சென்னை : ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட் தோனி தலைமையில் விளையாடி கொண்டிருந்த சமயத்தில் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடி வந்தார். பின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு அவரால் தொடக்க ஆட்டக்கார வீரராக விளையாட முடியாத சுழலும் ஏற்பட்டது. அந்த இடத்தை ராசின் ரவிந்திராவுக்கு விட்டுக்கொடுத்து அவரை தொடக்க ஆட்டக்காரராக விளையாட வாய்ப்பு வழங்கினார். அவர் நம்பர் 3-வது இடத்தில் வந்து விளையாடினார். கடந்த சீசனை போலவே, அடுத்த […]
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில் இடம்பெற்ற வீரர்கள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த வீரர்களை எடுக்க அணிகள் போட்டிபோட்டு வருகிறது. அந்த வகையில், ஷ்ரேயாஸ் ஐயர் ஏலத்தில் எடுக்க கொல்கத்தா, டெல்லி, பஞ்சாப் ஆகிய அணிகள் கடுமையாக போட்டிபோட்டது. ஏலத்தில் இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணி ஷ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடி கொடுத்து தங்களுடைய அணிக்கு எடுத்துள்ளது. இந்த […]
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரும் உச்சத்தை தொட்டுள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம், இன்று நடைபெற இருக்கும் ஐபிஎல் மெகா ஏலம் தான். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் நிறைவு பெற்றவுடனயே, அடுத்த ஆண்டு (2025) ஐபிஎல் தொடருக்கான ஏலம் எப்போது என ரசிகர்களின் எதிர்பார்ப்பு தொடங்கிவிட்டது. […]
துபாய் : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25 தேதிகளில் நடைபெறவுள்ளது. முன்னதாக ஐபிஎல் தொடருக்கான தக்க வைப்பு வீரர்களின் பட்டியலை கடந்த அக்.-31 அன்று பிசிசிஐ வெளியிட்டிருந்தது. அதன்படி, ஒவ்வொரு அணியும் தக்க வைத்த வீரர்களின் பட்டியல் ரசிகர்களை அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியது. இதனால், 2 நாட்கள் நடைபெறவுள்ள இந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு என்பது இருந்து வருகிறது. அதன்படி, திங்கள்கிழமை (நவ-24, 25) மதியம் 3.30 […]
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது. இதற்கிடையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமும் நாளை நடைபெறவுள்ளது. இந்த சூழலில், ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான தேதி விவரம் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. அதன்படி, ஐபிஎல் 2025 போட்டியானது மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி 2025 மே 25-ஆம் தேதி முடிக்க பிசிசிஐ […]
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டு அவர் செயல்பட்டு வந்தார். அவர் கேப்டனாக இருந்த அந்த ஆண்டில் பஞ்சாப் அணியின் ஆலோசகராக சேவாக் நியமிக்கப்பட்டார். அந்த சமயம் தான், பல விஷயங்களால் சேவாக் செய்த மோசமான செயல்களால் கிளன் மேக்ஸ்வெல் கடுமையான வேதனையைச் சந்தித்துள்ளார். அப்போது ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்து கிளன் மேக்ஸ்வெல் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இது குறித்து […]
மும்பை : “ஐபிஎல்” தொடர் போலவே “லெஜெண்ட்ஸ் லீக்” தொடங்க வேண்டும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது சாத்தியமான ஒன்று என்றாலும், தற்போது வரை பரிசீலனையில் மட்டுமே இருக்கும் இந்த கோரிக்கை, எப்போது நடைமுறைப்படுத்தப்படும். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களை மீண்டும் எப்போது களத்தில் பார்ப்போம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இருக்கும் ரசிகர்களை விட ஐபிஎல் தொடருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் அதிகம் […]
மதீஷா பத்திரனா : இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரூம், சென்னை அணியின் இளம் நட்சத்திர வீரருமான மதீஷா பத்திரனா செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். இலங்கை அணியின் வேகப்பந்து பவுளரான மதீஷா பத்திரனா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூலம் தொடங்கினார். இதன் காரணமாக அவருக்கு இலங்கை அணியிலும் வாய்ப்புகள் கிடைத்தது, இதனால் தற்போது இலங்கை அணியின் ஒரு நட்சத்திர பவுலராகவே மதீஷா பத்திரனா மாறிவிட்டார் என்றே கூறலாம். மேலும், […]
ரிஷப் பண்ட் : இந்திய அணியில் எப்போதுமே 4-வது அல்லது 5-வது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் களமிறங்கி கலக்கி வந்தார். நடைபெற்று முடிந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பேட்டிங் தரவரிசையில் ரிஷப் பண்ட் 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கினார். அந்த இடத்திலும் களமிறங்கி அவர் அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணி 14 போட்டிகளில் விளையாடி அதில் 7 போட்டிகளை மட்டுமே வெற்றி பெற்று ஃபிளே ஆப் […]
