கிருஷ்ணகிரி : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். அதிலும், நிர்வாகி கரு.பிரபாகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அது, தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, “14 ஆண்டுகளாக நாங்கள் நாம் தமிழர் கட்சியில் உள்ளோம். ஈழ மக்களை காப்பாற்ற கட்சி ஆரம்பித்தோம், தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுத்தோம், பலமுறை […]
சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை இன்று நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நகல் புழல் சிறைக்கு அனுப்பப்பட்டதும் அவர் இன்று ஜாமீனில் வெளியே வரவுள்ளார். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததை வரவேற்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அவரை வரவேற்று பதிவிட்டிருந்தார். அதில், ‘ சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். […]
புதுக்கோட்டை : சத்தியமூர்த்திநகரில் அமைந்துள்ள மகாராஜ் மகாலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த மாவட்டக் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் சீமான், தவெக கட்சியின் தலைவர் விஜய் குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசி இருக்கிறார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ‘விஜய், மக்கள் தலைவர்களான பெரியார் மற்றும் அம்பேத்கருக்கு மாலை அணிவித்ததை எப்படி பார்க்கிறிர்கள்?’ என சீமானிடம் கேள்வி […]
சென்னை : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழக வெற்றி க் கழகம் கட்சியுடன் 2026 தேர்தலில் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு , ” நான் தனித்து தான் போட்டியிடுவேன். என்கூட சேர வேண்டும் என நினைப்பவர்கள் தான் அதனை முடிவு ” செய்ய வேண்டும் என விஜய் பெயரை கூட குறிப்பிடாமல் சீமான் ஆவேசமாக பதில் அளித்துள்ளார். இதுநாள் வரையில், தம்பி விஜய் எனக் கூறிக்கொண்டிருந்த சீமான், […]
சென்னை : நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆவடி காவல் ஆணையரகத்திற்கு மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பரப்புரையின் போது தமிழக முன்னாள் முதல்வரான மு.கருணாநிதியை ‘சண்டாளன்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி இழிவுபடுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் பாடல் பாடி இருந்தார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இதன் விளைவாகச் […]
திருவாரூர் : புதிதாகக் கட்சி தொடங்கிய விஜய்க்காகப் பேசுவதற்கு அண்ணனாக நான் இருக்கிறேன் எனப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது சீமான் பேசி இருக்கிறார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி திருக்கொள்ளிக்காடு அருகே அமைந்துள்ள “அருள்மிகு பொங்கு சனீஸ்வரர்” ஆலயத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் இன்று சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக மீனவர்கள், உக்ரைன் போர் மற்றும் விஜய் கட்சியின் கோடி அறிமுகத்தைப் பற்றியும் சீமான் பேசி இருந்தார். தமிழக மீனவர்கள் பற்றிய கருத்து ..! தமிழக மீனவர்களைப் பற்றிய கேள்வி எழுந்த நிலையில், […]
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சி உடன் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு மற்றும் நட்புறவான பதில்களையே அளித்து வருகின்றனர். விஜயின் அரசியல் பயணம் ஆரம்பமாகும் முன்னரே அவர் கட்சி பற்றிய செய்திகள் தலைப்பு செய்திகளாக மக்கள் முன் கடந்து செல்கிறது. திரையில் உச்சநட்சித்திரமாக கோலோச்சி கொண்டிருக்கும் வேளையில் விஜயின் “தேர்தல் அரசியல்” முடிவு பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. சென்னை பனையூரில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் […]
கிருஷ்ணகிரி : பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு உதவிய 2 நண்பர்கள், மேலும் ஒரு ஆசிரியை கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார்ப் பள்ளி ஒன்றில் அண்மையில் நடைபெற்ற போலியான என்சிசி முகாமில் சுமார் 17 பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கலந்து கொண்ட 13 வயது பள்ளி மாணவிக்கு போலி என்சிசி பயிற்சியாளரால் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை […]
கிருஷ்ணகிரி : பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் உட்பட இதுவரை 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் அண்மையில் பள்ளி மாணவிகளுக்கு என்சிசி பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சியில் சுமார் 17 மாணவிகள் தனியார் பள்ளியில் தங்கி பயிற்சி பெற்றுள்ளனர். மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்கும் நபராக நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் செயல்பட்டு வந்துள்ளார். புகார் ஏற்க மறுப்பு : இந்த பயிற்சியின் போது 8ஆம் […]
சென்னை : தமிழக புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளது முதல், பிரதமர் மோடி ரக்ஷா பந்தனுக்கு வாழ்த்து தெரிவித்தது வரையில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த செய்திக் குறிப்பில் காணலாம். கலைஞர் 100 நாணயம் : மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரில் 100 ரூபாய் நாணயத்தை நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். புதிய தலைமைச் செயலாளர் […]
