சிவகாசி பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவிப்பு..!

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த விபத்தில் ஆலையில் இருந்த 5 அறைகள் இடிந்து தரைமட்டமானது. இதில் பேர் சம்பவ இடத்திலையே பலியாகினர். இதில், மகாலிங்கம்(55), செல்லப்பாண்டியன், ராமமூர்த்தி(38), ராமஜெயம் (27), வைரமணி(32) மற்றும் லட்சுமி ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர்.

மேலும், 90% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சில தொழிலாளர்களுக்கு சிவகாசிஅரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆலையின் போர்மேனை போலீஸார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இப்பொது, உயிரிழந்த ஆறு பேரின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai