சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதற்கு அந்த துறையை சேர்ந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்து பேசினார். அதனைத்தொடர்ந்து இன்று, சட்டசபையில் இன்று, எரிசக்தித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க உள்ளது. விவாதத்திற்கு பதில் அளித்து, அமைச்சர் செந்தில் பாலாஜி, தன் துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். கத்தோலிக்க […]
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ், புனித வெள்ளி பிரார்த்தனையில் கூட கலந்துகொள்ளவில்லை. இதனால், அவரின் உடல்நிலை மீண்டும் மோசமானதாக கூறப்பட்ட நிலையில், இன்று காலை 7:35 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது. போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலகம் முழுவதும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இவரது மறைவுக்கு பிரதமர் மோடி முதல் தமிழ்நாடு அரசியல் […]
வாடிகன் : கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும் உலகின் 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களின் ஆன்மீகத் தலைவருமான போப் பிரான்சிஸ் (Pope Francis) தனது 88வது வயதில் இன்று காலமானார். போப் காலமானார் என்ற செய்தியை வத்திக்கான் கேமர்லெங்கோ கார்டினல் கெவின் ஃபெரெல் அறிவித்தார். இந்த ஆண்டு பிப்ரவரியில், இருதரப்பு நிமோனியாவால் (double pneumonia) பாதிக்கப்பட்டு, ஐந்து வாரங்கள் மருத்துவமனையில் இருந்தார். மார்ச் 23-ம் தேதி அன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இவர், இரண்டு மாதங்கள் ஓய்வு எடுத்தார். […]
உத்தரகாண்டு : மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட பனிச்சரிவில் 57 தொழிலாளர்கள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பனிச்சரிவில் சிக்கிய அந்த தொழிலாளர்கள் எல்லை சாலைகள் அமைப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்தனர். அப்போது, திடீரென பனிச்சரிவு ஏற்பட அவர்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அறிந்து உடனடியாக மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகள் தொடங்கப்பட்டு, இதுவரை 46 […]
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இப்படி இருக்கையில், பட்டாசு தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் நிலையில், அதை அலட்சியமாக கையாளுகின்றது என்று கூறி, தமிழக […]
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடி வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தின் போது, அங்கிருந்த 4 அறைகள் முற்றிலும் தரைமட்டமான நிலையில், இதுவரை 6 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புத்தாண்டின் துவக்கத்திம் முதல் வாரத்திலேயே நிகழ்ந்த இந்த சோக சம்பவம் பட்டாசு தொழிலாளர்களை துயரில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து வேலைக்கு […]
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பைய நாயக்கன்பட்டியில் சாய்நாத் என்கிற பெயரில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. இன்று காலை வழக்கம் போல ஆலை இயங்கி வந்த நிலையில், மூலப்பொருட்களில் உராய்வு ஏற்பட்டு திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசுகள் வெடி சிதறியதில் ஆலையில் இருந்த 4 அறைகள் முற்றிலும் தரைமட்டமாக வெடித்து சிதறியது. உடனடியாக சத்தம் கேட்டு […]
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது. ஏற்கனவே, சிறுவனின் தாய் ரேவதி (35) உயிரிழந்த நிலையில், சிறுவன் தேஜூக்கு (9) தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தேஜ் மூளைச்சாவு அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 4ம் தேதி நடந்த இச்சம்பவத்தில் தாய் ரேவதி உயிரிழந்த நிலையில், கூட்ட நெரிசலுக்கு காரணம் என கூறி, அல்லு அர்ஜுன் மீது […]
ஜார்ஜியா : நாட்டில் உள்ள மலை விடுதியான குடாரியில் உள்ள உணவகத்தில் 11 இந்தியர்கள் விஷவாய்ப்பு தாக்கி உயிரிழந்துள்ளனர். அவர்கள் இறந்தது இந்திய தூதரகத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, இவர்கள் உண்மையில் விஷய வாய்ப்பு தாக்கி உயிரிழந்தார்களா? அல்லது வேறு எதுவும் பிரச்சினையா என்பது பற்றி ஜார்ஜியாவின் உள் விவகார அமைச்சகம் பரிசோதனை நடத்த தொடங்கியது. அப்போது உயிரிழந்தவர்களின் உடலில் காயங்கள் அல்லது வன்முறை எதுவும் நடந்த அறிகுறிகள் எதுவும் இல்லை. இதனை தொடர்ந்து உள்ளூர் ஊடகங்கள், போலீஸ் […]
சென்னை : பல்லாவரம் அருகே கழிவுநீர் கலந்த நீரை குடித்ததாக கூறப்பட்டு 23 பேர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிநீரை அருந்திய அவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்த சூழலில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் பம்மல் பகுதியை சேர்ந்த திருவேதி (57) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உண்மையில் குடிநீரில் கழிவு நீர் கலந்துள்ளாதா? என்பது பற்றிய […]
சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஃபெஞ்சல் புயலானது தற்போது கரையை கடந்து கொண்டிருக்கிறது. மாமல்லபுரம் – காரைக்கால் பகுதிக்கு இடையே கரையை கடந்து வரும் புயலால் அப்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இன்று இரவுக்குள் முழுவதுமாக புயல் கரையை கடந்துவிடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பல இடங்களில் சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் சில […]
