டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதில், முக்கியமாக சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதுபற்றி மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்ததாக நடத்தப்படும் போது நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவித்தார். மக்கள் தொகை […]
தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மேலும், கட்சியின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனை நியமித்து பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார். மேலும், கட்சியின் பொருளாளராக எல்.கே.சுதீஷ் என தேமுதிகவின் முக்கிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்து செயற்குழு கூட்டத்தில் அறிவித்தார் . மேலும், கடலூரில் […]
சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்றுக்கொண்டு நேற்று அஜித், குடும்பத்துடன் சென்னை திரும்பினார். பத்ம பூஷன் விருது வென்ற அஜித்திற்கு விமானத்திலேயே அங்குள்ளவர்கள் கேக் வெட்டி சிறிய பாராட்டு விழா நடத்தினார். அதனை அடுத்து சென்னை விமான நிலையம் வந்த […]
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு 2, DD ரிட்டர்ன்ஸ் படங்களில் நடித்தார். அந்த படமும் ஹிட்டாகி விடவே, தற்போது அதேபாணியில் DD Next Level எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படமும் முந்தைய படங்களை போலே காமெடி மற்றும் திரில்லர் வகையை சார்ந்து எடுக்கப்பட்டுள்ளது. தங்கள் வழக்கமான காமெடி கூட்டணியான மொட்டை ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன், லொள்ளு சபா ஜீவா ஆகியோருடன் இந்த […]
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்னதாகவே, கட்சியின் இளைஞரணி செயலாளராக மறைந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் நியமனம் செய்யப்பட்டதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார். அதனை தொடர்ந்து தேமுதிக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், தேமுதிக தலைவர் […]
சென்னை : கடந்த ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தவெக சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள தவெக தலைவர் விஜய் கோவை வந்தபோது தவெக தொண்டர்கள் விஜய் ‘ரோடு ஷோ’ சென்றார். அப்போது தொண்டர்கள் சிலர் அவர் சென்ற வேன் மீது ஏறி விழுந்து விஜயை பார்க்க முண்டியடித்து கொண்டு சென்றனர். பலர் அவரது வேன் அருகே தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றனர். விஜய் வந்த […]
மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில் பயின்று வந்த 4 வயது சிறுமி ஆருத்ரா பள்ளி வளாகத்தில் திறந்து கிடந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று அச்சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனியார் பள்ளி தாளாளர் திவ்யாவை கைது செய்தனர். மேலும், 6 […]
சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் நடவடிக்கைகளுக்காக முழுசுதந்திரம் அளித்திருப்பதாக பிரதமர் மோடி பேசியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா மைய பகுதியில் உள்ள ரிதுராஜ் ஹோட்டலில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் தீ […]
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்து உள்ளது. நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் பதம்பூஷன் விருது பெற்றார் நடிகர் அஜித்குமார். அதன் பிறகு ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பஹல்காம் தாக்குதல் குறித்த தனது வருத்தத்தை பதிவு செய்தார். அவர் கூறுகையில்,”பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன், […]
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு முடிந்தவுடனேவாக்கு எண்ணிக்கையும் உடனடியாக தொடங்கிவிடும். 343-ல் 172 தொகுதிகளை வென்று இருந்தால் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றலாம். கனடாவில் 2015 முதலே லிபரல் கட்சி தான் ஆட்சியில் இருந்து வருகிறது. பல்வேறு அரசியல் மாற்றத்தை அடுத்து கடந்த 2024 டிசம்பரில் அப்போதைய பிரதமர் ட்ரூடோராஜினாமா செய்ய, அதன் பிறகு லிபரல் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட மார்க் […]
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய சட்டமசோதாவை தாக்கல் செய்தார். அதில், கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, கட்டாய கடன் வசூலால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அந்த நிறுவனம் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு உள்ளிட்ட சட்டதிருத்தங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. அந்த சட்ட மசோதாவில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த மக்கள், […]
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை பயின்று வந்துள்ளது. இக்குழந்தை இன்று பள்ளியில் தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருக்கும் போது பள்ளி வளாகத்தில் திறந்து கிடந்த தண்ணீர் தொட்டியில் தவறுதலாக விழுந்துவிட்டது. உடனடியாக அக்குழந்தை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை ஆருத்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.இதனை அடுத்து காவல்துறையினர் பள்ளி தாளாளர் திவ்யா பத்ரி […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக 7வது முறையும் ஆட்சியை கைப்பற்றும். இதுவரை திராவிட மாடல் ஆட்சியை கண்ட தமிழ்நாடு, 2026 தேர்தலில் வெற்றி பெற்று திராவிட மாடல் 2.O-வை காணும்.” என பேசியிருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த கூற்றை விமர்சிக்கும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு […]
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4 வயது பெண் குழந்தை பயின்று வருகிறார். இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு வந்த குழந்தை, தனது நண்பர்களுடன் விளையாடியுள்ளார். அப்போது பள்ளி வளாகத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுமி ஆருத்ரா தவறி விழுந்துள்ளார் எனத் தெரிகிறது. தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமியை உடனடியாக மீட்டு பள்ளி நிர்வாகத்தினர் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுமிக்கு […]
ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த சம்பவம் இன்று உலக அரங்கில் பேசு பொருளாக மாறியுள்ளது. 18 வருட ஐபிஎல்-ல் அதிவேக 100 அடித்த முதல் இந்தியர் என்ற ஆகப்பெரும் சாதனையை நேற்று அசால்டாக செய்து காட்டிவிட்டார் வைபவ். ஐபிஎல்-ல் 2வது அதிவேக 100 என்ற சாதனையும் இவர் பெற்று விட்டார். சர்வதேச டி20 போட்டி தொடர்களில் இளம் வயதில் 100 அடித்த […]
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பான மானிய கோரிக்கைகள் மீது அத்துறை அமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, இதுவரை நடைபெற்ற மானிய கோரிக்கைகள் அதற்கான பதில்கள் மீதான பதிலுரையை பேரவையில் கூறினார். அப்போது திமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள் என நீண்ட பட்டியலை அவர் வாசித்தார். அதில், திமுக ஆட்சிக்கு 6வது முறையாக வந்துள்ளது. […]
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது. சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. சமூக வலைதளம் வாயிலாக பெண்களை ஏமாற்றி அவர்களை ஒரு கும்பல் பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதனை வீடியோவாக பதிவு செய்த கொடூரம் அரங்கேறியதாக செய்திகள் வெளியாகின. இந்த வழக்கின் தீவிரம் தமிழகம் முழுக்க தீயாய் பரவியது. இவ்வழக்கில் 8 பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் […]
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட வழக்கில், சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் இருக்கிறார். அவர் ஜாமீன் மனுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு பதியப்பட்டது. ஜாமீனில் வெளியே வந்த பிறகு மீண்டும் அமைச்சர் பதவி ஏற்ற செந்தில் பாலாஜிக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடந்த வாரம் அதிருப்தி தெரிவித்து இருந்தது. […]
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும் NCERT பரிந்துரைக்கும் பாடத்திட்டங்கள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அவ்வப்போது சில பாடத்திட்ட மாற்றங்களை NCERT பறித்துரைத்து வருகிறது. அதன்படி, 7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்கள் பற்றி இருக்கும் பாடத்திட்டங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக இந்திய பாரம்பரியம், கலாச்சாரம் எனக் குறிப்பிட்டு இந்திய அரசர்கள் பற்றிய பாடத்திட்டமும்,மகா கும்பமேளா பற்றிய பாடத்திட்ட […]