சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவிருக்கிறார். கட்சியின் முதல் மாநாட்டில் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய நிலையில் அதிமுக குறித்து பேசவில்லை. அத்துடன், ஆட்சிக்கு வந்தால் கூட்டணி கட்சிக்கும் பங்கு உண்டு எனவும் பேசியிருந்தார். அதிமுகவை அவர் விமர்சித்து பேசாத நிலையில், அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் சிலரும் விஜயின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்தனர். எனவே, தேர்தலில் 2 […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது விமர்சனங்களையும், பாஜகவுக்கு எதிரான விமர்சனங்களையும் தனது மேடை பேச்சுக்களில் வெளிப்படுத்தி வருகிறார். இப்படியான கருத்தியல் கொண்ட அவரை இந்தியா கூட்டணியில் இணைய சொல்லி காங்கிரஸ் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. ஏனென்றால், விஜய் எதிர்க்கும் திமுக, இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியானது தமிழகத்தில் […]
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவிருக்கிறார். கட்சி தொடங்கியதில் இருந்தே தொடர்ச்சியாக தன்னுடைய விமர்சனத்தையும் அரசுக்கு (திமுக) எதிராக முன் வைத்து வருகிறார். குறிப்பாக, த.வெ.க மாநாட்டில் நேரடியாக திமுகவை விமர்சனம் செய்து பேசியிருந்தார். அதனை தொடர்ந்து சமீபத்தில் கூட எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே…. என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு […]
சென்னை: முன்னாள் முதல்வரும் அதிமுக தலைவருமான எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. எம்ஜிஆரை மிஞ்சி பல சாதனைகளை சில முதல்வர்கள் செய்திருந்தாலும், இன்றைக்கும் மக்களை கவர்ந்த முதல்வராகவே எம்ஜிஆர் இருக்கிறார். இந்நிலையில், எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் வாயிலாக பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், தவெக தலைவர் விஜய் ‘தமிழக அரசியலின் அதிசயமானார்’ என எம்ஜிஆரை புகழ்ந்து கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், […]
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, விசிக தலைவர் திருமாவளவன், கேரளா முதல்வர் பினராயி விஜயன், பசுமைத்தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி உள்ளிட்ட பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அவர்களை தொடர்ந்து த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பொங்கல் வாழ்த்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது […]
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என கூறிவிட்டு தற்போது அதனை செய்யாமல் திமுக அரசு மக்களை ஏமாற்றிவிட்டதாக த.வெ.க தலைவர் விஜய் குற்றம்சாட்டியிருந்தார். தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அவர் தெரிவித்திருந்ததாவது ” கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று […]
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதியில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?” என்கிற கேள்வியை எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ” I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் என்றால் நிச்சியமாக நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று இருப்போம்.இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதைப்போல, திமுக ஆட்சி இருந்த வரை தமிழ்நாட்டுக்குள் நீட் தேர்வு […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு பெற உள்ளது. இன்னும் அக்கட்சி மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பதவிகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகாமல் உள்ளது. தவெக கட்சி முதலாம் ஆண்டு விழா நடைபெறும் போது கட்சி நிர்வாகிகளை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனை கூட்டம் அக்கட்சி […]
சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இன்று டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதோடு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பும் வெளியானது. டெல்லி தேர்தல் நடைபெறும் அதே நாளான பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொத்தி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை […]
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட உடன் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். முதலில் தேசிய கீதம் பாடப்படவில்லை. தேசிய கீதத்தை தமிழக அரசு தொடர்ந்து அவமதிக்கிறது என ஆளுநர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதே போல, தமிழக அரசு சார்பில் கூறுகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் எப்போதும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்படுவது மரபு என்றும், சட்டப்பேரவை முடியும் போது […]
