“தவெக ஐடி விங் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.,” தொண்டர்களுக்கு விஜய் ‘வீடியோ’ அட்வைஸ்!
நமது ஐடி விங் ஒழுக்கமான ஐடி விங் என பெயர் வாங்க வேண்டும் என்று தவெக நிர்வாகிகளுக்கு அக்கட்சித் தலைவர் விஜய் வீடியோ வாயிலாக அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த பயிற்சி கூட்டமானது ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகிய தவெக முக்கிய நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் சமூக வலைதளங்களை எவ்வாறு பயன்படுத்துவது. கட்சி கொள்கை மற்றும் செயல்பாடுகளை எவ்வாறு மக்கள் மத்தியில் கொண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த பயிற்சி கூட்டத்தில் தவெக தலைவர் வீடியோ வாயிலாக தனது அறிவுரைகளை கட்சியினருக்கு வழங்கினார். அதில், ” எல்லாரும் எப்படி இருக்கீங்க? உங்களை நேரில் வந்து சந்திக்க வேண்டும் என்று தான் திட்டமிட்டேன். பிறகு வீடியோ கால் வரலாம் என்று பார்த்தேன். அவை இயலாத காரணத்தால் இந்த வீடீயோவை பதிவு செய்து அனுப்பியுள்ளேன்.
நமது சமூக வலைதள படை தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய படை என கூறுகிறார்கள். நீங்கள் வெறும் சமூக வலைதள ரசிகர்கள் அல்ல. நீங்கள் நமது கட்சியின் சமூக வலைதள தொண்டர்கள். அனைவரது மத்தியிலும் நமது ஐடி விங் நிர்வாகிகள் மிகவும் ஒழுக்கமானவர்கள் எனப் பெயர் எடுக்க வேண்டும். எல்லோரும் அப்படி சொல்லனும். அதனை மனதில் வைத்து அனைவரும் வேலை செய்யுங்கள். கூடிய சீக்கிரம் நான் உங்களை சந்திக்கிறேன். வெற்றி நிச்சயம்.” என வீடியோ கால் வாயிலாக அறிவுரை கூறியுள்ளார்.
தலைவர் ஸ்பீச் 🔥😍✅#தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/Y54TJwSH9U
— RamKumarr (@ramk8060) April 19, 2025