ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!
போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம் காரணமாக நேற்றைய போட்டி கைவிடப்பட்டது. இந்தியா – பாக்., இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் டெல்லியில் பிசிசிஐ அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், நடப்பு சீசனில் எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் இதுவரை 57 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்த நிலையில், ஐபிஎல் 2025 போட்டிகளை ஒரு வாரத்திற்கு நிறுத்தவைக்க முடிவுசெய்துள்ளது பிசிசிஐ.
🚨 News 🚨
The remainder of ongoing #TATAIPL 2025 suspended with immediate effect for one week.
— IndianPremierLeague (@IPL) May 9, 2025
இந்நிலையில், புதிய அட்டவணை மற்றும் போட்டி நடைபெறும் இடங்கள் குறித்த அடுத்தகட்ட தகவல்கள் நிலைமையை முழுமையாக மதிப்பீடு செய்த பிறகு அறிவிக்கப்படும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த முக்கியமான கட்டத்தில், பிசிசிஐ தேசத்துடன் உறுதியாக நிற்கிறது. இந்திய அரசு, ஆயுதப் படைகள் மற்றும் நமது நாட்டு மக்களுடன் எங்கள் ஒற்றுமையை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கருத்து தெரிவித்துள்ளது.
At this critical juncture, the BCCI stands firmly with the nation. We express our solidarity with the Government of India, the Armed Forces and the people of our country. The Board salutes the bravery, courage, and selfless service of our armed forces, whose heroic efforts under…
— IndianPremierLeague (@IPL) May 9, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025