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தவெக தலைவர் விஜய், தன் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை, சென்னை பூக்கடையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு வழங்கிய பெண் நிர்வாகிகளை போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட பெண் நிர்வாகிகளை சந்திக்க சென்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், புஸ்ஸி ஆனந்த் கைதை கண்டித்து, தவெகவினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். பின்னர், கைது […]
சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியிருக்கிறார். அதில், “யாரிடம் நாம் பாதுகாப்பு கேட்பது? ஆட்சியாளர்களை கேட்டு பயனில்லை. எல்லா சூழலிலும் நான் உங்களுடன் நிற்பேன். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். இதை நாம் இணைந்தே சாத்தியப்படுத்துவோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அந்த கடிதத்தை துண்டு பிரசுராமாக அக்கட்சியினர் வழங்கி வந்ததை பார்வையிட புஸ்ஸி ஆனந்த் வந்ததார். […]
சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் அனுமதியின்றி நோட்டீஸ் விநியோகித்ததாக வந்த புகாரின் பேரில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் கைது செய்துள்ளனர். அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் இன்று எழுதியிருந்தார். அதில், “யாரிடம் நாம் பாதுகாப்பு கேட்பது? ஆட்சியாளர்களை கேட்டு பயனில்லை. எல்லா சூழலிலும் நான் உங்களுடன் நிற்பேன். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். இதை நாம் […]
சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் சம்பவத்தை குறிப்பிட்டு இன்று காலையில் தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ஆளும் அரசை விமர்சித்தும், பெண்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள் என்றும் கூறியிருந்தார். இதனை அடுத்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை விஜய் இன்று பகல் 1 மணியளவில் சென்னை ராஜ்பவனில் வைத்து சந்தித்தார். இந்த சந்திப்பில், 3 பக்கம் கொண்ட மனு அளிக்கப்பட்டது. அதில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும், அனைத்து இடங்களிலும் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் தொடர்பாக கூடுதல் விசாரணை வேண்டும் எனவும், சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும், பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமை பிரச்சினைகளை தடுப்பது குறித்து நடவடிக்கையை தீவிரபடுத்துவதற்கு பேசுவதற்கு ஆளுநரை அவர் சந்திக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அந்த தகவலை தொடர்ந்து இன்று மதியம் 1 மணிக்குஆளுநரை சந்தித்து […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை மதியம் 1 மணி அளவில் சந்தித்து பேசவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திடீரென விஜய் ஆளுநரை சந்திக்க முக்கியமான காரணம் பற்றிய தகவலும் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. சந்திப்புகான முக்கிய காரணமே கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் பற்றி பேசுவதற்காக தான். இந்த சம்பவத்தில் ஏற்கனவே ஞானசேகரன் என்பவரை போலீசார் […]
சென்னை : அண்மையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் கிண்டி பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்ததை குறிப்பிட்டு பலரும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்தும், ஆளும் அரசை விமர்சனம் செய்தும் […]
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, சென்னை கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். இதனையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் (37) என்பவரை ஏற்கனவே காவல்துறை கைது செய்து மற்றொரு நபரை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்திற்கு எதிர்கட்சித் […]
சென்னை: தந்தை பெரியாரின் 51வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் பெரியாரின் மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், பெரியாரின் நினைவு தினத்தையொட்டி, அவரது படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தினார். சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் பெரியார் உருவப்படத்திற்கு மலர்தூவி விஜய் மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், “சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை […]
வேலூர் : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய், கடந்த அக்டோபர் மாதம் தனது கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அதனை அடுத்து, அம்பேத்கர் புத்தக வெளியிட்டு விழாவில் பேசினார். மேற்கண்ட 2 மேடை பேச்சுக்களை தவிர்த்து ஒரு சில நிகழ்வில் மட்டுமே மக்களை நேரடியாக சந்தித்துள்ளார் விஜய். இந்நிலையில் மக்களை நேரடியாக எப்போது சந்திப்பார் என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்தது. விஜய் சுற்றுப்பயணம் எதுவும் செல்வாரா? விக்கிரவாண்டி மாநாடு போல, […]