சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில் நடித்து கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் கார் பந்தயங்களிலும் ஈடுபட்டு வருகிறார். கார் பந்தயத்தில் ஈடுபட்ட அவர் அடிக்கடி விபத்தில் சிக்குவதும் உண்டு. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் துபாயில் நடந்த கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக துபாயில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்தப் பயிற்சியின்போது, அவர் ஓட்டிச் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பாதையில் […]
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் ஆம்புலன்ஸ் மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே, கரணம்பேட்டை பகுதியில் உள்ள திருப்பூர்-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்ததாக தெரிகிறது. ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட நோயாளி முருகன் – கல்யாணி என்ற தம்பதியினர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர். மேலும், ஆம்புலன்ஸ் […]
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம், கூரை இடிந்து விழுந்ததில், இதுவரை 184 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். டொமினிக்கன் ரிபப்ளிக் நாட்டில் நிகழ்ந்துள்ள இந்த கோர விபத்தில் சிக்கி பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. இந்த இரவு விடுதியில் இசைக்கலைஞர்கள், அரசியல்வாதிகள், தொழில்முறை விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர். […]
டொமிங்கோ : டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 79 பேர் உயிரிழந்தனர். கூரை இடிந்து விழும் முன்னர், அந்த விடுதியில் Rubby Pérez’s என்பவரது இசை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. இந்த துயரச் சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, மேடையில் நடனக் கலைஞர்கள் நடனமாடுவதையும், பார்வையாளர்கள் ஆரவாரம் செய்வதையும் காணொளியில் படம்பிடித்து கொண்டிருந்தனர். கூரை திடீரென இடிந்து விழுந்ததால் கொண்டாட்டமே […]
பர்ஹைட் : ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் என்கிற பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2 லோகோ பைலட்டுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிகாலை 3.30 மணிக்கு விபத்து ஏற்பட்டு ரயில்கள் தீப்பிடித்ததால் 2 பேரும் உடல் கருகி உயிரிழந்தாக கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மின்சார உற்பத்தி […]
திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கே.ஜி.கண்டிகை என்ற பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில், படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர், அருகிலுள்ள திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள போலீசார், விபத்திற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், டிப்பர் லாரி அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் விபத்திற்கு […]
குளித்தலை : கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், சம்பவ இடத்திலேயே காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் ஓட்டுநர் ஆகிய 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்தின்போது, அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதியதில் அப்பளம்போல் நொறுங்கிய கார். ஒரத்தநாடு கீழையூரில் உள்ள அக்னி வீரனார் கோயிலுக்கு சென்ற போது, இந்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது. காரில் வந்தவர்கள் கோவை […]
குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள கால்வாய் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 55 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்த்தில் உயிரிழந்த அனைவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கோரப்பட்டுள்ளது. இந்த பேருந்தானது வழக்கமாக குவாத்தமாலா பகுதியில் சான் கிறிஸ்டோபல் அகாசாகஸ் குவாஸ்ட்லான் மற்றும் குவாத்தமாலா நகரத்திற்கு இடையே செல்லும் என்றும், பிப்ரவரி 10ஆம் தேதி உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில் […]
உத்தரப் பிரதேசம் : பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 4ஆவது முறையாக, மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செக்டார்-18 பகுதியில் VVIPக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் முழுவதும் தீக்கிரையாகின. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், பக்தர்கள் யாரேனும் உள்ளே சிக்கியுள்ளனரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மின்கசிவு காரணமாக பக்தர்கள் இருந்த கூடாரத்தில் தீ பற்றிருக்கலாம் என்று முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, திடீரென தீ விபத்து […]
உத்தரப்பிரதேசம் : உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூரில் சரக்கு ரயில்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பாம்பிபூர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பின்னால் வந்த மற்றொரு சரக்கு ரயில் மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், ரயிலின் பாதுகாப்பு பெட்டியும், என்ஜினும் தடம் புரண்டுள்ளன. சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், பிரயாக்ராஜில் இருந்து ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைத் […]
