பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!
இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் 4 விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும், பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டன.

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை அடுத்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
நேற்று முந்தின இரவு போலவே நேற்று இரவும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதனை இந்திய ராணுவம் தடுத்து பாக். ட்ரோன்களை அழித்தது. இருந்தும் காஷ்மீரில் ஃபெரோஸ்பூர் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் சிலர் காயமடைந்தனர்.
பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானை போல பொதுமக்களை குறிவைக்காமல், ராணுவ தளவாடங்களையே இந்திய ராணுவம் குறிவைக்கிறது. தற்போது வெளியான தகவலின்படி பாகிஸ்தானில் 4 விமானப்படை தளங்கள் இந்திய ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளது .
மேலும், காஷ்மீர் ஸ்ரீநகருக்குள் நுழைந்த 2 பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை இடைமறித்து தாக்கி அழித்துள்ளது. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.