பால் வேண்டும், மோர் வேண்டும் ஆனா… “கால்நடை மனநிலை” பற்றி சீமான் பேச்சு!
மாடு மேய்ப்பதை அவமானப்படுத்தினால் மாயோன் கிருஷ்ணனை அவமானப்படுத்துவதற்கு சமம் என சீமான் பேசியுள்ளார்.

மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான், கால்நடை வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் கால்நடைகளின் முன்னிலையில், “ஆடு மாடு மேய்ப்பது அவமானம் அல்ல, வெகுமானம்,” என்று எழுச்சியுடன் கூறினார்.
மாநாட்டில் பேசிய சீமான், “திருமால், பெருமாள், கண்ணன் ஆடு மாடு மேய்தனர். இயேசு, நபிகள் நாயகம் ஆடு மாடு மேய்தனர். கால்நடைகள் நம் உணர்வுடன் கலந்தவை. மாட்டுக்கு பொங்கல் வைத்தவன் தமிழன்,” என்று கூறி, கால்நடை வளர்ப்பு தமிழர் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியிருப்பதை எடுத்துரைத்தார். இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் முக்கிய புனிதர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டதை சுட்டிக்காட்டி, இதை அவமானமாகக் நினைப்பது தவறு என்றார். “இது கௌரவமான தொழில், நம் பொருளாதாரத்தையும் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது,” என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் “பால், மோர், வெண்ணை, சீஸ் வேண்டும். ஆனால், நாங்கள் பிளாஸ்டிக், குப்பைகளை சாப்பிடுகிறோம். எங்களுக்கு வைக்கோல் உள்ளதா?” என்று உணர்ச்சியுடன் கேட்டார். மேய்ச்சல் நிலங்கள் குறைவதால் கால்நடைகள் தீவனமின்றி தவிப்பதையும், பிளாஸ்டிக் உண்ணும் அவலநிலையையும் அவர் எடுத்துரைத்தார்.
“விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு விலை இல்லை, கால்நடைகளுக்கு தீவனம் இல்லை,” என்று குற்றஞ்சாட்டி, அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.“ஆடு மாடு வளர்ப்பை அரசு வேலையாக மாற்ற வேண்டும்,” என்று சீமான் வாதிட்டார். மேய்ச்சல் நிலங்களைப் பறிப்பதை நிறுத்தி, கால்நடைகளுக்கு தேவையான தீவனத்தை உறுதி செய்ய வேண்டும் என்று கோரினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!
July 10, 2025