காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஹாஷிம் மூஸா பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் பாரா கமாண்டோ(Para SF) என NIA தெரிவித்துள்ளது. தீவிரவாதிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 15 பேரிடம் நடத்திய விசாரணையில் இத்தகவல் உறுதியானது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத சம்பவத்தை அரங்கேற்ற அவர் தீவிரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்டதாகவும் NIA தெரிவித்துள்ளது. ஹாசிம் மூஸாவை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பிற்கு பாகிஸ்தான் […]
டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா வருவது வாடிக்கையாகி வருகிறது. அதனை தடுக்க அரசும் உரிய முயற்சி எடுத்துவந்தாலும் அந்த போலி செய்திகள் பரவல் குறைந்தபாடில்லை. அப்படியான ஒரு செய்தி தான், பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்திய ராணுவத்திற்கு நிதி கேட்டு ஒரு போலி செய்தி வாட்ஸ்அப்பில் பரவியுள்ளது. இந்திய ராணுவத்திற்கான ஆயுதங்களை நவீனபடுத்தவும், இந்திய ராணுவத்தை மேம்படுதவும் நன்கொடை அளிக்கும் திட்டத்தை […]
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கிற்கு தலைமை தங்குவதற்காக அக்கட்சி தலைவர் விஜய் கோவை வந்துள்ளார். அவரை வரவேற்க தவெக தொண்டர்கள் கோவை விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லை பதற்றம் சற்று அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவு காஷ்மீர் பகுதியில் இந்தியா எல்லைக்குள் […]
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் எதிரெதிர் நாடுகளுக்கு எதிராக பல்வேறு தடை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்படியான சூழலில் நேற்று நள்ளிரவு திடீரென பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் பகுதியில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லை மீறி இந்திய எல்லைக்குள் 2வது நாளாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதனை அடுத்து இந்திய ராணுவமும் பாகிஸ்தான் ராணுவம் மீது பதில் தாக்குதல் […]
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய ராணுவமும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து பந்திப்போராவில் கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன. அப்பொழுது, பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை அடைந்ததும், துப்பாக்கிச் சண்டை நடந்தது. பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) உயர்மட்ட தளபதி அல்தாஃப் லல்லி கொல்லப்பட்டார் என்று தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி […]
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நேற்று உதம்பூரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார், இருவர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள […]
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் பாகிஸ்தான் பிடியில் சிக்கி இருப்பது கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்பூர் (Ferozpur) இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இந்திய எல்லை பாதுகாப்பு படை (Border Security Force) வீரராக பணியாற்றி வரும் பி.கே.சிங் எனும் ராணுவ வீரர், இந்திய எல்லை கடந்து பாகிஸ்தான் எல்லை பகுதிக்கு […]
சென்னை : 92வது இந்திய விமானப்படைத் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ள நிலையில், இந்திய விமான படை சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், விமானப் படையினர் இதுவரை மேற்கொண்ட சாதனைகள், வெற்றிகள் ஆகியவற்றை பறைசாற்றும் விதமான தகவல் அதில் இடம்பெற்றுள்ளன. நாளை நடைபெறும் சாகச நிகழ்ச்சியில் 15 லட்சம் வரை பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. Rehersals of Chennai Airshow programme held […]
வங்கதேசம் : இந்தியாவின் சுதந்திரம் , பாகிஸ்தான் பிரிந்து சென்ற காலத்திற்கு பின்பிருந்து, 1971க்கு முன்பு வரையில் வங்கதேசம் என்ற நாடு இல்லை. வங்கதேச நாட்டின் பெயர் கிழக்கு பாகிஸ்தான். தற்போதைய பாகிஸ்தான் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்தது வங்கதேசம். 1971 கலவரம் : அந்த சமயம், 1970ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் (வங்கதேசம்) நடைபெற்ற தேர்தலில் ஷேக் முஜ்புர் ரஹ்மான் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதை அடுத்து ‘வங்கதேசம்’ தனி நாடு கோரிக்கையை இந்தியாவின் ஆதரவோடு முன்னிறுத்தினார். இந்திய […]
வயநாடு நிலச்சரிவு : தொடர் கனமழை காரணமாக கேரளாவில் பெய்த கனமழையால் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சிலர் இந்த நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுவதால் 5-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வயநாட்டின் சூரல் மலை பகுதியில் இருந்து 4 மீட்டர் தொலைவில் இருந்த படவேட்டிக்குன்னுவில் பகுதியில் 4-வது நாளாக இந்திய ராணுவபடை மீட்பு பணியில் ஈடுபட்டு கொண்டு […]
