இந்த வயசுல உனக்கு ஐஸ்வர்யா ராய் ஜோடியா? சரத்குமாரை கலாய்த்த சீமான்!
சரத்குமார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘பரமசிவன் பாத்திமா’ பட இசைவெளியிட்டு விழாவில் கலகலப்பாக பேசியுள்ளார்.

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சென்னையில் நடைபெற்ற ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது தனது நெருங்கிய நண்பரும் நடிகருமான சரத்குமாருடனான நகைச்சுவையான உரையாடலைப் பகிர்ந்து, கலகலப்பான பேச்சால் கூட்டத்தை மகிழ்வித்தார்.
இந்த விழாவில், சரத்குமாரை “அண்ணன்” என்று அன்பாக அழைத்து, அவருடனான நெருக்கமான நட்பை வெளிப்படுத்தினார். மேலும், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியானபோது விமான நிலையத்தில் நடந்த ஒரு உரையாடலை நினைவு கூர்ந்து, விழாவிற்கு வருகை தந்தவர்களுக்கு சிரிப்பலையை ஏற்படுத்தினார்.
இது குறித்து பேசிய அவர் “நான் எப்போதும் சரத்குமாரை ‘அண்ணன்’ என்றுதான் கூப்பிடுவேன். ஏனென்றால், நாங்கள் அந்த அளவுக்கு ரொம்பவே நெருக்கம், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியான சமயத்தில், விமான நிலையத்தில் சரத்குமாரைச் சந்தித்தேன். அப்போது, நான் அவரிடம் நகைச்சுவையாக, “அண்ணா, உனக்கு இந்த வயதுல ஐஸ்வர்யா ராய் ஜோடி கேக்குது!” என்று கிண்டல் செய்தேன்.
அதற்கு அண்ணன் சரத்குமார் ” உனக்கு பொறாமைடா!” என்று சிரித்துக்கொண்டே பதில் அளித்தார். அது மட்டுமின்றி, உடலை நன்றாக வைத்துக்கொண்டால், எந்த வயதிலும் சாதிக்கலாம்,” என்று உற்சாகமாகக் கூறியதை சீமான்பகிர்ந்துகொண்டார். இந்த கதையை கேட்டவுடன் விழாவிற்கு வந்திருந்தவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
மேலும், ‘பரமசிவன் பாத்திமா’ படத்தினை குடிமகன்’, ‘பெட்டிக்கடை’, ‘பகிரி’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இசக்கி கர்வண்ணன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விமழும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.