விழுப்புரத்தில் 10 நாட்களுக்குப் பின் பள்ளிகள் மீண்டும் திறப்பு!
விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த 7 அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
![tn school](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/tn-school.webp)
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் 10 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. வெள்ளத்தில் புத்தகங்கள் அடித்துச் செல்லப்பட்டிருந்தால், இன்று அவை பள்ளியிலேயே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட அம்மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டு வந்தது. தற்போது நிலைமை சிறிது சீரடைந்திருக்கும் நிலையில், பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
ஆனால், அம்மாவட்டத்தில் ஒரு மேல்நிலைப்பள்ளி உட்பட 7 அரசுப் பள்ளிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதை அடுத்து அந்த 7 பள்ளிகளில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
- திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்தில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி
- சிறுமதுரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி
- மரக்காணம் ஒன்றியத்தில் ஓமந்தூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி
- நாரவாக்கம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி
- கந்தாடு அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளி
- வண்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி
- கீழ்சித்தாமூர் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளி