சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சன்னி தியோல், காஜல் அகர்வால் ஆகியோரும் துணை வேடங்களில் நடிக்கின்றனர். சுமார் ரூ.835 கோடி செலவில் இந்த படத்தை நிதேஷ் திவாரி இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான், ஹான்ஸ் சிம்மர் […]
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக இருக்கும் என்றும், இதற்கு ராஜன் வகையறா என தலைப்பு வைக்கப்படவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு தனுஷ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், வடசென்னை உரிமை அவரிடம் உள்ளதால் ரூ.20 கோடி வரை கொடுத்து NOC சான்றிதழ் பெற வேண்டுமென அவர் தரப்பில் டிமாண்ட் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வந்தது. இந்த […]
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று நடைபெறுகிறது. இந்த விழா, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறும். விருது பரிந்துரைகளுக்கான வாக்களிப்பு ஜனவரி 12 முதல் ஜனவரி 16 வரை நடைபெறும். பரிந்துரைகள் ஜனவரி 22 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்த முறை நிகழ்ச்சியை கோனன் ஓ’பிரையன் தொகுத்து வழங்குவார். இந்த நிலையில், 2025 ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள […]
சென்னை : குணச்சித்திர நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் நெற்றிரவு காலமானார். இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன் கொண்டவர் சீனிவாசன். தமிழ் திரையுலகில் மூத்த நடிகராக அறியப்பட்ட இவர், தனது இயல்பான நடிப்பு மற்றும் தனித்துவமான பாணியால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். ஜி.சீனிவாசனின் மறைவு குறித்து தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். ஜி.சீனிவாசனின் உடல் சென்னையில் உள்ள […]
சென்னை : போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும் ஜெஸ்வீர் என்ற கெவின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு கடந்த மே 22ம் தேதி அன்று சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே பெருமளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து தொடங்கியது. இந்த சம்பவம் சென்னை காவல்துறையின் கவனத்தை ஈர்த்தது, மேலும் இதனைத் தொடர்ந்து விசாரணை […]
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் தற்போது கிருஷ்ணாவை போலீசார் கைது செய்து, ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வைத்து கிருஷ்ணாவிடம் விடியவிடிய போலீஸாா் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிந்தடிக்டிக்ஸ் எனப்படும் உயர் ரகபோதைப்பொருளை உபயோகப்படுத்தும் அளவுக்கு தனது உடல்நிலை இல்லை எனவும் இரைப்பை பிரச்சனை உள்ளதாகவும், அதிர்ச்சியான தகவல்களை […]
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் 15 மணி நேரத்துக்கும் மேலாக விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கில், நடிகர் ஸ்ரீகாந்த் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். உடல்நலப் பிரச்னைக்கு சிகிச்சை எடுத்து வருவதால் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை, பிரதீப் குமாருக்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஸ்ரீகாந்த் உடன் மட்டுமே நட்போடு பழகி வந்தேன் என ஏற்கெனவே கூறியிருந்தார். […]
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்கழுகுப்பட நடிகரான கிருஷ்ணாவும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தற்போது, இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஸ்ரீகாந்த் விசாரணைக்கு ஆஜரானபோது போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதால் அவர் கைது செய்யப்பட்டார். அந்த வகையில், நடிகர் கிருஷ்ணாவை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பின்னர், […]
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ”மார்கன்” திரைபடம் ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ‘மார்கன்’ படத்தின் புரோமோஷன் நேற்று மதுரையில் நடைபெற்றது. இந்த புரோமோஷன் நிகழ்வு முடிந்த பின், செய்தியாளர் சந்திப்பின் போது, சினிமாவில் போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்த கேள்விக்கு விஜய் ஆண்டனி பதிலளிக்கையில், “போதைப்பொருட்கள் பயன்பாடு பல நாட்களாகவே […]
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து அவர் போதைப்பொருட்களை வாங்கி பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, போலீஸ் விசாரித்ததில் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்து சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் விசாரித்து வந்தது. முதலில் விசாரணையின் போது, போதைப் பொருள் பயன்படுத்தியதை நடிகர் ஸ்ரீகாந்த் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர், நடிகர் ஸ்ரீகாந்துக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்படி, […]