பெங்களூர் : தீபாவளி இரவில் நடந்த துயர சம்பவத்தில் 32 வயது சபரீஷ் என்ற நபர் உயிரிழந்தார். இவருடைய இறப்புக்குக் காரணம் அவர்கள் நண்பர்கள் கொடுத்த தேவையில்லாத சவால் தான் காரணம். ஏனென்றால், தீபாவளி பண்டிகை அன்று சபரீஷ் தனது நண்பர்களுடன் இணைந்து கொண்டாடி வந்தார். அப்போது அவருடைய நண்பர்கள் ஆபத்தான முறையில் ஒரு சவாலைச் செய்யச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். மதுபோதையில் அவருடைய நண்பர்கள் பெரிய ரக பட்டாசு ஒன்றைக் கீழே வைத்துக்கொண்டு அதன்மீது கார்ட் போர்ட் […]
திருப்பதி : மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் லாரி ஒன்று தக்காளிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, சந்திரகிரி – திருப்பதி இடையே உள்ள பாக்கராப்பேட்டை மலை பாதையில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் வந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து சம்பவத்தில் லாரி கார் மீது மோதியதால் கார் நொறுங்கவும் செய்தது. இதன் காரணமாக, காரில் இருந்த 4 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலே உடல் நசுங்கி […]
குஜராத் : 4 நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழையால் குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக பேய் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள், ஏரிகள் போன்ற நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாது பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்களைத் தொடர்ந்து மீட்பு பணியினர் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு […]
நீலகிரி :பயணிகளை காப்பாற்றி விட்டு தன் உயிரை காப்பாற்ற முயற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த அரசு பேருந்து ஓட்டுநரின் குடும்பத்திற்கு தமிழக அரசால் ரூ.3 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கெங்கரை கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப் (வயது 43). அரசு பேருந்து ஓட்டுநரான இவர், இன்று காலை 6 மணி அளவில் கூட்டாடாவிலிருந்து கோத்தகிரி நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். பேருந்து கோத்தகிரியை நெருங்கும்போது, சாலை ஓரம் மின் கம்பி ஒன்று அறுந்து […]
விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த மாயத்தேவன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த மாயத்தேவன் பட்டியில் ‘ஜெயந்தி பட்டாசு’ என்ற பெயரில் ஆலை ஒன்று இயங்கி வருகிறது.ஜெயராஜ் என்பவருக்குச் சொந்தமான இந்த ஆலையில் சுமார் 60-கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இன்று காலை பணிக்காக வந்த ஊழியர்கள், வழக்கம்போல் அவர்களின் வேலைகளை பார்த்து வந்துள்ளனர். அப்போது, பட்டாசு தயாரிப்பதற்கான […]
அபுஜா : நைஜீரியாவில் பள்ளி இடிந்து விழுந்து 22 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிளாட்டூ மாகாணத்தில் புஸா புஜ்ஜி பகுதியில் செயின்ட்ஸ் அகடாமி என்ற பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. திடீரென நேற்று இந்த பள்ளி இடிந்து விழுந்து கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும், 154 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதாகவும், 132 பேர் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]
தெலுங்கானா : கஜ்வெல் நகரில் அதிக வேகமாக பைக்கில் சென்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரஜ்னாபூரைச் சேர்ந்த காட்டு ஷ்ரவன்குமார் யாதவ் (18), தனது நண்பர் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த புசுலூரி திரிநாத் (18) என்பவருடன் சிவாஜி சிலையிலிருந்து கஜ்வெல் விவேகானந்தர் சதுக்கம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றுகொண்டு இருந்தார்கள். திரிநாத் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றபோது, ஷ்ரவன்குமார் பின்னால் அமர்ந்திருந்தார்.அப்போது, ரோட்டை கடந்த கனகயா என்ற நபர் […]
லோனாவாலா : இடத்தில உள்ள புஷி அணையிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் “தடைசெய்யப்பட்ட பகுதியில்” அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் 5 பேர் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. புனே நகரின் ஹடாப்சரைச் சேர்ந்த லியாகத் அன்சாரி மற்றும் யூனுஸ் கான் ஆகியோரின் குடும்பங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 19 பேர் ஒன்றாக சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை மழைக்கால சுற்றுலாவுக்காக லோனாவாலாவுக்கு தனியார் வாகனத்தில் வந்தனர். சமீபத்தில் ஜூன் 22 அன்று திருமணம் செய்து கொண்ட ஒரு […]
கள்ளக்குறிச்சி : மாவட்டம் கோட்டைமேடு பகுதிக்கு அருகே உள்ள கருணாபுரத்தில் 4 பேர் திடீரென அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 4 பேரும் கள்ளச்சாராயம் அருந்தியதால் தான் உயிரிழந்தனர் என பரவலான குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் “கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததால் 4 பேர் உயிரிழந்ததாக கூறுவது தவறான தகவல் என்றும், உயிரிழந்த ஒருவற்கு குடிபழக்கம் இல்லை. அவர்கள் வயிற்று வலி, வலிப்பு […]