உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, சான் ரேச்சல் கருப்பழகி பிரிவில் உலக அழகி பட்டம் வென்றவர். அவர் பேஷன் ஷோக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இதில், ஏற்பட்ட நஷ்டம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. […]
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. புதுச்சேரியில் புதிய நியமன எம்எல்ஏக்களாக பாஜகவைச் சேர்ந்த மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். செல்வம் (பாஜக மூத்த நிர்வாகி, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்) தீபாய்ந்தான் (முன்னாள் எம்எல்ஏ) ராஜசேகர் (காரைக்காலைச் சேர்ந்த தொழிலதிபர், பாஜக) இந்த நியமனத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, நியமன எம்எல்ஏக்களாக இருந்த […]
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று மாலை 5.15 மணிக்குப் புறப்பட்டபோது ரத்து செய்யப்பட்டது. ஓடுபாதையில் செல்லும்போது கோளாறு கண்டறியப்பட்டதால், பயணிகள் பாதுகாப்பு கருதி விமானம் நிறுத்தப்பட்டது. பின்னர், பயணிகள் இறக்கிவிடப்பட்டனர், இதையடுத்து விமானம் விமான நிலையத்தின் பார்க்கிங் பகுதிக்கு மாற்றப்பட்டது. இதில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் உட்பட 70 பயணிகள் இருந்தனர். பயணிகளில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் […]
புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று குடியரசு துணை தலைவர், “தேசத்தைக் கட்டி எழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைதன்மை” என்ற தலைப்பில் ஜிப்மர் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், இந்த நிகழ்வில் புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர் கே. கைலாஷ்நாதன், முதல்வர் என். ரங்கசாமி, சட்டமன்ற சபாநாயகர் ஆர். செல்வம், ராஜ்யசபா எம்.பி. எஸ். செல்வகணபதி, மக்களவை எம்.பி. […]
புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் விசா காலக்கெடு குறித்து முக்கிய உத்தரவு வெளியானது. SAARC விசா உள்ளவர்கள் நேற்று முன் தினம் […]
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் மாநில நிதிநிலை அறிக்கை 2025 2026 சில தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து உறுப்பினர்களின் பல்வேறு கோரிக்கைகள் கேட்கப்பட்டது. இன்று புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரின் 7வது நாளில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவித்தார். அதில், ரேஷன் பொருட்கள் வீடு தேடி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்ற அறிவிப்பு, உப்புத்தண்ணீர் அதிகளவில் இருக்கும் கடற்கரையோர உப்பள பகுதி மக்களுக்கு தினமும் 20 லிட்டர் இலவச குடிநீர் […]
புதுச்சேரி : புதுச்சேரி – கடலூர் சாலையில் தவளக்குப்பம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் சிறுமி, தனக்கு உடல்நிலை சரியில்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து, அச்சிறுமியை மருத்துவரிடம் அழைத்து சென்ற பிறகே சிறுமி பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அப்பகுதி ஊர்மக்கள் நேற்று (பிப்ரவரி 14) மாலை திரளாக தனியார் பள்ளிக்கு சென்று அந்த குறிப்பிட்ட ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்தனர். மேலும், […]
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி அரசு மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியீட்டு அறிவித்துள்ளது. கந்தூரி விழா என்றால் என்ன? காரைக்கால் கந்தூரி விழா என்பது தமிழ்நாட்டின் காரைக்கால் பகுதியில் உள்ள நகர்துணி தர்காவில் (Nagore Dargah) நடைபெறும் முக்கியமான இஸ்லாமிய மத விழாக்களில் ஒன்றாகும். இது நகூர் ஆண்டவர் ஸந்தநூல் அப்துல் காதிர் ஷா ஓலியாவின் நினைவாக ஆண்டுதோறும் மிகுந்த பக்தி […]
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்குவது வழக்கம். அதே போல இந்தாண்டும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை இடம் பெற்ற பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு. […]
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று இரவு கடற்கரை சாலையில் நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்க, இன்று மதியம் 2:00 மணி முதல் 1ம் தேதி காலை 9:00 மணி வரை ஒயிட் டவுன் பகுதிக்குள் உள்ளே வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு, பாதுகாப்பு குறித்து, காவல் துறை தலைவர் திரு அஜித்குமார் சிங்லா தலைமையில் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. இதில், புத்தாண்டை […]
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும் வாட் வரியை அதிகரித்து அதனை ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வர உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அண்டை மாநிலங்களுக்கும் புதுச்சேரிக்கும் இடையேயான பெட்ரோல், டீசல் விலை வித்தியாசமும் குறையும். புதுச்சேரியில் பெட்ரோல் மீதான வாட் வரி 14.55%-லிருந்து 16.98%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, காரைக்காலில் 14.55%லிருந்து 16.99%ஆகவும், மாஹேவில் 13.32%லிருந்து 15.79%ஆகவும், ஏனாமில் 15.26%லிருந்து 17.69%ஆகவும் […]