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் என்பவரிடம் இருந்து போதைப்பொருள் வாங்கியதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரசாத் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஸ்ரீகாந்த்தை மருத்துவ பரிசோதனைக்காக போலீஸ் அழைத்து சென்றுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே கானா நாட்டைச் சேர்ந்த […]
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய ‘ஜன நாயகன’ திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும் தனது கடைசி படம் என்று விஜய் முன்னதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், தளபதி விஜய்யின் கடைசி படம் குறித்த பேசிய மலையாள நடிகை மமிதா பைஜுவின் சமீபத்திய வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அயர்லாந்தில் நடந்த கேரள கார்னிவலில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக மமிதா பைஜு கலந்து கொண்டார். மலையாளத்தில் பேசிய நிகழ்ச்சி […]
சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள ‘ஜன நாயகன்’ திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு இன்னும் ஒரு நாட்களே உள்ள நிலையில், ஜன நாயகன் பற்றிய அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். விஜய் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் அவரது விடைபெறும் கடைசி படம் என்று கூறப்படும் இந்த படம், தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெரிய படங்களில் ஒன்றாகும். இந்த படத்தில் பிரேமலு பட நடிகை மமிதா பைஜுவும் ஒரு […]
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு, அவர் “அஜித் குமார் ரேசிங்” என்ற ரெஸ் பைக் அணியைத் தொடங்கினார், அதன் பின்னர் அவர் துபாய் 24H தீரஜ் மற்றும் இத்தாலியின் முகெல்லோ 12H போன்ற பந்தயங்களில் பங்கேற்றுள்ளார். நடிகர் அஜித்குமார் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அளித்த பேட்டியில், அஜித் தனது பயணம் மற்றும் விமர்சகர்கள் குறித்து மனம் திறந்து பேசினார். […]
கர்நாடகா : இயக்குநர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அகண்டா 2: தாண்டவம்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அசாத்திய மாஸ் காட்சிகளின் மூலம் பிரபலமடைந்த தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் 2021-ல் வெளியான அகண்டாவின் அடுத்த பாகமான இப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பாலையாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வெளியிடப்பட்டுள்ள இந்த டீசரிலும் அதிரடி மாஸ் காட்சிகள் உள்ளன. ஒரு சூலத்தை கழுத்தில் சுத்த விட்டு குண்டாசுகளை பாலையா செதறவிடும் காட்சி […]
தர்மபுரி : பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ சென்ற கார் விபத்தில் சிக்கியதாகவும், இதில் அவரது தந்தை உயிரிழந்ததாகவும், அவரது தாய் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தருமபுரி – பாலக்கோடு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனது குடும்பத்தினருடன் சென்ற கார் விபத்தில் சிக்கியதில் நிகழ்விடத்திலேயே அவரது தந்தை சிபி சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த நடிகர் சைன் சாக்கோ மற்றும் அவரது தாய் படுகாயத்துடன் மருத்துவக் […]
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் கர்நாடக மாநிலம் தவிர உலகம் முழுவதும் இன்று வெளியானது. மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் 37 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் ஒளிபரப்ப அரசு சிறப்பு அனுமதியை அளித்துள்ளது. இந்த […]
சென்னை : சுப்ரமணியபுரம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த முருகன் என்ற மொக்கைச் சாமி (78) மாரடைப்பால் காலமானார். குணச்சித்திர நடிகர் முருகன் , “மொக்கைச் சாமி” என்ற பெயரால் பரவலாக அறியப்பட்டவர், நடிகரின் மரணத்திற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், சில தகவல்கள் மாரடைப்பு அல்லது உடல்நலக் குறைவு காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கின்றன. மேலும், இறுதிச் சடங்கு மற்றும் பிற விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு […]
சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என கூறியதற்கு கமல் மன்னிப்பு கேட்குமாறு கர்நாடகாவில் கண்டன குரல் எழுந்தது. ஆனால், கமல் மன்னிப்பு கேட்கவில்லை. இதனால், கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு கமல் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தக்லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கமல்ஹாசனின் தக் லைப் திரைப்படத்தை சுமூகமாக வெளியிட […]
கர்நாடகா : கடந்த மே 24 அன்று சென்னையில் நடந்த தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்து தான் கன்னடம் பிறந்ததாக நடிகர் கமல்ஹாசன் பேசியது கன்னட அமைப்பினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. இதனால், அவர் நடித்த தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள தக் லைஃப் படத்தின் வெளியீட்டை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், […]