Min Read
NASA astronaut Sunita Williams return