‘ரெயில் விபத்து அதிர்ச்சி, வேதனையளிக்கிறது’- தவெக விஜய் இரங்கல்.!

கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்ததற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Vijay - Train Accident

சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே இன்று காலை நடந்த மிகுந்த பரிதாபமான விபத்தில், பள்ளி வேன் ஒன்று ரயிலுடன் மோதி மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.  இந்த விபத்து குறித்து முதற்கட்ட விசாரணையில், பள்ளி வேன் ரயில்வே கேட் இல்லாத பாதையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ரயிலுடன் மோதியதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், முன்னதாக, இந்த கோர சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். அந்த வகையில், தற்போது தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது இரங்கல் செய்தியில், ”செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த செய்தி, அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது.

விபத்து நடைபெற்ற பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க முடிவெடுத்தும் அதற்கு ஒரு வருடமாக மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்கவில்லை எனச் செய்திகள் வெளியாகி உள்ளன. விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்