சென்னையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் நாளை NMMS தேர்வு நடைபெற இருப்பதால் இந்த உத்தரவை கல்வித்துறை பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் மத்திய கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத் தேர்வு (NMMS) நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான தகுதித் தேர்வு நாளை நடைபெற இருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு […]
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது.இதனால் அவருக்கு கோயிலை கட்ட கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.1,100 கோடியில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயிலில் நாளை மறுநாள் பிற்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டைவிழாவை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் உள்ள ரிலையன்ஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு ஜனவரி 22-ம் […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வங்கிகளுக்கு இன்று முதல் ஜனவரி 17-ஆம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால், மொபைல் வங்கி சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் இதற்கு ஏற்றார் போல் தங்களின் பணத்தேவையை திட்டமிட்டு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பொங்கலை கொண்டாடுவதற்கு நேற்று முதல் பொதுமக்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். குறிப்பாக, இந்த […]
தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடரும் மழை பெய்து வருகிறது. அதன்படி அதிகாலை முதலே கிண்டி, அடையாறு, வேளச்சேரி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் தொடர்மழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்படி, தொடர்மழை காரணமாக கடலூர், மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம்,திருவண்ணாமலை திருவாரூர் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 22) -ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் பெய்து வரும் கடும் மழை,வெள்ளத்தால் ஒட்டுமொத்த மக்களும் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து பரிதவிக்கிறார்கள். அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 செ.மீ மழை ஒரே நாளில் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பல்வேறு […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் நிலையில் அதி கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு அதி கனமழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புகள், சாலைகளில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியுள்ளது. இடைவிடாத கனமழையால் மக்களின் இயல்பு வாழ்கை முடங்கியுள்ளது. வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து சேவை தடைப்பட்டுள்ளது. திருநெல்வேலி ரயில் நிலையம் மற்றும் […]
அதிகனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.19) விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென் தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் வரலாறு காணாத அதி கனமழை பெய்து வருகிறது. ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்துள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 செ.மீ மழை ஒரே நாளில் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. நெல்லை, தூத்துக்குடி, […]
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று காலை முதல் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இதற்கிடையில், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 […]
மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் கடந்த 4-ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்தன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கி நின்ற மழை வெள்ளம் தற்போது வடிந்து வருவதால் ஒரு வார விடுமுறைக்கு பிறகு இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டது. இந்நிலையில், பூவிருந்தவல்லி மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளி, அறிஞர் அண்ணா ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, சரோஜினி வரதப்பன் மேல்நிலைப்பள்ளி மற்றும் சின்ன போரூரில் உள்ள […]
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன்காரணமாக இந்த 4 மாவட்டங்களிலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. சென்னை பொறுத்தவரை மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை.. இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை – முதல்வர் ஸ்டாலின் சென்னையில் மீட்புப்பணிகள் […]
சென்னையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் (டிச.08) விடுமுறையை அறிவித்தது தமிழ்நாடு அரசு. மழை பாதிப்பு எதிரொலியாக சென்னையில் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை நிவாரண மற்றும் மீட்பு பணிகள் சில இடங்களில் நடைபெற்று வருவதால் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல் தொடர்ந்து 5-ஆவது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு […]
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழைநீர் சூழ்ந்திருப்பதால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த சில நாட்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னையில் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது – அமைச்சர் […]
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக வடதமிழகத்தில் பல்வேறு இடஙக்ளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மிக்ஜாம் புயலானது சென்னையில் இருந்து 250கிமீ தொலைவில் நிலை கொண்டு 5 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தலைமை செயலர் […]
சென்னை உட்பட 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கு இடையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்து இரண்டு மணி நேரத்திற்கு மிதமான முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு வருகின்ற 13, 25 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஞாயிற்று கிழமை (நவம்பர் 12ஆம் தேதி) தீபாவளி பண்டிகை என்பதால், அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீபாவளி தின விடுமுறையினை முன்னிட்டு, அதற்கு முன்னதாக பொதுமக்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் கிடைக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளும் திறந்து இருக்கும் என்ற முடிவில், மக்களுக்கு பொருட்கள் […]
வரும் 23, 24 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் நிலையில், அதற்கு முன்பதாக சனி, ஞாயிறு அரசு விடுமுறை வருகிறது. எனவே நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருவதால் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருப்பர். எனவே பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, தமிழக அரசு சார்பில் இன்று முதல் சிறப்பு […]
பஞ்சாப்பில் இன்று விடுமுறை அறிவித்தது அம்மாநில அரசு. பஞ்சாப் மாநிலத்தில் இன்று (டிசம்பர் 28) விடுமுறை அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்கள், வாரியங்கள்/கார்ப்பரேசன்கள், வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குரு கோவிந்த் சிங்கின் தாய் மற்றும் இரண்டு இளைய மகன்களின் தியாகத்தை நினைவுகூரும் ஃபதேகர் சாஹிப்பில் மூன்று நாள் ஷஹீதி ஜோர் மேளாவை குறிக்கும் வகையில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்திற்கு ஜனவரி 2-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு ஜனவரி 2-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறைக்கு பதில் ஜனவரி 7-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி – ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் மார்கழி மாதத்தில் 20 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி […]
வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. பள்ளி மாணவர்களுக்கு தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. வரும் 23-ஆம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடைகிறது. இந்த நிலையில், வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், ஜனவரி 2-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் துவங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை. மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அறிவித்துள்ளார். ஏற்கனவே புயல் மற்றும் கனமழை காரணமாக தமிழ்நாட்டில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கள்ளக்குறிச்சியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.