புதுச்சேரி : மத்திய கல்வி அமைச்சகம் நேற்று திடீரென பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விதிமுறையில் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டு வருவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், வழக்கமாக நடைமுறையில் இருக்கும் 1-8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்பதில், 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும் என்ற நடைமுறையை கொண்டு வந்துள்ளதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்ததை தொடர்ந்து உடனடியாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக […]
புதுச்சேரி: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும். இதன் காரணமாக இன்று (டிச,17) முதல் 19ம் தேதி வரை தமிழக மற்றும் புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் குறாவளிக்காற்று […]
சென்னை: இயக்குநர் விக்னேஷ் தற்போது ‘லவ் இன்சூரன்ஸ்’ நிறுவனம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி ஜோடியாக நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விக்னேஷ் சிவன் அரசு ஹோட்டலை விலைக்கு கேட்டதாக சர்ச்சை எழுந்தது. மேலும் இது தொடர்பாக நெட்டிசன்கள் மீம்ஸ் போடு கலாய்த்து வந்தனர். தற்பொழுது அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, புதுச்சேரியில் சொத்து வாங்கப் போவதாக சமூக […]
புதுச்சேரி : இன்று புதுச்சேரியில் பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. நாளை புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.12) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஃபெஞ்சல் புயல் கரையை கடைக்கும் போது பல இடங்களில் கனமழை பெய்து புதுச்சேரி வெள்ளக்காடாக காட்சியளித்தது. எனவே, மீண்டும் கனமழை எச்சரிக்கை விடப்பட்ட காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை […]
புதுச்சேரி : ஃபெஞ்சல் புயல் ஒரு தாக்கம் காட்டிவிட்டு தான் சென்றிருக்கிறது என்றே சொல்லவேண்டும். குறிப்பாக, இந்த புயல் புதுச்சேரிக்கு பக்கத்தில் கரையை கடந்த காரணத்தால் அங்கு கனமழை பெய்து வெள்ளம் ஏற்ப்பட்டது. பல பகுதிகளில் நீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது என்று கூட சொல்லலாம். இதனையடுத்து, புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுகள் மூலம் ரூ.5,000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என ஏற்கனவே புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், நிவாரணம் வழங்குவதற்காக […]
சென்னை : வங்கக்கடலில் உருவாகி வடதமிழகத்தில் கரையை கடந்த ஃபெஞ்சல் புயலின் தாக்கம் ஒருவாரம் ஆகியும் இன்னும் பல்வேறு பகுதிகளில் தொடர்கிறது. இன்னும் வடதமிழகத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாமலே இருக்கின்றனர். இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கும் சூழலும் நிலவி வருகிறது. மழைநீர் வடிந்த பிறகு நேற்று முதல் கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டு செயல்பட தொடங்கின. புதுச்சேரி மாநிலத்தில் நிவாரண […]
சென்னை : ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தற்போது தான் வடதமிழக மாவட்டங்களில் சற்று மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இன்னும் பல்வேறு இடங்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்குவது குறித்த தகவல்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து வருகின்றனர். விழுப்புரம் : புயலின் தாக்கம் குறையாத காரணத்தால், விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இன்றும் (டிசம்பர் 5) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை […]
புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் பெருமழை பாதிப்பில் சிக்கிய புதுச்சேரியில் அதிகம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் நிவாரண முகாம்களாக உள்ள புதுச்சேரியில் முகாம்களாக செயல்படும் 17 பள்ளிகளுக்கு மட்டும் நாளை (05.12.2024) விடுமுறை என்றும், ஏனைய அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் நாளை இயங்கும் என்று கல்வி துறை அறிவித்துள்ளது. அரசு தொடக்கப் பல்லி, தவளக்குப்பம். அரசு தொடக்கப் பள்வி, காக்காயன்தோப்பு. […]
சென்னை : தமிழகம், புதுவையில் கோரத் தாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயல் காரணமாக, பல்வேறு பகுதிகளின் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நேற்று அரசூர் பகுதியில் சென்னை – திருச்சி நெடுஞ்சாலை போக்குவரத்து ஸ்தம்பித்தது. நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இந்நிலையில், அந்தப் பகுதியில் இன்று காலை போக்குவரத்து சீரானது. ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், தி.மலை வட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் […]