மதுரை: நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட துணை செயலாளராக பொறுப்பில் இருந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர். இன்று காலை பாலசுப்ரமணியன் வழக்கம் போல நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை, சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதியில் இன்று காலை பாலசுப்பிரமணியன் நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்த மர்ம கும்பல் கூரிய ஆயுதங்களால் அவரை கொடூரமாக தாக்கியுள்ளது. இந்த பயங்கர தாக்குதல் சம்பவத்தில் […]
விக்கிரவாண்டி : நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் வாக்குகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. கடந்த ஜூலை-10 ம் தேதி (புதன்கிழமை) அன்று விக்கிரவாண்டி தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்திருந்தது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டார். இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா வேட்பாளர்களாக போட்டியிட்டனர். நடைபெற்று முடிந்த இந்த தேர்தலின் வாக்கு எணிக்கையானது இன்று காலை […]
மு.க.ஸ்டாலின் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின். கடந்த ஜூலை-10ம் தேதி (புதன்கிழமை) அன்று விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலானது நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டார். இன்றைய நாள் வாக்கு எண்ணிக்கையின் போது திமுக சார்பில் வேட்பாளராக நின்று அன்னியூர் சிவா தற்போது 50,000வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார். இதனால், திமுகவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானதென்ற கூறலாம், இதன் காரணமாக […]
விக்கிரவாண்டி தேர்தல் : விக்கிரவாண்டியில் நடைபெற்று முடிந்துள்ள இடைத்தேர்தலுக்கான 19-வது சுற்று வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்ட நிலையில், திமுக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலானது கடந்த ஜூலை-10ம் தேதி (புதன்கிழமை) அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா வேட்பாளர்களாக போட்டியிட்டனர். நடைபெற்று முடிந்த இந்த தேர்தலின் வாக்கு எணிக்கையானது இன்று காலை (ஜூலை-13) 8 மணி […]
சென்னை: அவதூறு பேச்சின் ஆதித்தாய் திமுக தான் என்றும், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கூறிய பல்வேறு கருத்துக்களையும், விமர்சனங்களையும் சீமான் இன்று செய்தியாளர்களிடம் முன்வைத்தார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றியும், திமுக பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அப்போது குறிப்பிட்ட பட்டியலினம் பற்றி குறிப்பிட்டதாக கூறி, திருச்சி சைபர் கிரைம் காவல்துறையினரிடம் […]
விக்கிரவாண்டி தேர்தல் : விக்கிரவாண்டியில் நடைபெற்று பெரும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில்வெற்றி கணிப்பு அதிகம் இருப்பதால் முதல்வர் முகஸ்டாலின் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார். கடந்த ஜூலை-10ம் தேதி (புதன்கிழமை) அன்று விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலானது நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா வேட்பாளர்களாக போட்டியிட்டனர். நடைபெற்று முடிந்த இந்த தேர்தலின் வாக்கு எணிக்கையானது இன்று காலை (ஜூலை-13) 8 மணி அளவில் தொடங்கி […]
இடைத்தேர்தல் முடிவுகள்: நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திமுக வேட்பாளரான அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். கடந்த ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் இன்று (ஜூலை 13) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கையானது தொடங்கி நடைபெற்று வருகின்றது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா இந்த தொகுதியில் […]
இடைத்தேர்தல் முடிவுகள்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். கடந்த ஜூலை 10ஆம் தேதி நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் இன்று (ஜூலை 13) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகின்றன. திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், பாமக சார்பில் சி.அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயாவும் போட்டியிடுகிறார்கள். இதில் முதற்கட்டமாக […]
இடைத்தேர்தல் முடிவுகள்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் கடந்த ஜூலை 10ஆம் தேதி (புதன் கிழமை) அன்று நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிட்டுள்ளார். பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிட்டுள்ளார். அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது. மொத்தம் 29 வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 2.37 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க […]
தூத்துக்குடி: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு தலைவருக்கான பண்பு இல்லை என அமைச்சர் கீதாஜீவன் விமர்சனம் செய்யப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் பேசுகையில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றியும், திமுகவினர் பற்றியும் கடுமையாக விமர்சித்தார். மேலும் இதுபற்றி பாடல் ஒன்றையும் குறிப்பிட்டார். இதனை அடுத்து, சாதிய ரீதியில் கலைஞர் கருணாநிதியை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்ததாக கூறி திருச்சி சைபர் கிரைம் பிரிவு […]