வாஷிங்டன் : அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ரீகன் விமான நிலையத்தில் பயணிகள் விமானம், ராணுவ ஹெலிகாப்டர் மீது மோதிய விபத்தில் வெடித்து சிதறியது. ரொனால்டு ரீகன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றபோது நடுவானில் ஹெலிகாப்டர் மீது மோதி ஆற்றில் விழுந்தது. பயணிகள் விமானம் மீது மோதிய ஹெலிகாப்டர் அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. மேலும், விமானத்தில் 60 பேர் இருந்தனர். கன்சாஸ் மாகாணத்தில் உள்ள விசிட்டாவில் இருந்து நாட்டின் தலைநகர் வாஷிங்டன் நோக்கி சுமார் […]
பாக்பத் : உத்தரபிரதேசம் மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் நடைபெற்ற ஆன்மிக திருவிழாவில் ‘லட்டு பிரசாதம்’ வாங்க சென்ற பக்தர்கள் மீது ,மரத்திலான மேடை இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து பாக்பத் மாவட்ட மாஜிஸ்திரேட் கூறுகையில், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 20 பேர் முதலுதவிக்குப் பிறகு வீடு திரும்பினார், மீதமுள்ளவர்கள் சிகிச்சையில் உள்ளனர் என்று கூறியுள்ளார். இதையடுத்து, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த சம்பவத்தை […]
ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த விபத்தில் 5-க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். புஷ்பக் ரயிலில் தீப்பற்றியதாக பரவிய வதந்தியை நம்பி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து, `அபாய அலாரம்’ அடித்ததால், மும்பையில் இருந்து 400 கிமீ தொலைவில் உள்ள பச்சோராவிற்கு அருகில் உள்ள மஹேஜி மற்றும் பர்தாட் நிலையங்களுக்கு இடையில் ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர், வேகமாக ரயில் பெட்டியில் இருந்து […]
ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இன்று மாலை 5 மணியளவில் ரயிலில் தீ விபத்து என பரவிய தகவலால் புஷ்பக் ரயிலில் இருந்தவர்கள் அபாயச் சங்கிலியை இழுத்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது கீழே இறங்கி தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது, எதிரே வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் […]
ஆந்திரா: திருச்சியை சேர்ந்த 40 பேர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது, சித்தூர் மாவட்டம் கங்கசாகரம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது சுற்றுலா வேன் மோதி பயங்கர விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை சித்தூரில் நடந்துள்ளது. இந்த விபத்தில், திருச்சியைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர். தற்போது, காயமடைந்தர்களில் 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் […]
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் – வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அதிகாலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. போங்கிர் பைபாஸ் சாலை அருகே ஹைதராபாத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியதில் இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்தது என அதிகாரிகள் தகவலை தெரிவித்தனர். இந்த விபத்தில், உயிரிழந்தது ஒரு […]
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முங்கேலி மாவட்டத்தின் சரகான் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலையில் கட்டப்பட்டு வரும் மின் உற்பத்தி நிலையத்தில் சிம்னியை நிறுவும் பணிகள் நடைபெற்றன. அப்போது எதிர்பாராத விதமாக சிம்னி கவிழ்ந்ததில் 30-க்கும் மேற்பட்டோர் அடியில் […]
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி சரசரவென்று சுழன்று நின்றது. விபத்து நடந்த உடனே, காரில் இருந்து அஜித் வெளியேறும் காட்சி அனைவருக்கும் நிம்மதி அளித்தது. விபத்தின் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த விபத்தில் அவருக்கு எந்த காயமும் இல்லை என தெரியவந்துள்ளது. ஆம், அவரது போர்ஷே 992 சேதமடைந்தது, ஆனால் அவர் காயமின்றி வெளியே […]
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி சர்ரென சுழன்று… சுழன்று நின்றது. உடனே அங்கிருந்த முதலுதவி செய்பவர், அவரை பாதுகாப்பாக மீட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அவருக்கு எந்த காயமும் இல்லை என தெரியவந்துள்ளது. நெஞ்சை பதற வைக்கவும் அந்த கோர காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பான வீடியோக்களை பார்த்து அஜித்தின் […]
கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். புல்லுப்பாறை அருகே வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. இன்று காலை 6.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி காயமடைந்தவர்களை மீட்டனர். இதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மாவேலிக்கரையில் இருந்து கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தை […]