Pat Cummins: அபிஷேக் சர்மா ஈர்க்கக்கூடியவர், உண்மையில் அவர் ஐபிஎலில் கூலாக விளையாடுகிறார் என பேட் கம்மின்ஸ் புகழ்ந்து பேசினார். ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்றைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அதிக ரன்கள் அடித்து ஆர்சிபியின் 11 ஆண்டுகால சாதனையை ஹைதராபாத் அணி முறியடித்துள்ளது . 17ஆவது ஐபிஎல் தொடரின் 8ஆவது போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி அதிரடியாக ஆடி 277 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 278 ரன்கள் என்ற […]
MIvsSRH : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அதிக ரன்கள் அடித்து ஆர்சிபியின் 11 ஆண்டுகால சாதனையை ஹைதராபாத் அணி முறியடித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என்றே சொல்லலாம். ஏனென்றால், அந்த அளவிற்கு சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் மட்டுமே பறந்து கொண்டு இருந்தது. நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் […]
IPL betting : கர்நாடகாவில் IPL பெட்டிங் காரணமாக அதிக கடன் ஏற்பட்டதால் பெண் தற்கொலை செய்துகொண்டார். கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவின் ஹோசதுர்காவில் மாநில நீர்ப்பாசனத் துறையில் உதவிப் பொறியாளரான பணியாற்றி வருபவர் தர்ஷன் பாபு. இவருக்கும், ரஞ்சிதா (வயது 24) எனும் பெண்ணிற்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணமாகியுள்ளது. தர்ஷன் பாபுவுக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபடும் பழக்கம் இருப்பது பின்னர் தான் ரஞ்சிதாவுக்கு தெரிய வந்துள்ளது. இந்த சூதாட்டத்தில் அதிக அளவில் […]
IPL ஐபிஎல் போட்டிகள் என்றாலே சிக்ஸர்கள் பறக்கும் என்றே கூறலாம். இந்த போட்டியை பார்க்க சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்க அது கூட ஒரு காரணம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு ஐபிஎல் போட்டிகள் என்றாலே அதிரடியாக இருக்கும். இந்நிலையில், இதுவரை ஐபிஎல் போட்டிகளில் அதிகம் சிக்ஸர்கள் அடித்த டாப் 10 வீரர்களை பற்றி பார்க்கலாம். அதிகம் சிக்ஸர் அடித்த வீரர்கள் கிறிஸ் கெய்ல் – 357 ரோஹித் சர்மா- 257 ஏபி டி […]
IPL 2024: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான CSK அணியும், டுப்ளெசிஸ் தலைமையிலான RCB அணியும் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி, இந்த முறையும் அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது, விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் எவ்வாறு விளையாடுவார் என்று […]
IPL 2024 : ஐபிஎல் தொடரில் பலவித சாதனைகளை சென்னைய அணியின் கேப்டனான எம்.எஸ்.தோனி செய்திருக்கிறார். அதில் ஒன்று தான் டெத் ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்த வீரர் எனும் சாதனை, டெத் ஓவர் என்பது 16 ஓவர் முதல் 20 ஓவர் வரை கொண்ட 5 ஓவர்கள் ஆகும். இவர் டெத் ஓவர்களில் களமிறங்கினாலே மைதானத்தில் உள்ள ரசிகர்களுக்கு அது வானவேடிக்கையாகவே அமைந்திருக்கும். மேலும், டெத் ஓவர்களில், தோனி களத்தில் இருந்தாலே எதிரணி பவுலர்களும் சற்று […]
IPL 2024 : இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) நட்சத்திர அணியாக திகழ்ந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் மிக சிறப்பான அணியாக பெங்களூரு அணி இருந்தாலும் ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றது இல்லை. கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடிய ஐபிஎல் அணிகளில் ஒரு கேப்டனாக அதிக முறை பெங்களூருவை வீழ்த்திய முதல் […]
ஆண்களுக்கு நடைபெறுகிற IPL (ஐபிஎல்) போலவே பெண்களுக்கும் WPL ( Women’s Premier League ) கடந்த ஆண்டு (2023) முதல் தொடங்கபட்டது. கடந்த ஆண்டு இந்த WPL தொடருக்கு தகுந்த வரவேற்பு கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் கிடைத்தது. இந்த பெண்கள் ஐபிஎல் தொடருக்கு ஒரு தனிப்பட்ட கிரிக்கெட் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இந்நிலையில், WPL-யின் இரண்டாவது சீசன் நாளை மாலை பெங்களூரில் தொடங்குகிறது. இதவும் பிசிசிஐ-யால் (BCCI) தொடங்கப்பட்ட ஒரு தொடராகும். இந்த பெண்கள் ஐபிஎல் […]
இந்தியாவில் வருடம்தோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் தற்போது ஓரிரு மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்க பட்ட நிலையில் தற்போது மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கும் என ஐபிஎல் லீக்கின் தலைவரான அருண் துமால் பத்திரிகையாளர்களிடம் இன்று தெரிவித்து உள்ளார். மலிங்காவை பின்னுக்கு தள்ளிய ஹசரங்கா..? என்ன சாதனை தெரியுமா..? இந்த ஐபிஎல் தொடரின் நடைபெற போகும் முதல் […]
ஆண்டு தோறும் ஏப்ரல், மார்ச் ஆகிய மாதங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில். இதுவரை 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்து இருக்கிறது. 17-வது சீசன் இந்த ஆண்டு மார்ச் மாதம் கடைசியில் தொடங்கும் என கூறப்படுகிறது. கடந்த சீசனில் கோப்பையை வென்ற சென்னை அணி இந்த முறை கோப்பையை வெல்லவேண்டும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். வழக்கம் போல இந்த ஆண்டும் சென்னை அணியை தோனி தான் கேப்டனாக வழி […]
2024 ம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தற்போது கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு ஆலோசகராக செயல்பட்ட கௌதம் கம்பீர் கொல்கத்தா […]