கேரளா : கடந்த ஜூலை-29 ம் தேதி பெய்த கனமழையின் காரணமாக வயநாட்டில் பல இடங்களில் கடும் நிலச்சரிவானது ஏற்பட்டது. இந்த பயங்கர நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், பலர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். மேலும், பலர் இடிபாடுகள், நிலச்சரிவில் சிக்கி இருக்கின்றனர். அவர்களை மீட்கும் பணியானது 5-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. மேலும், வீடுகள் இடிவதனால், மரங்கள் சாய்வதனால் போன்ற இடையூறுகளால் மீட்பு பணிகள் முடிவுக்கு வராமலே இருக்கிறது. இப்படி ஒரு மோசமான பேரிடரை சந்தித்த […]
வயநாடு நிலச்சரிவு : கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக நேற்று அதிகாலை சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலச்சரிவு , கனமழை பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணியில் மாநில மற்றும் தேசிய மீட்புப்படையினர், இந்திய ராணுவத்தினர், தமிழக மீட்புப்படையினர் என பலர் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் நாளையும் வயநாடு பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை […]
வயநாடு நிலச்சரிவு : கேரளா மாநிலம் வயநாட்டில், முண்டைக்கை பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்ததாக சூரல்மலை பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனை அடுத்து 4 மணி அளவிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் அந்த பகுதிக்கு செல்ல கூடிய பாலங்கள், சாலைகள் முற்றிலும் சேதமடைந்தது. இந்த சூரல்மலை பகுதியில் தான் சுமார் 500 குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர் என்றும், அங்கு […]
ஜம்மு காஷ்மீர்: இந்திய ராணுவ வீரர்கள் மீது காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் பத்னோட்டா பகுதியில் நேற்று இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுப்பட்டு வந்திருந்த போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் கொண்டும், துப்பாக்கி மூலமும் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இருந்தும், பயங்கரவாதிகளின் திடீர் […]
லடாக்: இந்திய ராணுவ எல்லையான லடாக், தௌலத் பேக் ஓல்டி பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இந்திய ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது டி-72 ரக ராணுவ டேங்க் உடன் அப்பகுதி ஆற்றை கடக்க ராணுவ வீரர்கள் முயற்சித்துள்ளனர். அந்த சமயம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் துரதிஷ்டவசமாக ராணுவ டேங்க் வெடித்ததில் அதில் இருந்த ஒரு ராணுவ அதிகாரி மற்றும் 4 ராணுவ வீரர்கள் என 5 பேர் உயிரிழந்தனர் என […]
மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் மே 10-ம் தேதிக்குள் வெளியேறுவார்கள் என்று அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு இறுதியில் பிரதமர் மோடி இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சென்றிருந்தார். அப்போது, லட்சத்தீவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன், தனது அனுபவங்களையும் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில், மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் அவரது அனுபவங்களை பகிர்ந்திருந்தார். இதற்கு மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் சமூக ஊடகத்தில் இந்தியா மற்றும் பிரதமர் மோடியை […]
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள முன்ஜ் மார்க் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட மூவரும் “தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான எல்.ஈ.டி.யுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அன்மையில் இந்திய ராணுவத்தை வெகுவாக பாராட்டினார். கால்வான் பள்ளதாக்கு, தவாங் என இந்திய எல்லை பகுதியில் அத்துமீறிய அண்டை நாட்டு ராணுவத்தினரை இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து அனுப்பினர். இதனை குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், இந்திய ராணுவத்தை எவ்வளவு பாராட்டினாலும் போதாது என குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில், ‘ எப்போதும் உண்மையை அடிப்படையாக வைத்து தான் அரசியல் செய்ய வேண்டும். பொய்யை […]
இந்திய இராணுவத்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளதாக அருணாச்சல பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன் இந்திய- சீன எல்லையான அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் உள்ள எல்ஏசி எனும் உண்மையான கட்டுப்பாட்டுக்கோடு அருகே இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் நேருக்கு நேர் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த மோதலையடுத்து தவாங் பகுதியில் நிலைமை சுமூகமாகவே இருக்கிறது, யாருக்கும் எந்தவித […]
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் இந்திய ராணுவம் சார்பில், ஒடிசா கடற்கரையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை வீச்சு (ஐடிஆர்) சந்திப்பூரில் இருந்து விரைவு எதிர்வினை மேற்பரப்பு ஏவுகணை (க்யூஆர்எஸ்ஏஎம்) அமைப்பின் ஆறு விமான சோதனைகளை இன்று வெற்றிகரமாக முடித்தன. இந்திய இராணுவத்தின் மதிப்பீட்டு சோதனைகளின் ஒரு பகுதியாக இந்த விமான சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனைகளின் போது, அதிநவீன வழிகாட்டுதல் மற்றும் வார்ஹெட் செயின் உள்ளிட்ட கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் ஆயுத அமைப்பின் பின்-பாயின்ட் […]